எனக்கு சமீபத்தில் சில நாட்களாக "எங்கேயும் எப்போதும்" ஜுரம் பிடித்துள்ளது. YouTube-ல் இந்த படத்தில் டிரைலர், ஜெய் - அஞ்சலி வரும் காட்சிகள், அஞ்சலியின் பேட்டி, "சொட்ட சொட்ட", "மாசமா ஆறு மாசமா", "உன் பேரே தெரியாது" என இந்த படத்தின் காட்சிகளாக எனது மொபைலில் பதிவிறக்கம் செய்து பயணிக்கும்போது பார்த்து வருகிறேன். இந்த படம் பார்த்த உடனேயே மிகவும் பிடித்து போனது - குறிப்பாக அஞ்சலி எல்லாரையும் பின்னுக்கு தள்ளிவிட்டு ஈசியாக நல்ல பேரை தட்டிச்சென்று விட்டார். பின்னர் படத்தின் காட்சிகளை திரும்ப திரும்ப பார்க்கும்போது அனன்யாவை ஆவென்று வாய் பிளந்து பார்க்க தோன்றுகிறது. இதற்கப்புறம் தான் படத்தின் டிரலரையே பார்த்தேன் - அனன்யாவின் வெண்கல குரலில் கிசுகிசுப்பாக "எனக்கு புடிச்சவர தேடி வந்திருக்கேன்... என்னை தேடி அவர் இங்கே வருவாரு... அதுக்காக தான் வெயிட் பண்றேன்.. அதுவும் ரொம்ப நேரம் இல்லை... இந்த பஸ் கிளம்புற வரைக்கும் தான்.." என்று "சொட்ட சொட்ட.." பாடல் BGMல் மேலும், "கண்டிப்பா அவரு வருவாரு... எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு" என்று சொல்லும்போது adrenalin rush ஜிவ்வென்று அதிகமாகிறது எனக்கு. "அனன்யா.... நான் இங்கே இருக்கேன்"நு கத்த தோன்றுகிறது!!!!!!
அனன்யா
அனன்யா - எனக்கு இந்த பெண்ணை "நாடோடிகள்" பார்த்தபோது பிடித்திருந்தது.. செம Cute.. ஆனால் சமீபத்தில் தொடர்ச்சியாக - விஜய் டி.வியில் "சீடன்", அதற்கு முதல் நாள் "எங்கேயும் எப்போதும்" என்று பார்த்தபோது திடீரென்று அந்த பெண்ணின் தலையில் ஒளிவட்டம் வந்து தேவதை ஆகிவிட்டது போல தோன்றியது. அதுவும் "எங்கேயும் எப்போதும்" படத்தில் இந்த பெண்ணை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. செம குடும்பப்பாங்காக, துறுதுறுவென்று பேசும் கண்களோடு... அனன்யா மலையாளி என்று மட்டும் தெரியும். அதுவரை ஆனஞாவின் பின்புலம் பற்றி அறிந்துக்கொள்ள இல்லாத ஆர்வம் திடீரென்று கரைபுரண்டோடியாது :-)
இணையத்தில் தேடியபோது இந்தப்பெண் பிரபல மலையாள தயாரிப்பாளர் ஒருவரின் மகள் என்றும், 1995-ல் குழந்தை நட்சத்திரமாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்று தெரிந்தது. பின்னர் எஷியாநெட் டி.வியில் ஒரு Reality Show-வில் பங்கு பெற்ற பிறகு பட வாய்ப்புகள் வார ஆரம்பித்ததாம். ஆனால் பத்திரிகையாளர் ஆவதே தனது லட்சியம் என்று கூறி பட வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம். பின்னர் நடித்து பார்க்களாமே என்று 2008-ளில் ஜெயசூர்யாவுடன் "பாஸிட்டிவ்' என்ற படத்தில் அறிமுகமானாராம். மலையாளத்தில் இப்போதெல்லாம் கதாநாயகிகள் தமிழில் வெற்றிபெற்றால் மட்டுமே அங்கும் கவனிக்கப்படுகிறார்கள். "நாடோடிகள்" படத்தின் வெற்றி மலையாளத்தில் அனன்யாவுக்கு புது நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தி தந்தது. மோகன்லால் மகளாக "ஷிக்கார்" என்ற படத்திலும், குஞ்சாக்கோ போபனுடன் "டாக்டர் லவ்" என்ற படத்திலும் நடித்த அனன்யாவுக்கு அடித்த ஜாக்பாட் என்றால் அது "எங்கேயும் எப்போதும்" தான்.
http://onlinegalatta.com/index.php/jollu-articles/52-girls/571-2013-04-02-00-30-16#sigProId473fe63d52
இந்த படத்துக்கு முதலில் ஒப்பந்தமான விமலும், அமலா பாலும் தங்கள் கதாபாத்திரங்கள் ஜெய் - அஞ்சலி ஜோடியால் இருட்டடிக்கப்படும் என்று சொல்லி விலகிவிட, அவர்களுக்கு பதிலாக தெலுங்கு நடிகர் ஷர்வானந்தும், அனன்யாவும் கொண்டுவரப்பட்டனர். இந்த அழகான படத்துக்கு இவர்களை விட பொருத்தமான நடிகர்கள் கிடைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. This is a blessing in disguise. "எங்கேயும் எப்போதும்" படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கும்போது ஷர்வானந்தும் அனன்யாவும் மிக பாந்தமாக உள்ளனர் மற்றும் அவர்களது subtle காதல் கதை மிக அழகாக தோன்றுகிறது. இன்னும் கொஞ்ச நாளுக்கு எனக்கு "எங்கேயும் எப்போதும்" மற்றும் அனன்யா ஜுரமும் இருக்கும். I am not complaining :-)
சமீபத்தில் நான் கேட்ட நவீன இலக்கியம் என்னவென்றால் அது இந்த கவிதை தான்.
நம்பவில்லை..
நம்பினேன்..
ஏன் நம்பவில்லை?
எதற்காக நம்பினேன்?
நம்பியதற்கும்.. நம்பாததற்கும்
காரணம் உண்டோ?
உண்டு...
நம்பிக்கை தான் வாழ்க்கை...
ஹி..ஹி... “உன் பேரே தெரியாது..” பாடலின் இடையில் வரும் இந்த கவிதை தான் அனன்யாவின் குரலில் வாசிக்கப்பட்டதால் தலைசிறந்த நவீன இலக்கியமாக மாறியது.