Other Topics
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Tamil in Facebook Appஅபுதாபியிலே இருந்தபோது ரொம்ப நாளைக்கு நான் ஒரு நோக்கியா ‘கல்’ மொபைல் வச்சிருந்தேன். அப்போ எனக்கு மொபைல் மேலே அவ்ளோ craze எல்லாம் இல்லை. அப்புறம் அபுதாபியிலே இருந்து இந்தியாவுக்கு வந்தப்போ அபுதாபி ஞாபகமா ஒரு Sony Ericcson w700i வாங்கிட்டு வந்தேன். அப்புறம் அது தொலைஞ்சப்போ தற்காலிகமா ஒரு நோக்கியா 1100 வாங்கினேன். ஆனா அது எனக்கு ரொம்ப பிடிச்சுபோச்சு. காரணம் அதிலே இந்திய மொழிகள் enable செய்யப்பட்டு இருந்தது. அதனாலே நான் என்னோட மொபைலிலே தமிழ்-ஐ main language-ஆக வச்சிருந்தேன். மத்த advanced model-உம் எதிலேயும் தமிழ் இல்லாததால கிட்டத்தட்ட 2 வருஷம் அதே மொபைலேயே வச்சிருந்தேன். அப்புறம் இன்னொரு மொபைலும் தொலைஞ்சதால இந்த தமிழ் மொபைல் இன்னுமொரு வருஷம் கூட இருந்தது. லண்டன் போன ஞாபகார்த்தமா என்னோட முதல் Smartphone-ஐ வாங்கினேன்.

Foreign-ல வாங்குற மொபைல்களிலே Arabic, German, Russian-ன்னு பல மொழிகள் இருந்தாலும், இந்திய மொழிகளை யாரும் கண்டுக்குறது இல்லை. அப்புறம் தான் தெரிஞ்சுது - Android-ல Unicode language support இல்லைங்குறது. அதனால அந்த மொபைலும் தொலைஞ்சதும் அதே மாடல் இந்தியா தயாரிப்பா வாங்கினேன். இதிலேயும் இந்திய மொழிகள் இல்லை. Facebook, Browser, Twitter application எல்லாத்துலேயும் தமிழ் எழுத்துகள் எல்லாம் கட்டம் கட்டமா வந்துட்டு இருந்துச்சு. அதனால மொபைல் மூலமா tweet பண்ணும்போது ஆங்கிலத்திலேயே type பண்ணிட்டு இருந்தேன்.

என்னோட electronic gadgets update எல்லாமே யதேச்சையா திடீர்னு நடக்கறது தான். என்னோட Amazon Kindle-ல தமிழ் உரு ஏற்றிய கதையை படிச்சிருப்பீங்க. இதுவும் அதே போல நடந்தது தான். கடந்தவாரம் சேலத்துல இருந்து பெங்களூரு வந்தப்போ காலை 4:00 மணி. தூக்கம் கலைஞ்சுபோயிட்டதால என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தப்போ திடீர்னு மண்டைக்குள்ளே Android-னு மணி அடிச்சுது. என்னோட மொபைல்ல Android Froyo OS இருந்துச்சு. அடுத்த பதிப்பான Gingerbread கிடைத்ததால் மொபைலை upgrade செய்தேன். அதிலே Facebook application-ஐ திறந்தப்போ அதிலே தமிழ் எழுத்துகள் தெரிந்தது. Browser-ல தினமலர் வலைமனையை திறந்தப்போ அதிலேயும் தமிழ் எழுத்துக்கள் கட்டம் கட்டாமல் தெளிவாக தெரிந்தது. இந்த OS-ல் Unicode support உள்ளது என்று தெரிந்ததும் எனது அடுத்த வேலையை ஆரம்பித்தேன்.

தமிழ் keyboard ஒன்றை நிறுவியதும் தமிழிலேயே message அடிக்க முடிந்தது. KM Tamil Keyboard என்று Android Market-ல் தேடிப்பாருங்கள். அதை நிறுவிவிட்டு Text area-வில் “Input Method"-ல் “KM Tamil Keyboard" என்று தேர்வு செய்துவிட்டு, தமிழை ஆங்கிலத்தில் type அடிப்பது போலவே அடித்துவிட்டு 'Conv' என்ற button-ஐ அழுத்தினால் ஆங்கிலத்தில் type செய்யப்பட்டது தமிழில் மாறிக்கொள்ளும். Google Transliterator / NHM Writer - ஆகியவற்றை ஏற்கனவே உபயோகித்தவர்களுக்கு இது ஒரு புதுவிஷயமே இல்லை. மற்றவர்களுக்கும் இதில் எந்த கஷ்டமும் இல்லை. ஒரே பிரச்சினை - தமிழ் வார்த்தைகளுக்கு நடுவே ஆங்கில வார்த்தைகள் / எழுத்துகள் வேண்டுமென்றால் அதை மட்டும் கடைசியில் type செய்துவிட்டு ‘Conv" அழுத்தாமல் விட்டுவிடவேண்டும். உபயோகிக்கும்போது உங்களுக்கு புரியும்.

இப்போது எனது மொபைல் ஒரு தமிழ் மொபைலாக மாறிக்கொண்டு இருக்கிறது. பெயர்களை எல்லாம் தமிழில் மாற்றியாயிற்று. நீங்கள் gmail contacts-ஐ இதிலே sync செய்பவராக இருந்தால் gmail-லேயே NHM Writer கொண்டு தமிழில் மாற்றிவிட்டால் உங்கள் Android Phone-லும் மாறிக்கொள்ளும். Sync செய்யும் பழக்கம் இல்லை என்றாலும் ஆங்கிலத்தில் உள்ளதை சிறிய மாற்றங்களோடு ‘Conv"அழுத்தி மாற்றிக்கொள்ளலாம். கீழே உள்ள screenshot-களை பார்க்கும்போது உங்களுக்கு ஒரு idea கிடைக்கும்.

Related Articles