Gymspiration

Health and Fitness
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

வெற்றிகரமா 2வது மாதமாக நிறுத்தாமல் ஜிம்முக்கு போய்க்கிட்டு இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் தொடர்ந்து போகமுடியுமோ தெரியலை. ஆண்டவன் அருளால இந்த நிலமை இன்னும் ரொம்ப நாளைக்கு நீடிக்கனும்னு வேண்டிக்கிறேன். இந்த தொடர்ச்சியா போறதால சில நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சிருக்கு. 6-பேக் வைக்கிறது என்னுடைய லட்சியம் இல்லை... பட்டையான வயிறும், பார்க்குறவங்க முகம் சுளிக்காத அளவுக்கு டி-ஷர்ட் போடுற உடம்பு வாகும் தான் என்னுடைய நோக்கம். வருங்காலத்துல நிறைவேறும்னு நம்புறேன்.

 

முன்னாடி எல்லாம் ஏன் ஒரே மாசத்துல ஜிம்முக்கு போகாம இருக்க காரணம் தேடிட்டு இருந்தேன்னு யோசிச்சு பார்த்தப்போ ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. அது ஆர்வக்கோளாறுல என்னுடைய capacity-க்கு மீறிய intensity போட்டது தான் நான் செய்த முதல் தவறு. பொதுவா குறைந்த சமயத்துல நிறைந்த பலன் கிடைக்கனும்னு எல்லாரும் cardio exercises செய்யும்போது HIIT - High Intensity Interval Training-ஐ பின்பற்ற முயற்சி செய்வாங்க இல்லைன்னா பின்பற்ற சொல்லித் தருவாங்க... நம்மளோட இதயத்துடிப்பை எகிறவைக்கும் அளவுக்கு கடினமான உடற்பயிற்சிகளை குறைந்த நேரத்துல செய்யனும். உதாரணம் - 5 நிமிஷம் வேகமா ஓடணும் அடுத்த 5 நிமிஷம் நடக்கனும்... இப்படி 20-30 நிமிஷம் செய்யணும். முதல் சில நாட்கள் போனதும் நமக்கு அசதி அதிகமாகும். அதனாலேயே ஜிம்முக்கு போறதை தவிர்க்க காரணம் கண்டுபிடிக்க ஆரம்பிப்போம்.

இந்த தடவை என்னுடைய capacity தெரிஞ்சுகிட்டு அதுக்குள்ளே எப்படி அலுப்பு தோன்றாமல் அதே சமயம் வேலைக்கு ஆகும் உடற்பயிற்சி செய்யமுடியுமோ அதை செய்யுறேன். அதனால நான் LISS - Low Intensity Steady State cardio exercises செய்யுறேன். HIIT அளவுக்கு வேகமோ இல்லை அதிகமான இதய துடிப்போ வேண்டாம். உங்க உடம்புக்கு ஏத்த மாதிரி எந்த அளவுக்கு இதய துடிப்பை ஏத்தனுமோ அந்த அளவுக்கு வேகமோ இல்லை அழுத்தமோ கொடுத்தால் போதும்.

LISS வேலை செய்ய எவ்வளவு இதய துடிப்பு ஏறவேண்டும் என்று எப்படி கண்டுபிடிக்கிறது?

உங்கள் உடல் எடையை (கிலோகிராம்) 220-ல் இருந்து கழித்தால் எவ்வளவு வருகிறதோ அதன் 65% முதல் 80% வரை இதயடிப்பு ஏறும் அளவுக்கு உடற்பயிற்சி செய்யவேண்டும். உதாரணம் - என்னுடைய எடை 70 கிலோ. (220 - 70) * 80% i.e 120 BPM அளவுக்கு உங்கள் இதய துடிப்பு ஏறுவது போல நீங்கள் மிதமான வேகத்தில் நடந்தால் போதும்.

கேட்கும்போதே எளிமையா இருக்கு இல்லை? ஆனா இதிலே என்ன முக்கியமான விஷயம்னா இதை ரொம்ப நேரம் செஞ்சா தான் பலன் கிடைக்கும். குறைந்தது 40 முதல் 60 நிமிஷம் வரை செய்யணும். அதனால நீங்க உங்க cardio sessions-ஐ அது போல நிதானமா வச்சுக்கணும். நான் மதியம் சாப்பாட்டுக்கு அப்புறம் வெட்டி அரட்டை அடிக்காம 5 கி.மீ (50 நிமிஷம்) போறதால எனக்கு LISS வேலை செய்யுது.

அடுத்த காரணம் என்னான்னு யோசிச்சப்போ நான் ஜிம்முக்கு போக ஆரம்பிச்ச நாளிலே இருந்தே பலன் கிடைக்குதான்னு கண்ணாடி முன்னாடி நின்னு restless-ஆ இருந்ததால சீக்கிரமே மனசு விட்டுப்போச்சு. ஆனா இந்த தடவை நான் பலனை மட்டுமே எதிர்பார்க்காம ஒரு பழக்கமா ஆகனும்னு தொடர்ந்து போக ஆரம்பிச்சதால நான் கண்ணாடி முன்னாடி நின்னு நொந்து போகாததால ஆர்வம் குறையாம போக முடியுது.

இப்போ தொடர்ந்து ஜிம்முக்கு போக என்ன செய்யனும்? முதல் காரணம் நாம gymbuddy-க்காக காத்திருக்ககூடாது. நான் ஜிம்முக்கு திரும்ப போகனும்னு முடிவு பண்ணினபோது தெரிஞ்சவங்க கிட்டே எல்லாம் கேட்டு நொந்து போயிட்டேன். எல்லாரும் ஜிம்முக்கு வர்றதை ஏதோ தான தருமம் செய்யறது போல தெனாவட்டா பதில் சொன்னாங்க. அப்போ முடிவு பண்ணினேன் - என்னை inspire செய்யக்கூடிய நல்ல gymbuddy கிடைத்தால் சந்தோஷம். ஆனால் அது என்னை பாதிக்ககூடிய காரணமாக மாறக்கூடாது. எனக்கு நான் மட்டுமே inspiration-ஆக இருந்தால் போதும்.

ஜிம்முல நல்லா சைட் அடிக்கணும். ஆம்பள பொம்பளன்னு பாகுபாடு கூடாது. இவனை மாதிரி biceps ஏத்தனும், சும்மா கும்முன்னு chest ஏத்தனும், தொடையை develop பண்ணனும்... இந்த பொண்ணை impress பண்ணனும்னா எப்படி உடம்பை ஏத்தனும்?னு யோசிச்சாலே போதும். உங்க கால் தினமும் தானாவே ஜிம்முக்கு போயிடும்.

ஜிம் செஷன்ஸ் எல்லாம் வேலைக்கு ஆகனும்னா தினமும் போறதையும், அங்கே நீங்க effort போடுறதையும் தாண்டி ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. அது தான் diet. நான் கடந்த 1 மாதமா சக்கரையை, பிஸ்கட்டை, ஜாம்-ஐ, தொடறது இல்லை. காலையிலே ஓட்ஸ்-ஓட ஒரு ஸ்பூன் தேன் எடுத்துக்குறேன். அவ்வளவு தான் இனிப்பு. அப்புறம் என்னுடைய sugar cravings-ஐ கட்டுப்படுத்த பழங்கள் மட்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமா இருந்தாலும் இப்போ பழகிடுச்சு. இப்போ அது ஒரு கஷ்டமான விஷயமா இல்லை.

சாப்பாட்டு விஷயத்துல நான் கொஞ்சம் சறுக்கினது உண்மை. நான் தேவையான அளவுக்கு carbs எடுத்துக்காததால ஜிம்முல நான் எடுக்குற weight-ஐ ஏத்த முடியலை. சொல்லப்போனா Lifting weight-ஐ ஏத்த முடியலைன்னாலும் பரவாயில்லை குறைக்காமல் இருந்தால் போதும். அதனால இப்போது வாரம் ஒரு நாள் Carb recycle செய்கிறேன்.

பார்க்கலாம்... இன்னும் என்னென்ன அனுபவங்கள் எல்லாம் கிடைக்க போகுதோ. அது வரை Happy Gymming.

Related Articles