Tamil
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
{mosimage}நேற்று இரவு DVD-யில் ஸ்ரீதரின் 'நெஞ்சம் மறப்பதில்லை' பார்த்தேன். Definitely a film ahead of its times. முதல் பாதியில் நிறைய காட்சிகளில் வசனங்களே இல்லாமல் முழுவதுமாக visuals-களிலேயே ஓட்டியிருப்பார். குறிப்பாக கதாநாயகன் கல்யாண்குமார் பாழடைந்த பங்களாவுக்கு போகும் காட்சிகளிலும், பூர்வஜென்மத்து நினைவுகள் திரும்பும் கட்டத்திலும். உண்மையிலேயே மிகவும் திகிலாக இருந்தது. Credit Titles-களில் வரும் அந்த Instrumental score காலத்துக்கும் நிற்ககூடியது. எம். என். நம்பியார் 109 வயது கிழவனாகவும் மிரட்டியிருக்கிறார். No wonder nobody else is so menacing like him as a villain. தேவிகாவுக்கு வேலையே இல்லை. The show belongs to Kalyan Kumar and MN Nambiar. 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடல் மிகவும் haunting, 'அழகுக்கும் தமிழுக்கும்..' பாடல் இனிமையான துள்ளல். சவுக்கு தோப்பு காட்சிகளிலும், பூர்வஜென்மத்து க்ளைமேக்ஸில் துரத்தல் காட்சிகளும் தொழிநுட்பம் பெரிதாக வளராத அந்த நாட்களிலேயே இன்றைய (2008) தரத்துக்கு எடுத்து இருக்கிறார். ஸ்ரீதர் என்ற கலைஞனின் முழு Technical வீச்சையும் இந்த படத்தில் பார்க்கலாம். Infact தமிழில் முதல் முதலாக இயக்குனரின் படங்கள் என்று அறியப்பட்டவை ஸ்ரீதரின் படங்கள் தானாம். அதுவரை சிவாஜி படம், எம்.ஜி.ஆர் படம் என்று அறியப்பட்ட படங்களுக்கு நடுவே 'ஸ்ரீதர் படங்கள்' என்று தான் முதன் முதலாக இயக்குனருக்கு முழு credit கிடைத்ததாம். Moserbaer DVD-யில் ரூ. 34/- க்கு கிடைக்கிறது. இது வரை இந்த படத்தை பார்க்கவில்லை என்றால் தயவு செய்து பாருங்கள்.

Related Articles