இம்முறை வைத்தி வீட்டுக்கு போய் வரும்போது 'எஸ். ராமகிருஷ்ணனின் சிறுகதைகள்' தொகுப்பை எடுத்து வந்தேன். பஸ்ஸில் வரும்போது முதல் 4 சிறுகதைகளை படித்தேன். ஒவ்வொன்றும் நான் புரிந்துக் கொள்ளக்கூடிய உணர்வுகளை கொண்டு இருந்தது. அவற்றை படித்தவுடன் அது சம்பந்தப்பட்ட சம்பவங்களுக்கு மனசு தாவியது. நினைவுகள் நல்லதாக இருப்பின் நமக்கு மேலும் புத்துணர்ச்சி கிட்டும். ஆனால் நினைவுகள் வலி கொணடவையாக இருப்பின், it leaves us emotionally dry. பொதுவாக புத்தகங்கள் படிக்கும் அனைவரும் இப்படி emotional travails-க்கு ஆளாகிறார்களா? இல்லை என் போன்ற சிலர் மட்டும் தானா? இந்த சந்தேகம் தோன்றியதும் புத்தகத்தை மூடிவைத்து விட்டேன். நீங்கள் ஒரு திரைப்படமோ / நாவலோ பார்த்தோ / படித்தோ நாம் வாழ்க்கையில் இது போல மாறவேண்டும், இப்படி இருக்கக் கூடாது என்றெல்லாம் நினைத்திருக்கிறீர்களா?
Page 1
எனக்கு பலமுறை பல திரைப்படங்களை பார்த்து தோன்றியிருக்கிறது. இந்த சமயத்தில் எனக்கு நடிகர் கமல்ஹாசனின் பேட்டி ஒன்று நினைவுக்கு வருகிறது. அவரிடம் 'நீங்கள் methodical actor / spontaneous actor-ஆ?' என்று கேட்டபோது, கமல்ஹாசனின் 'ஆரம்பத்தில் methodical actor, பின்பு வாழ்க்கை தரும் அனுபவத்தில் spontaneous actor ஆகிவிட்டேன்' என்றார். For those who came late, methodical acting என்பது நடிகர்கள் காட்சிக்கேற்ப தங்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை நினைத்து, மெல்ல மெல்ல அந்த சூழ்நிலையை உள்வாங்கி டேக்கில் அந்த நிகழ்ச்சியில் react செய்தது போல நடிப்பது. இதில் உள்வாங்கவும், அந்த காட்சியில் இருந்து வெளிவரவும் நிறைய சமயம் எடுக்கும்.உதாரணமாக நண்பன் / தந்தை இறப்பது போன்ற காட்சியில், தங்களுக்கு நெருக்கமானவர்களின் இறப்பை நினைத்து, அந்த வலியை மீண்டும் புணர்ந்து, மூடுக்கு வந்து கேமிராவின் முன்பு தத்ரூபமாக நடிக்கவேண்டும். கடந்த காலத்துக்கு பயணப்பட்டவர்கள் நிகழ்காலத்துக்கு வர வெகு நேரங்கள், சில சமயங்கள் நாட்கள் / வாரங்கள் கூட ஆகுமாம். மீரா ஜாஸ்மினுக்கு தேசிய விருது வாங்கி தந்த 'பாடம் ஒன்று ஒரு விளாபம்' என்ற மலையாள படத்தில் நடித்தபோது 'ஷாகீனா' கதாபாத்திரம் அவருக்கு nervous breakdowns - ஏற்படுத்தியதாம். வீட்டிலும் 'ஷாகினா'வை போலவே நடந்துக்கொண்டாராம். அதற்கு பிறகு தமிழில் 'ஆஞ்சனேயா' படத்தின் செட்டுக்கு போனபோதும் கூட 'ஷாகீனா' மீராவை விடவில்லையாம்.
அதுபோல எனக்கு சில சீரியஸ் எழுத்தாளர்களை படிக்கும்போது, கதையில் ஊன்றிப் போகும்போது அந்த கதாபாத்திரங்களின் வலியை உணரும்போது கிட்டத்தட்ட அதுபோல என் வாழ்வில் நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வருவதுண்டு. இது எல்லா நாவல்களுக்கும் நடப்பதில்லை, ஆனால் சில நாவல்கள் என்னை வெகுவாக பாதித்து வாரத்துக்கு தூங்கவிடாமல் இம்சை பண்ணுவது உண்டு. இவற்றால் அந்த நாவலை, கதாபாத்திரங்களை அனுபவித்து, நம் வாழ்க்கையின் ஒரு பாகமாக ஊன்றி படிக்க முடிகிறது என்பதே உண்மை.
நாவல்களில் வரும் எந்த விதமான உறவு பிரிவுகளில் நான் சந்தித்த சில நட்பு முறிவுகள் ஏற்படுத்திய நெஞ்சுவலிகள் மீண்டும் லேசாக தட்டி எழுப்பப்படும். காலத்துக்கும் நண்பனாக இருப்பான் என்று கருதிய மோகனசுந்தரமும் / பாலாஜியும், அழகான அந்த நட்புகள் அற்பமான அனாவசியமான சந்தேகத்தில் (for no fault of mine) முறிந்தது இன்றும் கூட கண் முன்னில் வந்து போகிறது. நேசமாக நட்புக்கரம் நீட்டியும், ஏற்க மறுத்த சந்திரமோகன் என் மனதில் ஏற்படுத்திய காயத்தை ஆற்ற மனநல மருத்துவரை நாடவேண்டியதாக இருந்தது. Ofcourse இவை நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும், அந்த வலிகளில் இருந்து நான் மீண்டு வந்துவிட்டாலும் சட்டென ஒரு மின்னல் போல கண்ணடித்துவிட்டு போகும். யார் எழுதும் எந்த விதமான உறவு பிரியும் நாவல்களிலும் நான் இவர்களை தான் பார்க்கிறேன். ஸ்டெல்லா புரூஸின் 'அது ஒரு நிலா காலம்' படித்துவிட்டு நான் கிட்டத்தட்ட 1 வாரம் ராம்ஜியும், சுகந்தாவும் எப்படியெல்லாம் வேதனைபட்டிருப்பார்கள் என்று நெஞ்சு பாரத்தை சுமந்திருக்கிறேன்.