It is a long due... இந்த புத்தகத்தை படித்து ரொம்ப நாள் ஆனாலும் ஏனோ என் கருத்தை பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுவிட்டது. பொதுவாக சுஜாதாவின் புத்தகங்கள் படித்து முடிக்கும்போது ஒரு வித பிரமிப்போடும், கதைகளத்தை பற்றிய புதிய ஞானத்தோடும் முடிப்பது வழக்கம். மாறாக இந்த மூன்று குறுநாவல்கள் (ரோஜா, ஜோதி, 6991) கொண்ட புத்தகத்தை படித்துமுடித்தபோடு ஒருவித சோக உணர்ச்சி நம் மனதை பிசைவதாக உணரமுடிகிறது. Quite unusual of Sujatha. (i)”ரோஜா” - துஷ்டனான ஒரு தொழிற்சங்க தலைவன் துரையால் கற்பழிக்கப்பட்டு இறந்துபோகும் இளம்பெண் லட்சுமியின் கொலையை துப்புதுலக்க வரும் இன்ஸ்பெக்டர் ராஜசேகருக்கு துப்பு கொடுப்பது ஒரு உதிர்ந்த ரோஜா மலர். ஏற்கனவே கற்பழிப்புகளை படித்தால் மன உளைச்சலுக்கு ஆளாகும் என்னை இந்த நாவல் பாதித்ததில் ஆச்சரியமில்லை. குறிப்பாக லட்சுமியின் குருட்டு தாத்தா அவளுடைய கல்யாணத்துக்கால சேர்த்து வைத்த காசு உண்டியலை சிதறடித்து போலீஸிடம் பேசும் காட்சி. கதை தான் இப்படி என்றால் முடிவு இன்னும் அதிர்ச்சிக்குள்ளாக்குவது. (ii) ’6991’ - சிறிய வயதிலிருந்து அழகாக இருக்கும் ஒரே குற்றத்துக்காக பல முறை பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் விமலாவின் மனப்போராட்டத்தை, பயணத்தை அவளுடைய பார்வையிலேயே, அதிக melodrama இல்லாமல் கொஞ்சம் sophisticated urban style-ல் சொல்லியிருக்கிறார். இதில் சுஜாதா ஓரளவுக்கு நம் மனதை தொடவும் செய்கிறார். (iii) ஜோதி - இந்த கதையை பற்றி அதிகம் நினைவில்லை. அதனால் pass. (புத்தக விவரம்: விசா பதிப்பகம், 120 பக்கங்கள், விலை: ரூ. 60/-) - {oshits} வாசகர்கள்!!!