எப்போதெல்லாம் ஊடகங்கள் ஏதாவது காதல் கதையை ஆஹா ஓஹோ என்று பாராட்டித் தள்ளுகின்றனவோ அவற்றை பார்க்காமல் தவிர்த்துவிடுவேன். உதாரணம் - சேது, காதல், பருத்திவீரன். காரணம் அவை பயங்கர depressing-ஆக இருப்பது தான். துயரமாக முடிந்தால் தான் காதல் கதைகள் மனதில் பதியும் என்று சொல்லி “லைலா-மஜ்னு, தேவதாஸ், அம்பிகாபதி - அமராவதி” என்று உதாரணம் காட்டுவார்கள். உண்மையில் எத்தனை பேருக்கு லைலா மஜ்னு, அம்பிகாபதி கதைகள் தெரியும்? சமீபத்தில் அனைவராலும் ஏகமனதாக பாராட்டப்பட்ட "மைனா” படத்தை கொஞ்சம் திகிலோடு தான் பார்க்க அமர்ந்தேன். பாதி படத்தை பார்க்கும்போது ஏகப்பட்ட cliche-க்கள். குழந்தை பருவத்து நண்பர்கள் காதலர்களாவது “பருத்திவீரனை” நினைவுபடுத்தியதால் முடிவும் அதுபோல துயரமானதாக இருக்கும் என்று முடிவு கட்டிக்கொண்டு பார்க்க ஆரம்பித்தேன்.
எனக்கு ஒரு சந்தேகம் - கிராமத்து காதல் கதைகள் என்றால் ஏன் எல்லாரும் உறுமிக்கொண்டே இருக்கின்றனர்? பருத்திவீரனிலும் சரி, மைனாவிலும் சரி கிட்டத்தட்ட ஒரே மாதிரியான காட்சியமைப்புக்கள் என தோன்றியது. கரண்ட் இல்லை என்பதால் கதாநாயகி படிக்கவேண்டும் என்று சைக்கிள் டைனமோ விளக்கை ஓட்டுவது காமெடியாக இருந்தது. அப்போது நான் “ஒரு கை நிறைய மின்மினிப் பூச்சிகளை பிடித்து வைத்து அந்த வெளிச்சத்தில் படிக்க வைப்பது போல காட்டியிருந்தால் இன்னும் fancy-ஆக இருந்திருக்குமே” என்று நினைத்தேன். மின்மினி பூச்சிகள் பிடிபடும் பட்சத்தில் வெளிச்சம் கொடுப்பதை நிறுத்திவிடும். இருந்தாலும் சினிமாவில் யார் லாஜிக் பார்க்கிறார்கள்? ஆச்சரியம்!!! அடுத்த காட்சி அதுபோல இருந்தது. இது போன்ற amateurish காட்சிகளை தவிர்த்து பார்த்தால் படம் வித்தியாசமாக இருந்தது.
கதையின் இரண்டாவது பகுதியில் நம்மை அறியாமலேயே கதையின் உள்ளில் இழுக்கப்படுகிறோம். காட்டுக்குள் பயணிக்கும் கதையில் கதாபாத்திரங்களின் மற்ற பரிமாணங்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட, அவை சுவாரசியமாகவும் உள்ளது. முடிவு - பார்ப்பவர்களின் கண்ணில் கண்ணீரை வரவழைக்காவிட்டாலும், தொண்டையை அடைப்பது நிச்சயம். போலீஸ்காரரின் மனைவி பின்னால் ஏற்படுத்தப்போகும் பாதிப்பை அவ்வப்போது மெலிதாக கோடிட்டு காட்டியிருப்பது புத்திசாலித்தனம்.
நான் இது போன்ற “சோக” காதல் கதைகளை தவிர்ப்பதற்கு காரணம் உண்டு. கஷ்டப்படும் மனிதர்களுக்கு பின்னாளில் சந்தோஷம் கிடைக்கவேண்டும் என்பது தான் poetic justice என்பது எனது நம்பிக்கை. இது போன்ற துயரத்தில் முடியும் காதல் கதைகள் “novelty"-ஆக வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் அவை வாழ்க்கை மீது பார்வையாளர்களின் நம்பிக்கையை சிதைத்துவிடும். காதலர்கள் இணையாமல் இருப்பது தான் “உண்மையான” காதலுக்கு அடையாளம் என்று தங்களை இலக்கியவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் எழுத்தாளர்களும், இயக்குநர்களும் நம்புவது ஒருவித pessimism-ஐ காட்டுவதாக எனக்கு தோன்றுகிறது. (மறைந்த) இயக்குநர் லோகிததாஸ் தனது படமான கஸ்தூரிமானில் இறுதியில் கதாநாயகனும் கதாநாயகியும் கட்டியணைத்துக்கொள்ள ஓடிவருவதாகவும் ஆனால் ஒருவரின் கைகளில் மற்றவர்கள் விழும் முன்பே still செய்து பெயர்களை ஓடவிடுவதற்கு காரணம் சொன்னார் - ”இணையும் காதலர்களை விட, இணையாத காதல் தான் பார்வையாளர்களுக்கு அதிக தாக்கம் ஏற்படுத்தும்”. எனக்கு அது அபத்தமாக பட்டது.
படத்தின் கதாநாயகன் சுகுமார் (அது தாங்க.... ஒளிப்பதிவாளர்) கைவண்ணத்தில் படம் கண்ணுக்கு குளிர்ச்சியை மட்டுமல்லாமல், நம்மை லொக்கேஷனில் இருப்பது போல ஒன்ற வைத்துவிடுகிறார். பெரியகுளம் பகுதி இவ்வளவு அழகா? இத்தனை வருடங்களாக எனக்கு தெரியவில்லை. அதுபோல நான் இன்னும் மூணாறுக்கு போகாதது இந்த படத்தை பார்த்த பின்பு ஒரு குற்ற உணர்ச்சியாகவே உருவெடுத்துவிட்டது. படத்தின் மிகப்பெரிய பலம் - ஒளிப்பதிவு.
அடுத்த பலம் என்று சொன்னால் - ”மைனா” அமலா பால். இந்த பெண்ணின் முந்தைய படமான “சிந்து சமவெளி” என்ற பலான படத்தையும் பார்த்திருக்கிறேன். சொல்லப்போனால் அந்த படத்திலேயே இந்தப் பெண் நன்றாக நடித்திருந்தார். “மைனா’ போன்ற author backed கதாபாத்திரம் கிடைக்கும்போது தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். இது போன்ற படங்களில் கதாநாயகன் இப்படி தான் இருக்கவேண்டும் என்று “பருத்திவீரன்” template-ல் கதாநாயகன் விதார்த் படைக்கப்பட்டு இருப்பதால் ஒன்னும் பெரிதாக impression ஏற்படுத்தவில்லை. போலீஸ் சூப்பரிண்டெண்டண்ட்-ஆக வரும் நடிகர் நல்ல நடிப்பு. அவரது கதாபாத்திரம் அழகான படைப்பு. படத்தின் மிகப்பெரிய பலவீனம் என்றால் - இசை. கிராமத்து படத்துக்கு synthetic இசை.
அமலா - மலையாளத்தில் துணை நடிகையாக கும்பலில் (உதாரணம் - லால் ஜோஸின் ‘நீலத்தாமரை’) கோவிந்தா போட்டுக்கொண்டிருந்த இந்த பெண்ணுக்கு அதிர்ஷ்டம் கோடம்பாக்கத்தில் அடித்துள்ளது. பார்க்க மிக சுமாராக, கன்யாகுமரி மாவட்டத்து கிறுஸ்துவ பெண் போல, இருக்கும் இந்த பெண் இன்னும் grooming செய்தால் star material-ஆக ஜொலிக்கிறார். உதாரணம் - இந்த பெண் சமீபத்தில் புழக்கத்தில் விட்டிருக்கும் portfolio. ஏனோ modern dress-ல் தீபிகா பதுகோனை நினைவு படுத்துகிறார். விக்ரமின் அடுத்த படத்தில் ஜோடி, லிங்குசாமியின் படத்தில் தமன்னாவுக்கு பதிலாக அமலா என்று இந்த பெண்ணின் career graph ஏறுமுகத்தில் உள்ளது. இந்த சமயத்தில் இந்த பெண் முன்பே ஒத்துக்கொண்ட பல B-Grade படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து ஏற்படுத்தும் சங்கடத்தை எப்படி சமாளிக்க போகிறாரோ?
http://onlinegalatta.com/index.php/jollu-articles/52-girls/524-2013-04-02-00-02-29#sigProIde88ea46372