சமீபத்தில் படித்த சுஜாதாவின் (சற்று பெரிய) சிறுகதை தொகுப்புகளில் ஒன்று - “ஐந்தாவது அத்தியாயம்”. இதில் “ஐந்தாவது அத்தியாயம்” மற்றும் “ஓரிரவில் ஒரு ரயிலில்” என இரு கதைகள் இருந்தன. இதில் என்னை கவர்ந்தது “ஓரிரவில் ஒரு ரயிலில்”. சக்திவாய்ந்த இந்து தலைவரான சுவாமி ராஜ் பண்டிதருக்கு பாதுகாப்பாக வரும் அஷோக்குக்கு சுவாமிஜி அருள்வாக்கு சொல்கிறார் - அவனுடைய வருங்கால மனைவி, இரண்டாவது எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டு, அதே ரயிலில் வருகிறாள் என்று. ஆச்சரியமாக அஷோக்கின் நண்பனுடைய தங்கையான பிருந்தாவும் அதே ரயிலில் வர... அந்த ஓரிரவில் நடக்கும் சம்பவங்களை சுவாரசியமாக விவரிக்கும் குறுநாவல் - ”ஓரிரவில்..”. அடுத்த கதையான “ஐந்தாவது அத்தியாயம்” கணேஷ் - வசந்த் தோன்றும் ஒரு கொலை த்ரில்லர். தனது வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் ஒரு தொடர்கதையில் வருவதாகவும், அதில் ஐந்தாவது அத்தியாயத்தில் தான் கொல்லப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பதால் தனது உயிருக்கும் ஆபத்து வரும் என்று அபூர்வா வக்கீல்களான கணேஷ் - வசந்தை அணுக.. குறித்த தினத்தில் கொலையும் நடந்துவொடுகிறது. (எனக்கு) கொஞ்சம் குழப்பமாக கதையாக முடிகிறது. மேலும் இதில் பல லாஜிக் ஓட்டைகள் இருப்பதால் என்னை பெரிதாக ஈர்க்கவில்லை. உங்களில் யாரேனும் இந்த “ஐந்தாவது அத்தியாய”த்தை படித்திருந்தீர்கள் என்றால் கொலைகாரர் யாரென்று பின்னூட்டமிடவும்... ப்ளீஸ்!!! {oshits} வாசகர்கள் இந்த பதிவுக்கு