சில பெண்களை (சரி... நடிகைகளை) திரையில் பார்த்த உடனேயே நமக்கு பிடித்துவிடும். ஒரு சிலரை அவர்கள் நன்றாக நடிப்பதை பார்த்து, அழகாக நடனமாடுவதை பார்த்து பிடித்து போகும். இன்னும் சிலரை அவர்களை பற்றி வரும் செய்திகளின் அடிப்படையில் ஒரு அபிமானமோ இல்லை அருவெறுப்போ கொள்வது சராசரி ரசிகனின் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் எனக்கு ஒரு வளர்ந்து வரும் நடிகையை பார்த்து ரொம்ப பிடித்து போனது அந்த பெண்ணின் சமீபத்திய பட ஸ்டில்களை பார்த்தபிறகு தான். இத்தனைக்கும் அந்த பெண்ணை ஏற்கனவே ஒரு திரைப்படத்தில் பார்த்து சிலாகித்தும் இருக்கிறேன். ஆனால் அந்த பெண் சமீபத்தில் நடித்த தெலுங்கு படத்தின் ஸ்டில்களை பார்த்ததும் தான் இந்த பெண் ஒரு Star material என்று தோன்றியது. அந்தப்பெண் - "கேரளா கபே" படத்தில் நான் முதலில் பார்த்த, இப்போது தெலுங்கில் அறிமுகமாகி பலதரப்பிலிருந்தும் பாராட்டுகளை பெற்றுக்கொண்டிருக்கும் நித்யா மேனன்.
முதலில் எனக்கு நித்யா மேனன் என்ற பெயர் தெரிந்தது மோகன்லால் நடித்த "ஆகாசகோபுரம்' படத்தின் மூலமாக தான். 'ரசதந்திரம்' வெற்றியின் சூட்டோடு சூடாக 'மோகன்லால் - மீரா ஜாஸ்மின்" combination - இல் அறிவிக்கப்பட்டது 'ஆகாசகோபுரம்'. பின் சில காரணங்களால் மீரா ஜாஸ்மினுக்கு பதிலாக 'நித்யா மேனன்' என்ற புதுமுகம் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. இரு பெரும் நடிகர்கள் இணையவேண்டிய படத்தில் புதிய பெண்ணா என்று தோன்றியது. அதற்கு பிறகு 'ஆகாசகோபுரம்' மெதுவாக வளர்ந்து நேரடியாக DVD - இல் ரிலீசாக, நித்யா மேனனின் பெயர் மறந்துபோனது. பிறகு இயக்குனர் சிபி மலையிலின் 'அபூர்வ ராகம்' என்ற படத்தில் நித்யா மேனனின் பெயர் அடிபட்டது. அந்தப்படம் தமிழிலும் வெளியிட முயற்சிக்கப்பட்டு, இரண்டு மொழிகளிலும் பப்படமாக நொறுங்கிப்போனது. இது வரைக்கும் எனக்கு நித்யா மேனன் என்ற பெயர் தான் கேள்விப்பட்டிருந்தேனே ஒழிய, அந்த பெண்ணின் முகத்தை பார்த்ததே இல்லை.
மலையாளத்தின் பிரபல இயக்குனர் ரஞ்சித் தயாரித்து பத்து இயக்குனர்கள் கொண்டு இயக்கிய 'கேரளா கபே' பார்க்க நேர்ந்தது. அதில் 'Happy Journey' என்ற குறும்படம் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தது. சொல்லப்போனால் படத்தின் மிகச்சிறந்த கதை வரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பிடித்தது. இரவு நேரத்தில் தனியாக பஸ்ஸில் பயணிக்கும் இளம்பெண்ணை ஒரு காமாந்தகனான Insurance agent 'ஒதுக்க' முயற்சிக்க, அந்த பெண் சாதாரண பெண்ணல்ல, ஒரு மனித வெடிகுண்டு என்று தெரியவருகிறது. அதில் தனியே பயணிக்கும் 'மனித வெடிகுண்டாக' நடித்த பெண் என் கவனத்தை ஈர்த்தாள். கொஞ்சம் நீண்ட முகம், சுருள் முடி, துறுதுறு கண்கள் என அந்தப்பெண் வசீகரிக்க, யார் என்று இணையத்தில் தேடியபோது அந்தப்பெண் தான் "நித்யா மேனன்" என்று தெரிந்தது.
அதற்கு பிறகு அந்த பெண் தமிழில் (வேறெங்கே?) நடிக்க முயல்வதாக செய்திகள் வந்தன. முதலில் 'காவலன்' படத்தில் கதாநாயகியின் தோழியாக வந்து கதாநாயகனை கவர்ந்து செல்லும் இரண்டாவது கதாநாயகி வேடத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வந்தன. பின்பு நித்யா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பிடிக்கவில்லை என்று விலகிக்கொண்டதாக செய்திகள் வந்தன. பின்னர் சித்தார்த் தமிழில் மீண்டும் நடிக்கும் "180" படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் என்று செய்தி வந்தது. ஆனால் கொடுக்கும் தெய்வம் திடீரென்று தான் பிய்த்துக்கொண்டு கொடுக்குமாம். தெலுங்கில் புதிய பெண் இயக்குனரின் இயக்கத்தில் நித்யா மேனன், நாணி என்ற (கிட்டத்தட்ட) புதுமுக நடிகருடன் நடித்த "அலா முதலாயிந்தி.." இரு வாரங்களுக்கு முன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி sensational hit ஆனது. முகம் நிறைய புன்னகையுடனும், சுருள் முடியுடனும், குறும்பு கண்களுடனும் ஒரே நாளில் ஆந்திராவில் மீடியாவின் Darling ஆனார் நித்யா. அந்தப்படத்தில் நித்யா தனக்குத்தானே டப் செய்துக்கொண்டது மட்டுமல்லாமல், இரண்டு பாடல்களை வேறு பாடியுள்ளாராம்.
வெற்றி வந்தால் தனியே வராதாம். இப்போது கௌதம் மேனன் தயாரிக்கும் 'வெப்பம்' படத்தின் மூலம் தமிழிலும் தனி கதாநாயகியாக களமிறங்குகிறார் நித்யா. 'அலா மொதலாயிந்தி'யின் தமிழ் பதிப்பிலும் இந்தப்பெண்ணே நடிக்கக்கூடும் என்று தெரிகிறது. 'அ. மொ'-வின் வெற்றி இப்போது நித்யாவை மீண்டும் தெலுங்கில் சித்தார்த்துடன் அடுத்த படத்தில் ஜோடி சேர்த்திருக்கிறது. போதாதற்கு மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் பரிசீலனையில் இருக்கிறாராம் இந்தப்பெண். பெங்களூருவில் பிறந்து வளர்ந்ததால் இந்த பெண் ஏற்கனவே கன்னடத்தில் குழந்தை நட்சத்திரமாக ஒரு படமும், 5 வருடங்களுக்கு முன்பு கதாநாயகியாகவும் ’ஜோஷ்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறாராம்.
http://onlinegalatta.com/index.php/jollu-articles/52-girls/543-2013-04-02-00-51-07#sigProId7faffeff44
அந்த சுருள் முடி, முகம் கொள்ளாத சிரிப்பு' என்னுடைய மற்றொரு favourite - ஆன 'பூ' பார்வதியை நினைவுபடுத்தியது கூட இந்த பெண்ணை பிடித்துப்போனதற்கு காரணமாக இருக்கலாம். மலையாளி என்றபோதிலும் இந்த பெண்ணிடம் ஒரு metro look இருப்பது தான் இந்தப்பெண்ணின் பலமும் பலவீனமும் கூட. அதனால் குடும்பப்பாங்கான எளிமையான பெண் வேடங்கள் கிடைக்காமல் போகலாம். எனினும் இந்த தலைமுறை மலையாள நடிகைகள் மலையாளத்தை விட தமிழிலும், தெலுங்கிலும் தான் நடிக்க விரும்புகின்றனர் (எல்லாம் டப்பு தான் சாமி) அதனால் இந்த modern face-ஆல் பெரிய பாதிப்பு எதுவும் இருக்காது இந்த பெண்ணுக்கு. கிட்டத்தட்ட அசினின் career-ம் இப்படி தான் ஆரம்பித்தது. பார்க்கலாம்... இந்த பெண் எந்த அளவுக்கு வளர்கிறார் என்று!!! - {oshits} வாசிப்புகள்.