சுஜாதாவின் சிறுகதைகள்
கொஞ்ச நாளாக புதிதாக எதுவும் படிக்கவில்லை. புத்தகம் எதுவும் கொண்டுவரவில்லை, ஏனோ எனது Amazon Kindle-ஐயும் கொண்டுவரவில்லை. என்றோ சுஜாதாவின் சிறுகதைகளை 4Shared வலைதளத்தில் பார்த்தது நினைவுக்கு வந்ததும் அவற்றை பதிவிறக்கம் செய்து வைத்தேன். இருப்பினும் படிக்க நேரமே கிடைக்கவில்லை. ஊருக்கு கிளம்பும் excitement-ல் காலை 4:30 மணிக்கே எழுந்துவிட்டபோதும், விமானத்தில் தூக்கம் வராமல் ஒரே அசதி. திரையில் ஒன்றும் உருப்படியான படங்கள் இல்லாததால் என்ன செய்வது என்று யோசித்தபோது சுஜாதாவின் சில கதைகளை பதிவிறக்கம் செய்திருந்தது ஞாபகத்துக்கு வந்தது. படித்துவிட்டு சுடச்சுட எழுதிய குறுவிமர்சனங்கள். இப்போது வானத்தில் பறக்கும்போது பதிவு எழுதுவது ஒரு வித்தியாசமான அனுபவம். இது இரண்டாவது முறை.