Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Confused

பிரசவ வேதனை பெண்களுக்கு மட்டும் தானா? வேலைக்கும் வீட்டுக்கும் balance செய்துக்கொள்ள முடியாத ஆண்களுக்கும் கூட தான். இப்படி தவிக்கும் ஆண்கள் கூட்டத்தில் என்னோடு பலரும் இருப்பார்கள். ஒவ்வொரு implementation project முடியும்போது இதற்கு 'support project'-ஏ பரவாயில்லை, தினமும் வந்தோமா, நமது bucket-ல் இருக்கும் issues-களை ஒழித்தோமா, போனோமா என்று இருக்கலாம். இப்படி வீட்டை விட்டு, குழந்தையை விட்டுவிட்டு எதற்காக இப்படி நாய்ப்பிழைப்பு? என்ன தான் செய்தாலும் கடைசி வரை client சந்தோஷமாக வழியனுப்ப போவதில்லை, இப்படி குடும்பத்தை விட்டுவிட்டு வந்து தனியாக இருந்து கஷ்டப்படுவது அவசியமா என்று தோன்றும். பின்பு 'support project'-க்கு போனதும் கொஞ்ச நாளில் எல்லாம் 'அந்த pressure, வலி எல்லாம் இருந்தாலும், Go-Live போகும் அன்று கிடைக்கும் சந்தோஷமே அலாதி தான்' என்று தோன்றும். இப்படி அல்லாடி அல்லாடியே காலம் முடிந்துவிடும் போல. இந்த Project முடியப்போகிறது. அதனால் அடுத்த project-ல் choice இருக்கும் பட்சத்தில் எதை தேர்ந்தெடுப்பது என்று கொஞ்சம் குழப்பமாகவே உள்ளது. கடவுளே! எனக்கு எது நல்லதோ அதை மட்டும் choice இல்லாமல் கொடு. தேர்ந்தெடுக்கும் குழப்பத்திலிருந்து விடுபடலாமே.

Related Articles