நமது வாழ்க்கையில் எவ்வளவோ மனிதர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் அவர்கள் நம் வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் தனது முத்திரையை பதித்துவிட்டு போயிருப்பார்கள். பின்னோக்கி திரும்பி பார்க்கும்போது "ஒருவேளை இவர்கள் இல்லையென்றால்.." என்று யோசிக்கும் அளவுக்கு இருக்கும். இது போன்ற மனிதர்களை பற்றி ஏற்கனவே ஒரு பதிவு - எங்கிருந்தோ வந்தான் - போட்டிருக்கிறேன். இந்த பதிவும் அதன் தொடர்ச்சி என்று எடுத்துக்கொள்ளலாம்.
நான் அந்த புது கம்பெனியில் புது புராஜெக்டில் சேர்ந்தவுடன் மற்ற Team member-களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. எனக்கு பல profile-கள் அனுப்புவார்கள். நான் அவர்களை interview செய்து முடிவு செய்வது வழக்கம். அப்படி செய்யும்போது ஒரு பெண் ஊழியரின் profile எனக்கு வந்தது. நான் அவரிடம் பேசியபோது அவருக்கு Technical skill குறைவாக இருப்பது தெரிந்தது. ஆனால் அவருக்கு Sales experience இருந்ததால் அவரது குறைகளை அழகாக பேசி மறைக்க கற்றுக்கொண்டிருந்தார். ஆனால் நான் Technical skills-ஐ கூடுதல் மதிப்பவனாதலால் அவரை நிராகரித்துவிட்டேன்.
எங்கள் project-க்கு client side-ல் இருந்து நெருக்கடி வந்தது. சீக்கிரம் ஒரு புது team member சேர வேண்டும் என்று. அதனால் எனது manager அந்த பெண் ஊழியரின் case-ஐ மீண்டும் எடுக்க சொன்னார். அவரை client interview-க்கு அனுப்பலாம் என்றும், ஒருவேளை client அவரது technical skills-ஐ பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் communication skills-க்கு மதிப்பு கொடுத்து அதற்கேற்ற assignment-ஐ கொடுத்தால் எடுத்துக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. அதே போல அவருக்கு client interview-ம் கொடுக்கப்பட்டு அவர் தேர்வு செய்யப்பட்டார். சில தினங்களில் அவர் எங்கள் project team-ன் member ஆனார். அவர் பாதி தமிழர் ஆதலால் மிக சீக்கிரமாக எனது நண்பர்கள் வட்டாரத்தில் ஒருவராக அந்த தோழி ஆனார். நான் அவ்வப்போது அவரிடம் "உன்னை வேண்டாம்னு ஒதுக்கினாலும் இப்படி ஒன்னாக வேண்டியது என் தலையெழுத்து" என்று சொல்லி கேலி செய்வது வழக்கம். அவரும் "என் தலையெழுத்து உன் கிட்டே வந்து மாட்டனும்னு" என்று பதிலடி கொடுப்பார். சில மாதங்களுக்கு பிறகு எங்கள் project முடிவுக்கு வந்தது. அவரும் நானும் வெவ்வேறு project-களுக்கு நகர்ந்துவிட்டோம்.
எனது அடுத்த project-ல் இருந்து வெளியே வந்தபோது மிக யதேச்சையாக அந்த தோழி அழைத்திருந்தார். நான் அப்போது அவரிடம் இந்த project-ல் இருந்து வெளியேறிவிட்டேன் என்று சொன்னேன். அதற்கு அவர் தனக்கு ஒரு Australia based project-ல் offshore team-ல் அழைப்பு வந்திருப்பதாகவும் ஆனால் தான் Lead position-க்கு முயற்சித்துக் கொண்டிருப்பதால் அந்த project-ல் தனக்கு ஈடுபாடு இல்லை என்றும், எனக்கு ஆர்வம் இருந்தால் எனது profile-ஐ forward செய்வதாகவும் சொன்னார். அந்த project-ல் அதிர்ஷ்டம் இருந்தால் 3-4 மாதங்கள் onsite கிடைக்கலாம் என்றும் சொன்னார். எனது Australia Visa முடிவுக்கு வருவதால் இதை பயன்படுத்திக்கொண்டு extension-க்கு முயற்சிக்கலாம் என்றும் தோன்றியது. அவர் எனது profile-ஐ forward செய்தார்.. நானும் அந்த project-ல் சேர்ந்தேன்.
சில மாதங்களில் எனக்கு Australia-க்கு பயணம் செய்ய நேர்ந்தது. எனக்கு பாரமாக இருந்த வீட்டுக்கடனின் ஒரு பாகத்தை திரும்ப செலுத்தி கொஞ்சம் ஆசுவாசம் வந்தது. இந்த சில மாத தனிமை வாழ்க்கையை ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்க வைத்தது. நான் ஆஸ்திரேலியா கிளம்பியபோது எனது வாழ்க்கையில் ஒரு சூறாவளியே அடித்துக்கொண்டிருந்தது. அந்த சூழலில் இந்த தனிமை என்னை காப்பாறியது. பின்னர் மீண்டும் திரும்பியபோது ஓரளவுக்கு எல்லா பிரச்சனைகளும் ஓய்ந்திருந்தன. எனக்கு வழிகாட்டிய அந்த தோழி பின்னர் எங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி வேறு ஒரு product based company-ல் IT Manager-ஆக சேர்ந்துவிட்டார்.
அவரை நான் நிராகரித்தபோது அவர் வேறு project-க்கு போயிருக்கலாம். இல்லை project-ல் வந்த பிறகு தானுண்டு தன் வேலையுண்டு என்று ஒட்டாமல் இருந்திருக்கலாம். Project-ல் இருந்து வெளியேறிய பிறகு தொடர்பில் இல்லாமல் போயிருக்கலாம். இல்லை என் பிரச்சனையில் தனக்கு என்ன பங்கு என்று ஒதுங்கியிருக்கலாம். ஆனால் அவர் திடீரென்று என் வாழ்க்கையில் வந்து எனக்கு ஒரு நன்மையும் செய்துவிட்டு ஒதுங்கியும் போய்விட்டார். அவர் காலத்தால் செய்த உதவி நிச்சயம் மிகப்பெரியது. அவர் எனக்காக தியாகம் எல்லாம் செய்யவில்லை என்ற போதும் அவர் உதவி செய்த சமயம் பயங்கர perfect. இந்த நிகழ்ச்சியை திரும்பி பார்க்கையில் எனக்கு கொஞ்சம் பிரமிப்பாகவே உள்ளது. கடவுள் மனிதர்களை படைத்தபோதே ஏதோ ஒரு வகையில் நமது பாதைகளை இணைத்து வைத்துவிடுகிறார் போல. அந்த தோழிக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.