ஆண்டிராய்டு மற்றும் ஐபோன் உபயோகிப்பவர்களில் தமிழ் ஆர்வலர்கள் பலர் உண்டு. பேஸ்புக்கிலும், சாட்களிலும், குறுஞ்செய்திகளிலும் தமிழை உபயோகிக்க விரும்புபவர்களுக்கு கிடைத்துள்ள ஒரு உபயோகமான செயலி செல்லினம். முத்து நெடுமாறன் என்ற நண்பர் உருவாக்கியுள்ள இந்த செயலி உபயோகிக்க எளிதானது மட்டுமல்ல, இலவச மென்பொருளாகவும் கிடைக்கிறது. வாருங்கள்... தமிழை இனி செல்போனிலும் பழகலாம். ஒரே ஒரு குறை.... தட்டச்சு செய்த பின்பு முந்தைய வார்த்தைகளை மாற்றவோ இல்லை இடைச்செருகல் செய்யவோ முயன்றால் கர்ஸர் தானாக வெவ்வேறு இடங்களுக்கு சென்று தட்டச்சு செய்யப்பட்ட வார்த்தைகளை 'உடைத்து' விடுகிறது.