குழந்தைகள் வளர்வதை பார்ப்பதே ஒரு சந்தோஷமான விஷயம். சமயத்தில் அந்த சந்தோஷத்தில் நாம் சில விஷயங்களை கோட்டை விட்டுவிடுகிறோம் என்று தோன்றுகிறது. குறிப்பாக குழந்தைகள் Mobile Games / Video Games / PSP இவற்றை உபயோகிக்க ஆரம்பிக்கும் போது நமக்கு அது பிரமிப்பாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் அது ஒருவித addiction ஆக மாறும்போது நமக்கும் தலைவலியாக மாறிப்போகிறது. இதில் முழுதாக குழந்தைகளை குறை சொல்லிவிடமுடியாது. நாம் என்ன செய்கிறோம் என்பதை தான் குழந்தைகள் replicate செய்கிறார்கள். அதனால் நாமும் கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ளவேண்டும் என்பது சமீபத்தில் கண்கூடாக புரிந்தது. ஆதி என்னுடைய mobile-ஐ எடுத்து விளையாடிக் கொண்டிருக்கும்போது எனக்கு அது சந்தோஷமாக இருந்தது. அவன் தானாக screenlock-ஐ open செய்து media player / folder-க்குள்ளே navigate செய்து அவனுக்கு தேவையான பாடல்களை தேர்ந்தெடுக்கொள்ளும்போது பிரமிப்பாக இருந்தது.
ஆனால் கொஞ்ச நாளில் அவன் mobile-ஐ எடுத்துக்கொண்டு ஓரத்தில் ஒதுங்கிவிடுவதை பார்த்து பயம் வந்தது. இது அவன் மற்றவர்களோடு பழகுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தோன்றியது. எனினும் அவன் புத்தகத்தை எடுத்துக்கொண்டு இப்படி ஒதுங்கினால் அதை ஓரளவுக்கு நான் ஆதரிக்கவும் செய்வேன். ஆனால் வெறுமனே Games / Video பார்க்க ஒதுங்குவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இணையத்தில் இதுபோன்ற addiction-ல் இருந்து எப்படி மீட்பது என்று தேடியபோது அவர்களிடம் இருந்து உடனடியாக இந்த பழக்கத்தை நிறுத்த முயற்சிக்காமல் மெதுவாக மெதுவாக அவர்களை மறக்கடிக்குமாறு யோசனை சொல்லப்பட்டது. அதை முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது அவனது கவனத்தை ஓரளவுக்கு படம் வரைவதில் திசைதிருப்ப முயற்சித்து அதில் கொஞ்சூண்டு வெற்றியும் கிடைத்துள்ளது. 3-4 நாட்கள் நான் வரைவதை பார்த்துக்கொண்டிருந்தவன் இப்போது அவனே நோட்டில் ‘வரைந்து’ கார், ப்ளைன் என்று சொல்கிறான். கொஞ்சம் கூடிப்போய் என் உள்ளங்கையில் எல்லாம் வரைய ஆரம்பித்துவிடுகிறான்.
குழந்தைகள் நம்மை emulate செய்கிறார்கள். நாம் செய்வதை கவனித்து அப்படியே திருப்பி செய்ய முயல்கிறார்கள். நான் SIM Card மாற்றும்போது பார்த்துவிட்டு அவனே SIM Card போடுவேன் என்று அடம் பிடிப்பதும், நான் PC operate செய்வதை பார்த்துவிட்டு அவனே computer-ஐ ON செய்வதாகட்டும், ஏதாவது plug-ஐ எடுத்து UPS-ல் சொருகுவதாகட்டும்.. ஒருபுறம் குழந்தைகள் வளர்வது என்னை கொஞ்சம் cautious-ஆகவே மாற்றிக்கொண்டிருக்கிறது. அவர்கள் முன்னால் தவறான செய்கைகளோ / வார்த்தைகளோ செய்துவிட்டு அதை அவர்கள் emulate செய்யக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தான். பிள்ளைகள் வளர்வதற்குள் நமக்கு எத்தனை அதிர்ச்சிகளோ / ஆச்சரியங்களோ / படிப்பினைகளோ?
ஆதி ரொம்ப நேரமா சத்தம் போடாம இருக்கானேன்னு பார்த்தா தலைவர் மொபைலோடு ஒதுங்கிட்டதை பார்த்து எடுக்கப்பட்டது இந்த படங்கள்.
http://onlinegalatta.com/index.php/personal-blogs/23-ramblings/588-2013-04-02-00-24-53#sigProId5c1ff6ab81