Architecture
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Dharasuram Templeதாராசுரம் - தஞ்சையை போலவே எனக்கு ரொம்ப நாள் தண்ணி காட்டிக்கொண்டு இருந்த கோவில். முதல் முறையாக இதன் பெருமையை எனது UK நண்பர் திரு. இயான் வாட்கின்சன் (Ian Watkinson) மூலம் தான் அறிந்தேன். கேரளா சுவரோவியம் (Murals) வகுப்புக்கு இருவரும் சென்றிருந்தபோது எனக்கு சிற்பக்கலையின் மீது ஈடுபாடு உள்ளதை தெரிந்துக்கொண்டு அவர் தாராசுரம் கோவில் பற்றி சொன்னார். அன்றிலிருந்து எனக்கு அந்த கோவிலுக்கு போகவேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. ஒரு முறை தஞ்சைக்கு போகும்போது தாராசுரத்துக்கும் போகவேண்டும் என்று பலமுறை யோசித்து இருக்கிறேன். கடைசியாக தாராசுரம் போனது மிக மிக அழகான அனுபவமாக விரிந்தது. காரணம் - எனது கல்லூரித் தோழன் LMS உடன் போனது தான். அடுத்த நாள் நாங்கள் கங்கைகொண்டசோழபுரத்துக்கும் போனோம். இந்த பதிவு இந்த இனிய பயணத்தை பற்றியது.

Dharasuram

தாராசுரம் - கும்பகோணத்துக்கு மூன்று கி.மீ தொலைவில் உள்ள கிராம பஞ்சாயத்து. தனக்குள்ளே ஒரு தன்னிகரில்லாத கலை பொக்கிஷத்தை சுமந்துக்கொண்டு இருக்கிறோம் என்ற பந்தா துளியும் இல்லாமல் எளிமையாக ஒரு High way ஓரத்து கிராமம் போல அமைதியாக இருக்கிறது. அங்கே யாரிடமும் கேட்டாலும் 'ஐராவதேசுவரர் கோவில்' அங்கே இருக்கிறது என்று கைகாட்டுகிறார்கள். UNESCO மற்றும் ASI (Archeological Socitey of India) புண்ணியத்தில் அழகாக வேலியிட்டு, சுத்தமான புல்தரையுடன் காட்சியளிக்கும்போதே மனசுக்குள் சந்தோஷமாக இருக்கிறது.

இந்திரனின் யானையான ஐராவதம் வணங்கிய கடவுள் என்பதால் இங்கு ஈசன் "ஐராவதேசுவரர்" என்று அழைக்கப்படுகிறார். உலகத்துக்கே சாவை தீர்மானிக்கும் யமராஜனுக்கும் தீராத உடம்பு எரிச்சல் வந்தபோது இந்த கோவிலின் தீர்த்தத்தில் நீராடி குணம் பெற்றதால் இதனை 'யம தீர்த்தம்" என்று சொல்கிறார்கள். இந்த கடவுளை ராஜராஜ சோழனும், கரிகால சோழனும் வணங்கி அருள் பெற்றதாக வரலாறு.

இந்த கோவில் தஞ்சை கோவிலின் நடையை (style)-ஐ ஒத்திருந்தாலும், அளவில் தஞ்சை கோவில் மற்றும் கங்கைகொண்டசோழபுரம் கோவிலை விட மிக சிறியது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்பது போல சிற்ப விவகாரத்தில் தஞ்சை பெரிய கோவிலுடன் மல்லுக்கு நிற்கிறது இந்த "தென்னிந்திய கோனார்க்". ஒரிசாவில் உள்ள கோனார்க் கோவில் ஒரு ரதம் / தேர் போன்ற உருவத்தில் உள்ளது. தாராசுரம் கோவில் கூட இது போல தேர் வடிவத்தில் தான் உள்ளது. அதனால் தான் இதை தென்னிந்திய கோனார்க் என்று சொன்னேன். இந்த தேர் வடிவம் சிதைந்திருந்ததாம். இதனை ASI தான் மீண்டும் பொருத்தினார்கலாம்.



வழக்கமாக கோவில்களில் காணப்படும் தூண்கள் போல அல்லாமல், தாராசுரத்தில் தூண்கள் அத்தனையும் மிக அழகாக, நுணுக்கமான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதனால் தான் சொன்னேன் - இந்த கோவில் கலை விரும்பிகளின் கனவு (Art lovers delight). இந்த சின்ன கோவிலையே நாள் முழுக்க நின்று அலுக்காமல் பார்த்தாலும் மலைப்பு தீராது.

என்னை கவனத்தை ஈர்த்த சில சிற்பங்கள் - சிங்க உடம்பு, யானை துதிக்கையும் கொண்ட வித்தியாச மிருகத்தின் வடிவில் செய்யப்பட தூண்கள். எல்லா தூண்களிலும் ஒரே Theme போல ஒரு வட்டத்துக்குள்ளே உருவாக்கப்பட்ட தூண் சிற்பங்கள் - உடம்பை வில் போல வளைத்து நடனமாடும் பெண் (குறத்தி போலும்), அதுபோல மற்றவர்களின் கைகால்களை பிடித்துக்கொண்டு வில்போல வளைந்து நிற்கும் பெண்கள், கர்ப்பிணிக்கு மேல்வயிற்றில் அழுத்தம் கொடுத்து பிரசவம் பார்க்கும் தாதிப்பெண்கள் என கூர்ந்து கவனித்தால் உங்கள் சிந்தையை மயக்கும் சிற்பங்கள் ஏராளம். பின்பு விக்கிபீடியாவில் தேடியபோது அந்த வட்ட Theme - தாமரை தண்டு என்று அறிந்தேன். இந்த சிற்பங்கள் அந்நாளைய தமிழர் வாழ்வை பிரதிபலிப்பதாக உணர்கிறேன். அதுபோல இந்த கோவிலில் மிக நிறைய நடன மங்கைகளின் சிற்பங்கள் உள்ளன. சொல்லப்போனால் இந்த நடன பெண்மணிகள் சிற்பங்கள் ஒரு கட்டத்துக்கு மேல் கொஞ்சம்... கொஞ்சூண்டு அலுப்பு தட்டுவதாகவே உள்ளது.

இந்த கோவிலில் புத்த மதம் குறித்த சில குறிப்புகள் உள்ளனவாம். நாங்கள் சென்ற தினத்தில் அந்த புத்த சிற்பங்களை படமெடுக்க ஒரு ஆராய்ச்சி மாணவர் வந்திருந்தார். அம்மன் கோவிலின் பிரகாரத்தில் அமர்ந்து பார்த்தால் எதிரே பிரகாரத்தின் தூண்களின் symmetry - ஒ கொள்ளை அழகு. முட்டாள் தனமாக இம்முறை கிளம்பும்போது கூடுதல் பேட்டரியை கொண்டுபோகாததால், என் கேமிரா "Low Battery" என்று காட்டியபோது தவித்து போய் மிக குறைவாக தான் புகைப்படம் எடுக்க முடிந்தது. அடுத்த முறை இந்த கோவிலுக்கு மீண்டும் வரவேண்டும் என்பதற்கு இதை விட வேறு நல்ல காரணம் கிடைக்குமா?

கோவிலின் எதிரே ஒரு முழுமையாகாத நுழைவாயில் உள்ளது. இந்த ஐராவதேசரின் கோவில் நுழைவு வாயில் மாமல்லபுரம் கோவிலின் நுவைவு வாயில் போல சற்று தாழ்வாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒருவேளை UNESCO அல்லது ASI - இன் அமைப்பாக இருக்கலாம். தாராசுரம் ஐராவதேசுவரர் கோவிலுக்கு மீண்டும் செல்ல ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். இம்முறை நானும் LMS - உம் அவனுடைய இருசக்கர வாகனத்தில் சென்றோம். காவிரி படுகையில் அமைந்த தஞ்சை தரணியின் பசுமையை இது போன்ற பயணத்தில் தான் அனுபவிக்க முடியும் என்று தோன்றியது.

Related Articles