Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Vishnuvardhanபசங்க படத்துக்கு நான் எழுதிய பதிவில் தமிழில் குழந்தைகளை மையப்படுத்தி கடைசியாக வந்த Mainstream தமிழ் படம் “அஞ்சலி” என்று எழுதியிருந்தேன். அதற்கு அனன்யா அக்கா அஞ்சலிக்கு பதிலாக நடிகை லட்சுமி இயக்கிய ”மழலைப்பட்டாளம்” தான் தமிழின் கடைசி குழந்தைகள் படம் என்றும், சந்தர்ப்பம் கிடைத்தால் நான் அதை கட்டாயம் பார்க்கவேண்டும் என்று சொல்லியிருந்தார். நேற்று அதன் DVD-ஐ பார்க்கும் சமயம் கிடைத்தது. கன்னட நடிகர் விஷ்ணுவர்த்தன், சுமித்ரா ஆகியோருடன் ஒரு பெரும் மழலை பட்டாளமே நடித்திருந்த இந்த படம் பயங்கர ஏமாற்றத்தையே தந்தது. படத்தை இயக்கியது பெண் இயக்குநராக இருந்தும் கதாநாயகி “கன்னி”யாக தான் இருக்கவேண்டும் என்ற இலக்கணத்தில் கதை ஆரம்பித்ததுமே புஸ்ஸென்று போய்விட்டது. தன் சகோதரி பிள்ளைகளை தன் பிள்ளையாக வளர்க்கும் சுமித்ராவை, அந்த பிள்ளைகளுக்கே ”அது நம் அம்மா அல்ல” என்று அடையாளம் தெரியவில்லையாம். விஷ்ணுவர்த்தன் மட்டும் 6 பிள்ளை பெற்றவராக இருக்கலாமாம் ஆனால் அவரை கல்யாணம் செய்துக்கொள்ளும் சுமித்ரா மட்டும் கன்னி கழியாதவராக இருக்கவேண்டுமாம். கதாநாயகி அல்லவா? சரி.. பெரியவர்கள் விஷயத்தை விட்டுவிட்டு குழந்தைகள் விஷயத்துக்கு வரலாம் என்று பார்த்தால் எல்லாம் நாடகத்தனமான over acting. விசு அல்லவா இதன் திரைக்கதை ஆசிரியர், பின்னே எப்படி நாடக வாசனையை தவிர்க்கமுடியும்? விஷ்ணுவர்த்தனுக்கு ‘டெல்லி’ கணேஷ் குரல் கொடுத்திருப்பதால், படம் முழுக்க ‘டெல்லி’யே நடித்திருப்பது போன்ற ஒரு தோற்றம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்க ஆரம்பித்திருந்தால் 30 நிமிடத்திலேயே படத்தை நிறுத்தியிருப்பேன். (அகிலாவும் இந்த படத்தை பார்த்துக் கொண்டிருந்தபடியால்) கஷ்டப்பட்டு 2:30 மணி நேரத்தை ஓட்டிவிட்டு, படம் முடிந்தவுடன் ”பசங்க” DVD-ஐ போட்டு damage control-இல் இறங்கினேன். சும்மா சொல்லக்கூடாது... பசங்க... பசங்க தான்.

Related Articles