இளையராஜாவும் தமிழர்களும்
இந்த முறை எனக்கு தீபாவளி விருந்து என்றால் அது ஒரே நேரத்தில் ஜெயா மேக்ஸ் மற்றும் இசையருவி தொலைகாட்சிகளில் ஒளிபரப்பான இசைஞானி இளையராஜாவின் கச்சேரிகளே. இரண்டுமே மறு ஒளிபரப்புகள் என்றபோதும் அந்த இசைமழையில் நனைய கணக்கு வேண்டுமா என்ன? ஆரம்பத்தில் இரண்டு நிகழ்ச்சிகளுமே பிரதி எடுத்தது போல ஒரே வரிசையான பாடல்களையும், ஒரே வேண்டுகோளையும் கொண்டு இருந்தாலும், டேக் ஆஃப் ஆனபிறகு இரண்டுமே களை கட்டியது. திகட்ட திகட்ட இன்பம் என்பதை திகட்ட திகட்ட இசை என்று மாற்றிக்கொள்ளலாம் போல தோன்றியது. அற்புதமான பாடல்கள், அழகான இசைகோர்வை என எஸ்.பி.பி, மது பாலகிருஷ்ணன், ஷ்ரேயா கோசல், சாதனா சர்கம், மஞ்சரி, சித்ரா என அனைவரின் குரல்களும் நம்மை வேறொரு உலகத்துக்கு கொண்டு போயின. இருப்பினும் ஒரு சிறிய நெருடல்... அது என்ன?