தலைவலியும் பல்வலியும்....
{mosimage}தமிழில் ஒரு பழமொழி உண்டு "தலைவலியும் பல்வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்".. ஏன் இதை திடீரென்று சொல்கிறேன்? சில வாரங்களுக்கு முன்பு கன்னட "கோல்டன் ஸ்டார்" கணேஷ் தான் காதலித்த பெண்ணை திடீரென்று திருமணம் செய்துக்கொண்டார். இதிலென்ன விசேஷம் என்கிறீர்களா? அந்த பெண் ஒரு பிரபலமான கட்டுமான தொழிலதிபருடன் குழந்தை பெற்று விவாகரத்தானவர். இந்த திருமணம் நல்ல விஷயம் என்ற போதும், இவ்வளவு பிரபலமான நடிகருக்கு, அதுவும் நிறைய பெண் விசிறிகள் கொண்டவருக்கு திருமணம் ஆகாத பெண்ணே கிடைக்கவில்லையா என்று முதலில் தோன்றியது வருத்தமான தாழ்ந்த அபிப்பிராயம். விவாகரத்தானவர்கள் மீண்டும் திருமணம் செய்தால் அதுபோன்றவர்களை மட்டுமே கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டும் என்ற குறுகிய சமூக சிந்தனையை நானும் என்னையறியாமல் வாங்கியிருக்கிறேன் என்று சிரிப்பு வருகிறது. இதென்ன திடீர் ஞானோதயம் என்று நினைக்கிறீர்களா?