Relationships
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Buttu with Hutch dogபொதுவாக Indian parenting is overtly protective என்கிற அபிப்பிராயம் எனக்கு உண்டு. இது தலைமுறை சம்பந்தப்பட்ட விஷயம் என்று இவ்வளவு நாளாக நினைத்திருந்தேன். ஆனால் புட்டுவின் வருகைக்கு பிறகு எனக்கு ”இது தலைமுறை சம்பந்தப்பட்ட விஷயமல்ல மாறாக உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்” என்று தோன்றுகிறது. இந்த protective குணங்கள் எல்லாம் காலப்போக்கில் தானாக வருவது என்று புரிந்து கொள்ள வாழ்க்கையில் அந்த கட்டத்துக்கு போகவேண்டியிருக்கிறது.

 

Nandhana & Chitraபாடகி சித்ராவின் குழந்தையின் மரணம் என்னை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று. கல்யாணமாகி 15 வருடங்கள் கழித்து ஒரு குழந்தை பிறக்கிறது, அதுவும் spastic - ஆக. எட்டு வருடங்கள் சீராட்டி வளர்க்கப்படும் குழந்தை ஒரு நாள் திடுப்பென இறந்துவிட்டால் அந்தத் தாயின் மனம் எவ்வளவு வேதனைப்படும் என்று யோசித்தாலே முதுகுத்தண்டில் ஒரு ஜில்லிப்பு பரவுவதை உணரமுடிகிறது. மேலும் சமீபத்தில் “ஓர்ம மாத்திரம்” (நினைவுகள் மட்டும்) என்ற புதிய மலையாள படத்தின் synopsis - ஐ படித்தபோதும் ஒரு நடுக்கம். தங்கள் வாழ்வாதாரமான ஒரே பிள்ளையை இழந்து தவிக்கும் தம்பதியினர் எப்படி அதை எதிர்கொள்கின்றனர் என்பது தான் அது. இது போன்ற சம்பவங்கள் / கதைகளை படிக்கும்போது ஏற்படும் இந்த உணர்ச்சிகள் எனக்கு புதுசு. சில வருடங்களுக்கு முன்பு இது போன்ற செய்திகளுக்கு நான் empathise செய்யும் அளவிற்கும் / விதத்திற்கும், எனது இன்றைய reaction-களுக்கும் நிறைய மாற்றங்கள். அதற்காக negative-ஆக நினைத்து பயந்து நிகழ்காலத்தை கெடுத்துக்கொள்ளும் ரகம் நான் இல்லை. எனினும் எனக்குள்ளே ஒரு protective parent உருவாகிக்கொண்டிருப்பதை உணர்த்தும் symptoms இவை என்று தோன்றுகிறது.

நான் படித்த / கேட்ட அனுபவங்களை கொண்டு எப்படி overtly protective-ஆக இருக்கக்கூடாது என்று கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். பொதுவாக நான் ஒரு இடத்தில் இருக்கிறேன் என்பதே தேடினால் தான் தெரியும். அந்த அளவுக்கு அமைதியாக இருப்பேன் & என்னை யாரும் கவனிக்கும் அளவுக்கு ஈர்ப்பு சக்தி இல்லை. ஆனால் Buttu is a head turner. அவன் வெளியே வந்தால் நிச்சயம் 10 - 20 பேராவது அவனை கன்னத்தை கிள்ளி கொஞ்சாமல் இருக்கமாட்டார்கள். Buttu enjoys this adulation. புதிய மனிதர்கள், புதிய இடங்கள் என அவனுக்கு இவை எல்லாம் சந்தோஷம் தரக்கூடிய விஷயங்கள். அதனால் நான் எனது பார்வை அளவிலேயே அவனை அவன் போக்குக்கு விட்டுவிடுவேன். Shopping mall-ல் எல்லாம் அவன் எங்கள் பார்வையின் எல்லைக்குள்ளேயே ஆனால் தனியாக ஓடி விளையாடிக்கொண்டிருப்பான். கிட்டத்தட்ட பாதுகாப்பு வேலிக்குள் சுதந்திரமாக அலையவிடப்பட்ட மாடு போல. பொத்திப் பொத்தி வளர்க்கிறேன் என்று வீட்டுக்கு வெளியே வந்தால் தரையில் கால் படவிடாமல் தூக்கிக்கொண்டு நடப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்தந்த வயதில் அனுபவிக்கவேண்டியதை சுதந்திரமாக சந்தோஷமாக அனுபவிக்கட்டுமே!

Buttu with moustacheஇது ஒரு சிறிய சம்பவம் தான் என்றபோதிலும் கிட்டத்தட்ட இதே approach-ஐ அவனது வளர்ப்பிலும் உபயோகப்படுத்தவேண்டும் என்று தோன்றுகிறது. அவனுக்கு அவனது space-ஐ கொடுத்துவிட்டு ஏதாவது ஏடாகூடமாக நடக்காத வரையில் குழந்தைகளின் சுதந்திரத்தை பறிக்காமல் வளர்த்துப் பார்க்கவேண்டும். சமயத்தில் புட்டுவை அவனது வயதையொத்த குழந்தைகள் bully செய்யும்போது எனக்குள்ளே இருக்கும் அந்த conventional protective parent வெளியே வந்துவிடும். “ஏன் தம்பியை அடிக்கிறாய்? / ஏன் தம்பியை தள்ளிவிடுகிறாய்?” என்று அந்த குழந்தைகளிடம் நான் மல்லுக்கு நின்றதை நினைத்து சில நிமிடங்களுக்கு பிறகு அசடு வழிவதும் நடந்திருக்கிறது. இந்த control streak-ஐ குறைக்காவிட்டால் நானும் ஒரு conventional protective Indian parent-ஆக, நான் complain செய்யும் பெற்றோர் போல, ஆகிவிடுவேன் போல - ”இங்கே போகாதே! அவன் கூட விளையாடாதே” என்று சொல்லிக்கொண்டு.

“சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே..” பாடலில் வருமே “விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது... விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது” என்று காதலனும் காதலியும் எப்போது தங்களுக்குள் காதல் வந்தது என்று recount செய்வார்கள். அதுபோல எனக்கு எப்போது புட்டு சிங் மீது முதல் காதல் வந்தது என்று நன்றாக நினைவிருக்கிறது. அகிலாவின் பிரசவத்தின் கடைசி நொடி வரை பெண் குழந்தை பிறக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தேன். டாக்டர் வந்து சொல்லும் முன்பு வார்டு பாய் வந்து “பிறந்தது ஆண் குழந்தை” என்று சொல்லிவிட்டு போய்விட்டார். எனக்கு பயங்கர ஏமாற்றம். நான் குழந்தையை தூக்கமாட்டேன் என்று வைராக்கியத்தோடு ஒரு மூலையில் உட்கார்ந்துக்கொண்டிருந்தேன். சில நேரங்களுக்கு பிறகு டாக்டர் குழந்தையை கொண்டுவந்து கொடுத்தார். புட்டு அழவில்லை ஆனால் தன்னை சுற்றி இருப்பவர்களை கண் இமைகளை படபடத்துக்கொண்டு சுற்றி ஆர்வமாக பார்த்தான். அவன் பார்த்த அந்த பார்வையில், அந்த நொடியில் எனக்கு புட்டு மீது முதல் காதல் வந்து தூக்கிக்கொண்டேன். சில நாட்கள் கழித்து அவனது blood sample எடுக்க ஊசியால் குத்தியபோது அவனைவிட அகிலா அதிகம் அழுதுக்கொண்டு இருந்தாள். ஆனால் குழந்தை ரத்தம் எடுத்த கொஞ்ச நேரத்துக்கு எல்லாம் சமாதானமாகி தூக்கிக்கொண்டிருந்த என் முகத்தை ஒரு அமைதியாக பார்க்க எனக்கு அவன் மீது அடுத்த காதல் வந்தது. எந்த ஒரு கணத்திலும் அடுத்தவர்களின் கவனத்தை ஈர்க்க துளி கூட முயற்சிக்காமல் ஏதோ ஒரு activity-ல் தன்னைத் தானே engage செய்துக்கொள்வது, கோபம் வந்தால் முகத்தை மூடிக்கொண்டு அமைதியாக தன் கோபத்தை வெளிப்படுத்துவது, வீட்டை விட்டு வெளியே வந்தால் கண்ணெல்லாம் சந்தோஷமாக பயணங்களை அனுபவிப்பது என அன்றிலிருந்து இன்றுவரை தினம் தினம் புட்டு மீது காதல்வசப்பட்டு கொண்டு இருக்கிறேன்.

’வாரணம் ஆயிரம்’ சூர்யாஇப்போது “வாரணம் ஆயிரம்”, “கன்னத்தில் முத்தமிட்டால்..” ஆகிய படங்களை மீண்டும் பார்த்தால் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கமுடியுமோ என்னவோ? குறிப்பாக எனக்கு இப்போது “வாரணம் ஆயிரம்” படத்தை திரும்ப பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது. Even in parental relationships, the opposite sex attract. இந்த convention-ஐ உடைக்கவோ / challenge செய்யவோ நான் விரும்பவில்லை. But I want to change the conventional equation between the father and the son in my case. நானும் அவனுடனேயே வளர்ந்து ஒரு நண்பனை போல அவனது perspective-ல் உலகத்தை பார்த்து, அவனுடைய சந்தோஷங்கள், தடுமாற்றங்களை உணர்ந்து அவனை அவனாகவே வளரவிட வேண்டும் என்று idealistic - ஆக தோன்றுகிறது. நானும் இதுபோன்ற trial & error முறையில் தான் ஆளானேன். Why Buttu shouldn't be subjected to them in his bringing? மாறாக அவன் கூடவே மீண்டும் வளர்வோமே, என்னை புதுப்பித்துக்கொள்கிறேனே!

இந்த parenting stage-ஐ சந்தோஷமாக அனுபவிக்கிறேன். I am enjoying each micro seconds of it... to the core. சொல்லப்போனால் இந்த கணத்தை document செய்யவே இந்தப் பதிவு. புட்டு அவன் தாத்தா பாட்டி வீடுகளுக்கு round அடித்ததில் ஒரு மூன்று வாரங்கள் அவனை பார்க்கவில்லை. அவனை திரும்ப பார்த்தபோது அழகாக தலையை சாய்த்து சிரித்து, என் கன்னத்தை பலமுறை தடவி தடவி அவன் முத்தம் கொடுத்த அந்த தருணங்கள் விலை மதிப்பற்றவை, சிலிர்ப்பானவை. அவன் கண்கள் சிரிக்கையில் என் மனது சிரிப்பதை உணர்கிறேன். அவன் நோகும் நொடிகளில் என்னுள் ஏதோ நஷ்டப்படுவதை உணர்கிறேன். இது போன்ற அனுபவங்கல் நிறைந்தது தான் parenthood என்றால் இதற்காக எத்தனை கஷ்டங்களையும் தாங்கலாமே! அதை விட வாழ்க்கையில் வெட்டிமுறிக்க என்ன இருக்கிறது?

பின்குறிப்பு:-

1) For some strange reasons - எனக்கும் spastic குழந்தை வேண்டும் என்று சில வருடங்களுக்கு முன்பு நான் ஆசைப்பட்ட நாட்களும் உண்டு. காரணம் அவர்களுக்கு கூடுதலாக அன்பு செலுத்தவேண்டும். பின்பு ஏன் எனக்கு அப்படி தோன்றியது என்று யோசித்துப் பார்க்கையில் எனது சுயநலமான, என் குழந்தையை நான் மட்டுமே நேசிக்கவேண்டும் என்ற possessive குணமே காரணம் என்று புரிந்தது. ஒருவேளை ”அஞ்சலி” போன்ற திரைப்படங்களில் காட்டப்பட்ட lifestyle மற்றும் spastic-ஆக இருப்பதின் யதார்த்த சிரமங்களை நிறைவாக சொல்லாமல் விட்டிருப்பதால் ஏற்பட்ட glamorous perception-ஆக கூட இருக்கலாம்.

Buttu Singh2) வீட்டில் பெரியவர்களும் நண்பர்களும் “கண்ணு பட்டுடபோகுது” என்று புட்டுவின் செய்திகளை அடக்கிவாசிக்க சொல்வார்கள். இது போன்ற பதிவுகளில் போடும் போட்டோக்களையும், facebook-ல் நான் வழக்கமாக போடும் புட்டு சிங்கின் updates-ஐ தவிர்க்க சொல்வார்கள். எனக்கு இந்த ‘கண்ணு படப்போகுது’ என்பதில் நம்பிக்கையில்லை. மாறாக அவனை அறியும் அவ்வளவு பேரின் அன்பும் அவனுக்கு இன்னும் பலம் கொடுக்கிறது என்று நினைத்துக்கொள்வோமே என்று சொல்வேன். அந்த காலத்தில் புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறையும் என்பார்கள். ஒரு நாள் ஒரு போட்டோ எடுத்தால் எவ்வளவு ஆயுள் குறையும் என்று கேட்டேன். அதற்கு அந்த பாட்டியம்மா கொஞ்சம் யோசித்து “ஒரு போட்டோவுக்கு ஒரு நிமிஷம் ஆயுள் குறையும்” என்றார். அவரது மூடநம்பிக்கையை உண்மை என்றே நம்பினால் இந்நேரம் நம்மிடையே சச்சின் டெண்டுல்கரும், ஐஸ்வர்யா ராயும் உயிரோடே இருக்கமாட்டார்கள். ஒரு போட்டோ (மட்டும்) ஒரு நொடி ஆயுளை குறைப்பதாக வைத்துக்கொண்டால் கூட இந்நேரம் அவர்களது ஆயுள் முடிந்து போயிருக்கவேண்டும்.

{oshits} வாசகர்கள் இந்த பதிவை படித்துள்ளனர்!!!

Related Articles