Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}இன்று காலை ஆஃபீஸுக்கு போகும் வழியில் பயங்கர அடைசல். சரத்குமாரின் கட்சி ஆட்கள் நிறைய சுமோ, குவாலிஸ் போன்ற வண்டிகளில் பேரணி போல போய்க்கொண்டிருந்தார்கள். இந்த மக்கள் இவ்வளவு Dumb-ஆ? சரத்குமாரின் கட்சியில் 'தொண்டாற்ற'? விஜயகாந்த் பரவாயில்லை, எந்த கட்சியிலும் இல்லாமல் தனியாக துவங்கினார்(ன்). அதனாலேயே அந்த கட்சிக்கு ஓரளவுக்கு மரியாதை இருக்கிறது. சரத்குமாரோ அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளிலும் 'சுரண்டி'விட்டு சீந்துவாரில்லாமல் புது கட்சி தொடங்கியுள்ளார்(ன்). திமுக-விலிருந்து வெளியேறிய பிறகு ஜெயா டி.வி-யில் திமுக-வில் தனக்கு மத்திய மந்திரி பதவியாவது கொடுத்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஃபீல் செய்தார்கள்.

அதனால் தான் வெளியே வந்து அதிமுக-வில் சேர்ந்துவிட்டேன் என்று பேசியதில் விவேக்கின் நகைச்சுவை எல்லாம் காணாமல் போச்சு. சரத்தின் சாதனை என்ன என்பதை ஹீராவும், நக்மாவும், ராதிகாவும் தான் சொல்ல முடியும். பெண்களான ஹீராவிடமும், நக்மாவிடமும் இழந்ததை பெண்ணான ராதிகா மூலமே சம்பாதித்து மட்டுமே சரத்தின் சாதனை. எனக்கு சரத்குமாரை பிடிக்கும் - 60 வயதிலும் கிண்ணென்று உடம்பை maintain பண்ணுவதை பார்த்து தான் எனக்கும் உடற்பயிற்சி மீது நம்பிக்கை வந்தது. Macho and Sexy hero. மற்றபடி நாடார் கட்சி என்று ஆரம்பித்துவிட்டு, அதற்கு சமத்துவ கட்சி என்று முக்காடு போட்டு, அரசியல்வாதி ஆனபின்பும் கூலிங் க்ளாஸ் கழற்றாமல் மேக்கப்போடு சினிமா செட்டு போல மக்களை ஏமாற்ற முயற்சிப்பது உண்மையிலேயே நல்ல காமெடி. 

Welcome Nano...

டாடாவின் நேனோ ஒரு வரவேற்கத் தகுந்த கார் மாடல். இதை பல வருடங்களுக்கு முன்பு கண்டு பிடித்திருந்தால் சென்னை சாலைகளில் அடைசலாவது குறைந்திருக்கும். பின்னே.. ஒரு டிராஃபிக் ஜாம் என்றால் 100 கார்கள் 1 கி.மீ தூரத்துக்கு நிற்கும். பெரும்பாலான கார்களில் ஒருவர் மட்டுமே இருப்பார். வீட்டுக்கு ஒரு கார், தனக்கு ஒரு கார் என்று அழிச்சாட்டியம் வேறு. நேனோ கொஞ்சமாக இடம் அடைக்கிறது. அதனாலேயே நான் அதை வரவேற்கிறேன். கார்கள் அதிகரிக்கும் அளவுக்கு சாலைகள் இல்லை. கார் வாங்க தனி லைசென்ஸ் என்று சட்டம் கொண்டு வந்தால் ஒருவேளை வீட்டுக்கு 2-3 கார்கள் வாங்குவது குறையலாம், ஆனால் RTO ஆட்கள் 58 வயது சம்பாத்தியத்தை 2 வருடத்தில் எடுத்துவிடுவார்கள் - லஞ்சமாக..

நல்வரவு நீரவ் ஷா...
பல படங்களில் பணிபுரிந்திருந்தாலும், நீரவ் ஷாவுக்கு பெயரும் புகழும் மெதுவாகத் தான் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இந்த சென்னை வாழ் ஒளிப்பதிவாளர் தேசமெங்கும் 'தூம் - 1 & 2', பங்கஜ் பராஷரின் 'பனாரெஸ்' படம் மூலமாகவும் ஏற்கனவே பரிச்சயம் ஆகியுள்ளார். இப்போது 'பில்லா' மூலம் தெற்கிலும் புகழ் பெற்றுள்ளார். ஏற்கனவே 'அறிந்தும் அறியாமலும், பட்டியல், சண்டகோழி, பச்சைகிளி முத்துச்சரம் (கிளைமேக்ஸ் மட்டும்) என படங்கள் பண்ணியிருந்தாலும், 'பில்லா' மூலம் overnight-இல் பிரபலமாகியுள்ளார். நான் 'பில்லா'வை தியேட்டரில் போய் பார்த்ததே நீரவ் ஷாவின் ஒளிப்பதிவுக்காக மட்டுமே. இல்லையென்றால் அந்த 'Ramp Walk'-ஐ மூன்று மணி நேரம் யாரால் தியேட்டரில் உட்கார்ந்து பார்க்க முடியும்?

ஏன் திடீரென்று நீரவ் ஷா புராணம்? ஷங்கரின் 'ரோபோ'-வுக்கு ஏ.ஆர். ரகுமானுக்கு அடுத்து டெக்னீஷியன்கள் வரிசையில் அதிகாரபூர்வமாக ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். தெற்கிலிருந்து போய் தேசமெங்கும் வெற்றி கொடி நாட்டிய 'சந்தோஷ் சிவன், ரவி கே. சந்திரன், மணிகண்டன், நடராஜ சுப்ரமணியம்' வரிசையில் நீரவும் இடம் பெற வாழ்த்துக்கள். நீரவ் ஷாவின் வெப்சைட்: http://www.niravs.com. நீரவ் பற்றி அதிகம் தகவல்கள் இல்லை என்றாலும், அவரோடு நேரடியாக நம் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள, தொடர்பு கொள்ள வசதியாக இருக்கிறது.

சீரியலில் அழுகை, ஸ்டேஜில் கவர்ச்சி.
ஸ்டார் டி.வியின் 'ஜோடி நெ. 1'இன் தமிழ் பதிப்பு விஜய் டி.வியில் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இப்போது எல்லா தமிழ் சேனல்களிலும் 'மானாட மயிலாட, மஸ்தானா மஸ்தானா' என்று வெவ்வேறு பெயர்களில் 'டான்ஸ் ஷோக்கள்'. பெயர் மட்டும் தான் வேறு. அந்த வயலெட் நிற background-ஐ கூட விடவில்லை. டி.வி சீரியல்களில் குமுறி குமுறி அழும் 'பெண்மணிகள்' 10 லட்ச ரூபாய் பரிசு என்றதும் அவுத்து போட்டுவிட்டு ஆடுகிறார்கள். இந்த concept-ஐ கண்டுபிடித்தவனும், மெகா சீரியலை கண்டுபிடித்தவனும் என் கையில் கிடைத்தான்கள் என்றால் நான் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போக கூட தயங்க மாட்டேன். ஏற்கனவே இந்த சீரியல்களால் குடும்பத்திலிருந்து பிரிந்தாயிற்று. ஜெயில் என்ன பெரிய வித்தியாசம்?

பாவம் ஏ. ஆர். ரகுமான்:-
{mosimage}சமீபத்தில் ஒரு விழாவில் கவிஞர் புலமைபித்தன் தமிழ் சினிமாவில் பெருகி வரும் ரீ-மிக்ஸ் கலாசாரத்துக்கு ஏ.ஆர் ரகுமானை காரணமாக சொல்லி பிடிபிடித்திருக்கிறார். ஒரு வயதில் மூத்த கவிஞர் பேசும் முன்பு உண்மையை தெரிந்துக்கொண்டு பேசினால் பரவாயில்லை. இல்லை தன் வயசுக்கு என்னவென்னாலும் பேசலாம், யாரும் கண்டுக்க கூடாது என்று நினைத்துவிட்டாரோ? ஏ.ஆர் ரகுமான் எப்போதும் ரீ-மிக்ஸ் செய்வதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வருகிறார். "தொட்டால் பூ மலரும் பாட்டை" கூட re-tune செய்து புது பாடல் போல கொடுத்திருந்தார். 'அழகிய தமிழ் மகன்' படத்தில் 'பொன்மகள் வந்தாள்...' பாடலை ரீ-மிக்ஸ் செய்தது கிருஷ்ணா என்ற programmer. தமிழில் ரீ-மிக்ஸ் செய்து துட்டு சம்பாதிக்கும் யுவன் ஷங்கர் ராஜா, சரக்கே இல்லாத 'இமான்' மற்றும் பல பேர் தெரியாத இசை கோர்ப்பாளர்கலை விட்டுவிட்டு ஏ.ஆர் ரகுமானை சாடியது புலமைபித்தனின் அறியாமையையே காட்டுகிறது. அல்லது இளையராஜா-விடம் விசுவாசத்தை காட்ட பேசினாரோ என்னவோ?

Related Articles