வலைமனை பக்கம் வந்து மாதம் ஒன்று தாண்டியாயிற்று. எழுதமுடியாத அளவுக்கு busy என்றும் சொல்ல முடியாது. அதே சமயம் எழுதும் அளவுக்கு அனுபவங்கள் கிட்டவில்லை என்றும் சொல்லமுடியாது. காரணம் - பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம், முள்பாதை ஆகிய புத்தகங்கள் படித்தாயிற்று, மசினகுடி காட்டுக்கு ஒரு முறை சென்று வந்தாயிற்று, எனது desktop-போடு சண்டைபோட்டு Windows 7-க்கு upgrade செய்தாயிற்று. எனினும் எழுத ஒரு சோம்பேறித்தனம். எனது வேலையில் ஏற்பட்ட சலிப்பினால் ஒரு மாற்று career option-ஐ முயற்சித்துக்கொண்டிருப்பதும், என் மனம் முழுவதும் அதிலேயே சென்றிருப்பதும் ஒரு காரணம். இந்த மனித மனம் இருக்கிறதே அது கொஞ்சம் விசித்திரமானது தான். எப்போதும் ஒரு தேடலிலேயே ஓடிக்கொண்டு இருக்கிறது. “அப்பாடா” என்று அயர்ந்து உட்கார்ந்தால் துரு பிடித்துவிடுகிறது. நம்முடைய தேடல் இத்தோடு முடிந்துவிடும் என்று ஒவ்வொரு முறையும் நினைக்கிறது ஆனால் நடந்தபாடு இல்லை.
நேற்று (11வது ஜூன்) எனது மறைந்த நண்பர் வைத்தியின் 49-வது பிறந்த நாள். அவரது நினைவு நாளான மே 17 அன்று கூட அவரை பற்றி இரண்டொரு வார்த்தைகள் எழுதவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் ஏனோ எழுதவே இல்லை. வைத்தியின் ஆத்மா இப்போது அமைதியாக ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். சிலர் தங்களை சுற்றியுள்ளவர்களின் வாழ்வில் ஒரு healing effect-ஐ ஏற்படுத்துவார்கள். அவர்களுக்குள் ஏதோ ஒரு தேடலோ அல்லது நிறைவின்மையோ உணர்ந்தாலும் அதை மற்றவர்கள் உணரமுடியாது. கிட்டத்தட்ட வைத்தியுடைய கதையும் இதே தான். அதே சமயம் எனக்கு இன்னொரு நண்பனின் நினைவும் வருகிறது.
நான் அபுதாபியில் இருந்தபோது துபாய் அலுவலகத்தில் வேலை பார்த்த பாலாஜி தான் அவன். நாங்கள் இருவரும் சென்னையில் ஒரே நாளில் நேர்முகத்தேர்வுக்கு சென்றிருந்ததில் எங்கள் அறிமுகம் ஆனது. தேர்வுக்கடிதம் கிடைத்ததும் கிளம்பும் இரு நாட்களுக்கு முன்பு மரியாதை நிமித்தமாக அவன் என்னை அழைத்ததில் நட்பு ஆரம்பித்தது. துபாய் அலுவலகத்தில் சென்று report செய்ததும் என்னை அபுதாபி அலுவலகத்துக்கு போகச்சொன்னார்கள். எனினும் வார இறுதிகளில் துபாய் சென்று அவனுடைய அறையில் தங்கி வார இறுதிகளை செலவழித்து எங்கள் நட்பு வளர்ந்தது. கையில் காசு இல்லை என்றாலும், சந்தோஷத்துக்கு காசு அவசியம் என்பதில்லை என்று புரிந்தது அந்த நாட்கள் தான். நான், பாலாஜி, பிரகாஷ், திரு ஆகிய நால்வரும் வியாழன் இரவுகளில் துபாயில் தெருத்தெருவாக நடந்தே சந்தோஷமாக சுற்றியுள்ளோம். மெல்ல மெல்ல நட்பு obsession-ஆக மாற எனக்கும் பாலாஜிக்கும் இடையே விரிசல்கள் ஆரம்பித்தது.
பொதுவாக எந்த ஒரு உறவு உங்கள் வாழ்க்கையில் ரொம்ப நாட்களுக்கு நீடித்திருக்கிறது என்று ஆராய்ந்தீர்கள் என்றால் இந்த simple truth-ஐ உணரலாம். எந்த உறவில் நீங்கள் நீங்களாக இருக்கிறீர்களோ, எந்த விதமான கட்டுப்பாட்டையோ அல்லது நிர்பந்தங்களையோ உணராமல் இருக்கிறீர்களோ அந்த உறவில் தான் நீங்கள் நெடு நாட்களுக்கு சந்தோஷமாக இருப்பீர்கள். எவ்வளவு தான் அன்பு செலுத்தப்பட்டு, அதே சமயம் ஒரு வித கட்டுப்பாட்டில் இருந்தீர்கள் என்றால், அது தங்கக்கூண்டில் அடைபட்ட கிளியின் நிலை போல, நீங்கள் வெளியே சுதந்திரமாக வரத்துடிப்பீர்கள். எனக்கும் பாலாஜிக்குமான நட்பில் நடந்ததும் அதே தான். இன்றும் சொல்வேன் - என்னை பாலாஜி அளவுக்கு யாரும் நேசித்திருக்க முடியாது. ஆனால் அந்த அளவுக்கதிகமான அன்பு ஒரு விலங்காக மாறிப்போனது தான் துரதிர்ஷ்டம். கடைசியில் உடைத்துக்கொண்டு வெளியேற வேண்டியதாயிற்று. இன்று பாலாஜி எங்கேயிருக்கிறான் என்று தெரியவில்லை. இந்தியா வந்தபின் அவனை தொடர்புகொள்ள செய்த முயற்சிகளுக்கு பலன் இல்லை.
இந்த சமயத்தில் தான் வைத்தியின் healing effect-ஐ உணர்ந்தேன். நம்மை நாமாகவே இருக்கவிட்டு, அதே சமயம் தங்கள் influence-ஐ நம் மீது செலுத்தி நம்முடைய திறமைகளை வெளிவரச்செய்வது சிலருக்கு கிடைத்த வரம். அந்த வரம் வைத்திக்கு கிடைத்திருந்தது. அவர் எனது exclusive நண்பர் இல்லை. ஆனால் ஒரு insecurity-ஐ அவர் கொடுத்ததே இல்லை. என்னைப்போல பலருக்கும் அவரது presence பிடிக்கும். பொருட்களை போலல்லாமல் அன்பு எப்போதும் பகிரும்போது தீர்வதில்லை. மாறாக அது மற்றவர்கள் முலமாக இன்னும் அதிகமாகிறது. இதை நான் உணர்ந்தது வைத்தியின் மூலம் தான். He was nice to me when I was stressed and helped me come out unscathed. So I try to be nice to everybody whom I come across stressed. இதை நான் மற்றவர்களுக்கு சொல்ல / செயலில் காண்பிக்க முயற்சிக்கிறேன் என்றால் அது வைத்தியின் healing effect தான் காரணம்.
பாலாஜி இப்போது எங்கே இருந்தாலும் சந்தோஷமாக இருப்பான் என்று நம்புகிறேன். அவன் வேலையில் மிக கெட்டிக்காரன். அதனால் இந்நேரம் middle level management-ல் மேலே போயிருப்பான். அவன் கொடுக்கும் அளவில்லாத அன்பை தாங்கும் அளவுக்கு நல்ல மனைவி, குழந்தைகள் கிடைத்திருக்க வேண்டும். சில விஷயங்களை கற்றுக்கொள்ள நாம் கொடுக்கும் விலை சற்று கூடுதலாக இருக்கும். உறவில் obsession / possessiveness கூடாது என்பதை புரிந்துக்கொள்ள நான் கொடுத்த விலை - பாலாஜியின் பிரதிபலன் பாராத நட்பு. இனிமேல் என் வாழ்க்கையில் அவன் போன்ற நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள். But that keeps Balaji a class apart from all those I had met.
{oshits} வாசகர்கள், இந்த பதிவை படித்துள்ளனர்!!!