Lay Offs...
Blood Donation
Mental Images...
வாசிப்பும் அனுபவமும்...
இம்முறை வைத்தி வீட்டுக்கு போய் வரும்போது 'எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள்' தொகுப்பை எடுத்து வந்தேன். பஸ்ஸில் வரும்போது முதல் 4 சிறுகதைகளை படித்தேன். ஒவ்வொன்றும் நான் புரிந்துக் கொள்ளக்கூடிய உணர்வுகளை கொண்டு இருந்தது. அவற்றை படித்தவுடன் அது சம்பந்தப்பட்ட சம்பவங்களுக்கு மனசு தாவியது. நினைவுகள் நல்லதாக இருப்பின் நமக்கு மேலும் புத்துணர்ச்சி கிட்டும். ஆனால் நினைவுகள் வலி கொணடவையாக இருப்பின், it leaves us emotionally dry. பொதுவாக புத்தகங்கள் படிக்கும் அனைவரும் இப்படி emotional travails-க்கு ஆளாகிறார்களா? இல்லை என் போன்ற சிலர் மட்டும் தானா? இந்த சந்தேகம் தோன்றியதும் புத்தகத்தை மூடிவைத்து விட்டேன். நீங்கள் ஒரு திரைப்படமோ / நாவலோ பார்த்தோ / படித்தோ நாம் வாழ்க்கையில் இது போல மாறவேண்டும், இப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் நினைத்திருக்கிறீர்களா?
பூ, பெங்களுரு, ஆனந்த தாண்டவம்
{mosimage} பல முறை விமான பிரயாணம் செய்திருந்தாலும், இதுவரை விடியற்காலையில் பிரயாணம் செய்ததில்லை. சமீபத்தில் பெங்களூருக்கு ஒரு டிரெய்னிங் விஷயமாக போனபோது, காலை 6:00 மணி விமானத்தில் பயணிக்க நேர்ந்தது. விமானத்தில் இருந்து சூர்யோதயத்தை பார்ப்பது தனி அழகு தான். குறிப்பாக இந்த பனிக்காலத்தில், மேகங்களிடையே கிழித்துக்கொண்டு போவதும், அதிகாலை சூரியனின் வெளிச்சத்தில் பஞ்சு மேகங்கள் பொன்னிறமாக வறுபடுவதும், பிரம்மாண்டமான சென்னை பொம்மையாக சுருங்கி மேகங்களிடையே மறைவதும் தனி அழகு தான். Hollywood படங்களில் மட்டுமே இதுவரை நான் பார்த்திருந்த அந்த மேக காட்சிகள் இப்போது நேரில் கண்கூடாக காண முடிந்ததில் ஒரு தனி excitement. அந்த குதூகலத்தில் தூக்கம் முழித்த, வரிசையில் நின்ற களைப்பு எல்லாம் போயே போச்சு. துரதிர்ஷ்டவசமாக இது போன்ற காட்சிகளை நான் எதிர்பார்க்காததால், கையில் கேமிரா எதுவும் வைத்திருக்கவில்லை. Better Luck next time.
Increasing violence towards Women
Taste of own medicine...
Recently I added one more agenda to my New Year Resolutions - "Never wish anything for anybody without looking things from their perspective. Even though we wish with good intentions, it might end up hurting the protagonists.
{mosimage}1. I used to 'wish' my ex-boss abroad to get married soon, after learning about his broken marriage. Whenever possible I used to "reiterate" a remarriage. With the passage of time, the tables turned, I decided to stay away from marriage. Whenever I called him sometimes back he used to ask me about when I would get married. Sweet Revenge. These days whenever somebody asks me about my impending marriage, I cut short the topic with the answer "When I get married, I'll definitely keep you informed. Whats up next?". Atlast I have learnt to answer.நீரவ், நேனோ, ரஹ்மான்
{mosimage}இன்று காலை ஆஃபீஸுக்கு போகும் வழியில் பயங்கர அடைசல். சரத்குமாரின் கட்சி ஆட்கள் நிறைய சுமோ, குவாலிஸ் போன்ற வண்டிகளில் பேரணி போல போய்க்கொண்டிருந்தார்கள். இந்த மக்கள் இவ்வளவு Dumb-ஆ? சரத்குமாரின் கட்சியில் 'தொண்டாற்ற'? விஜயகாந்த் பரவாயில்லை, எந்த கட்சியிலும் இல்லாமல் தனியாக துவங்கினார்(ன்). அதனாலேயே அந்த கட்சிக்கு ஓரளவுக்கு மரியாதை இருக்கிறது. சரத்குமாரோ அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளிலும் 'சுரண்டி'விட்டு சீந்துவாரில்லாமல் புது கட்சி தொடங்கியுள்ளார்(ன்). திமுக-விலிருந்து வெளியேறிய பிறகு ஜெயா டி.வி-யில் திமுக-வில் தனக்கு மத்திய மந்திரி பதவியாவது கொடுத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஃபீல் செய்தார்கள்.