{mosimage} பல முறை விமான பிரயாணம் செய்திருந்தாலும், இதுவரை விடியற்காலையில் பிரயாணம் செய்ததில்லை. சமீபத்தில் பெங்களூருக்கு ஒரு டிரெய்னிங் விஷயமாக போனபோது, காலை 6:00 மணி விமானத்தில் பயணிக்க நேர்ந்தது. விமானத்தில் இருந்து சூர்யோதயத்தை பார்ப்பது தனி அழகு தான். குறிப்பாக இந்த பனிக்காலத்தில், மேகங்களிடையே கிழித்துக்கொண்டு போவதும், அதிகாலை சூரியனின் வெளிச்சத்தில் பஞ்சு மேகங்கள் பொன்னிறமாக வறுபடுவதும், பிரம்மாண்டமான சென்னை பொம்மையாக சுருங்கி மேகங்களிடையே மறைவதும் தனி அழகு தான். Hollywood படங்களில் மட்டுமே இதுவரை நான் பார்த்திருந்த அந்த மேக காட்சிகள் இப்போது நேரில் கண்கூடாக காண முடிந்ததில் ஒரு தனி excitement. அந்த குதூகலத்தில் தூக்கம் முழித்த, வரிசையில் நின்ற களைப்பு எல்லாம் போயே போச்சு. துரதிர்ஷ்டவசமாக இது போன்ற காட்சிகளை நான் எதிர்பார்க்காததால், கையில் கேமிரா எதுவும் வைத்திருக்கவில்லை. Better Luck next time.
Page 1
பெங்களூர் - எப்போதும் spoils me. காரணம் அங்கே போனால் நல்ல lavish ஆன சாப்பாடும், இஷ்டத்துக்கு ஊர் சுற்றவும் இதுவரை வாய்ப்பு கிடைத்தது. இம்முறை IRT360 டிரெய்னிங் போனபோதும் அப்படி தான் நடந்தது. அதனைவிட நல்லது என்றால் எனக்கு SAPயில் ஒரு specialisation தானாக உருவானது. இதுவரை SAP-இல் எந்த பகுதியில் வேலை செய்கிறாய் என்று கேட்கும்போது, specialised-ஆக ஒன்றும் இல்லை, ஆனால் எல்லா concepts-ம் தெரியும் என்று சொல்வது சற்று odd-ஆக இருந்தது. இப்போது யாரேனும் கேட்டால், POS-இல் வேலை செய்திருக்கிறேன் என்று பெருமையாக சொல்லிக்கலாம். யதேச்சையாக தான் நான் Traversity கற்க நேர்ந்தது. அந்த வாய்ப்பு தேடி வந்த சக ஊழியர் பெரிதாக ஈடுபாடு காட்டாததால் நான் கடைசி நிமிஷத்தில் replacement-ஆக நுழைந்தேன். அதன் தொடர்ச்சியாக தான் இந்த Training வாய்ப்பும் கிடைத்தது. மொத்தத்தில் SAP என்னும் கடலில் கறைந்துபோக இந்த பயணம் உதவியது.{mosimage}ம்ம்ம்.... சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போம்" நாவல் படமாகிறதாம். ஷங்கரின் முன்னாள் உதவியாளரான காந்தி கிருஷ்ணா இயக்குகிறாராம். துரதிர்ஷ்டவசமாக அதே பெயரை கரு. பழனியப்பன் பயன்படுத்திவிட்டதால் இதற்கு "ஆனந்த தாண்டவம்" என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். 'ரகு'வாக சித்தார்த் என்ற இளைஞர் அறிமுகம் ஆகிறாராம். 'மதுமிதா'வாக தமன்னா (கல்லூரி புகழ்), மற்ற பாத்திரங்களுக்கு யார் என்று தெரியவில்லை. படப்பிடிப்பும் திருநெல்வேலியில் நடக்கிறதாம். சுஜாதாவே வசனமும் எழுதுகிறார்.
{mosimage}தமன்னா இந்த பாத்திரத்துக்கு சற்று முதிர்ச்சியாக இருப்பாள் என்பது என் அபிப்பிராயம். மதுமிதா +2 முடித்துவிட்டு விடுமுறையில் நடப்பதாக கதை. மேலும் மதுமிதா ஒரு வளர்ந்த குழந்தை. தெளிவாக முடிவு எடுக்க தெரியாதவள். தமன்னாவின் முகத்தில் அந்த அப்பாவித்தனம் கட்டாயம் மிஸ்ஸிங். மேலும் தமன்னா நல்ல ஓங்குதாங்காக வளர்ந்து இருக்கிறார். கல்லூரியிலேயே உடம்பை மூடி போர்த்திய சுடிதாரையும் மீறி அந்த கவர்ச்சி (sensuality) தெரிந்தது. அது "ஆனந்த தாண்டவ"த்துக்கு ஒரு மைனஸ் பாயின்டாக கூட அமையலாம். என்ன தான் இவை என்னுடைய apprehensions-களாக இருந்தாலும், சுஜாதாவுக்கும், இயக்குனருக்கும் தமன்னா பொருத்தமாக இருப்பார் என்று தோன்ற காரணம் இல்லாமல் இருக்காது. Let me wait for this novel's adaptation on screen. All the best to Anandha Thandavam team.
{mosimage}எனக்கு லேட்டாக தான் உரைத்தது - நான் பார்த்த பாபனாசம் அருவி, மின்நிலையம் etc.. etc... இவை தான் சுஜாதாவின் "பிரிவோம் சந்திப்போம்" நாவலில் வந்த இடங்கள். நான் அந்த இடத்தில் இருந்தபோது எனக்கு சுத்தமாக தோன்றவில்லை. நாங்கள் திருநெல்வேலியில் இருந்தபோது அதனருகில் உள்ள "சோலையாறு" என்ற அணைக்கட்டில் "ஆனந்த தாண்டவம்" படப்பிடிப்பு நடந்துக்கொண்டு இருக்கிறது என்று பேப்பரில் படித்தேன். ஏதாவது டூயட் எடுக்க வந்திருப்பார்கள் என்று நினைத்தேன். 3-4 நாட்களுக்கு முன்பு தான் என் நண்பர் ஒருவர் "உன் favorite novel படமாகிறது பார்" என்று சொல்லி இன்டெர்நெட்டில் படத்தின் ஸ்டில்ஸ்களை காண்பித்தார். அதை பார்த்த பின்பு தான் எனக்கு மேலே கூறிய apprehensions.