Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

எனக்கு மிக மிக மிக பிடித்த பாடல்களில் ஒன்று இசைஞானி இளையராஜா இசையில், எஸ். ஜானகியம்மா "காதல் ஓவியம்" படத்துக்காக பாடிய 'நாதம் என் ஜீவனே...' பாடல். ஏனோ அந்த படத்தை இதுவரை நான் பார்க்க முயற்சித்ததில்லை & மற்ற சில பாடல்களை மாத்திரமே பார்த்திருக்கிறேன். இந்த வாரம் வாங்கிய DVD-யில் 'காதல் ஓவியம்' படத்தின் எல்லா பாடல்களும் இருந்தது. இந்த சனி, ஞாயிறுக்குள்ளே 'நாதம் என் ஜீவனே..' பாடலை கிட்டத்தட்ட 20-25 முறை பார்த்திருப்பேன். இந்த பாடலில் இசையை தவிர என்னை கவர்ந்திழுத்த இன்னொரு அம்சம் - ராதா. நான் ராதா நடித்த கடைசிகால படங்களை மட்டுமே பார்த்திருக்கிறேன். 1 இஞ்சுக்கு சாயம் பூசிக்கொண்டு சற்று முத்தலாக இருந்த ப்ளாஸ்டிக் ராதா தான் எனக்கு தெரிந்தது. ஆனால் அம்மணி வந்த புதிதில் தான் மிக அழகாக இருந்திருக்கிறார் என்பது என் இப்போதைய அபிப்பிராயம். மிக அழகான முகவெட்டு, கூர்மையான நாசி, மனதை அள்ளும் புன்னகை, நடையில், பாவனையில் நளினம்.. என பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.


அக்கா கறுப்புத்தான்... இருந்தாலும் களையான பீஸ். பாரதிராஜாவின் மிக பெரும்பான்மையான படங்களில் ராதா தான் கதாநாயகி என்று பின்பு தான் கவனித்தேன். 'அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், ஒரு கைதியின் டைரி, காதல் ஓவியம், வாலிபமே வா வா, முதல் மரியாதை' என பல படங்கள். இன்று வரை எனக்கு ராதா மீது ஒரு அபிப்பிராயம் இருந்தது இல்லை, ஆனால் இந்த பாடலை பார்த்தவுடன் ஒரு காலத்தில் ஏன் அம்மணி கொடிகட்டி பறந்தார் என்பது புரிந்தது. அதில் ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆயிரம் தான் ராதாவை பற்றி கிசுகிசுக்கள் வந்திருந்தாலும், அந்த amazing screen presence-ஐயும், திறமையையும் மறுக்க முடியாது.

எனக்கு பிடித்த இந்த பாடலை Videos பகுதியில் பார்க்கலாம். இதன் வரிகளை எழுதி வைத்து மனப்பாடம் பண்ணியது is definitely worthy. என் ஒரே வருத்தமெல்லாம் இந்த பாடல் சின்னதாக (2:30 நிமிடங்கள்) இருந்துவிட்டது. பெரிய பாடலாக இருந்தால் இன்னும் சந்தோஷமாக அனுபவித்து இருக்கலாம்.

நாதம் என் ஜீவனே
வா! வா! என் தேவனே
உந்தன் ராஜராகம் பாடும் நேரம்
பாலை பாலூறுதே
பூவும் ஆளானதே

இசையை பருகும் சாதக பறவை போல நானும் வாழ்கிறேன்
உறக்கமில்லை இருந்தும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன்
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீ அதில் போவதால் ஏதோ ஞாபகம்
வெண்ணீரில் நீராடும் கமலம்
விலகாது விரகம்...


[youtube:http://www.youtube.com/watch?v=6UFg603f1cI]

குறிப்பாக "விலகாது விரகம்..." வரிகளில் துணிகளை கொடியில் காயப்போட்டுவிட்டு கொடியை பிடித்துக்கொண்டு நடந்தவாறே பாடும்போது, ராதாவின் நடையில் அந்த நாட்டிய நளினம் தூக்கலாக இருக்கும்... Don't miss it.. அந்த 'ஹீரோ' கண்ணன் - he just puts me off. அவரோடு எந்த முன்விரோதமும் இல்லை, ஆனால் அழகான ராதா முன்பு கண்ணன் அவ்வளவு அழகில்லாமல் இருப்பது தனியாக தெரிந்தது.

Related Articles