சில வருடங்களுக்கு முன்னாடி என்னோட ஈமெயிலோட இன்பாக்ஸை திறந்த உடனே “உங்கள் நண்பர் தனது போட்டோவை உங்களோட பகிர்ந்துக்குறார். பாருங்க”-ங்குற ரீதியிலே ஏதாவது மெயில் வந்திருந்தா ரொம்ப சந்தோஷமாயிடுவேன். திறந்து பார்த்தா “இந்த link-ஐ click பண்ணி புது அங்கத்தினரா சேருங்க”ன்னு சொல்லும். ஐய்யோன்னு இருக்கும். ஆனா இது எப்போவாவது நடக்கும்... ஆனா கடந்த 1-2 வருடங்களாக இது மாதிரியான தொல்லைகள் அதிகமாயிடுச்சு. 10 மெயில் வந்தா அதுல குறைந்தது 4-5வது இது மாதிரியான மெயில்களா வரத்தொடங்கியது. நம்ம பசங்க இவ்ளோ பாசக்காரனுங்களான்னு பாக்கும்போது தான் “Send invitation to your friends"னு சொல்லி அவங்களோட contacts-ஐ எடுத்துக்குது. இவனுங்களும் “காசா பணமா”ன்னு “OK" குடுத்துடுறாங்க. அதனால எல்லாருக்கும் இது போன்ற மெயில்கள் வந்து தொல்லை பண்ணுது.
ஒருமுறை எனது long lost friend-ன் email id-ல் இருந்து “xxxxxxx had sent you a personal message"ன்னு வந்து, பயங்கர ஆர்வத்தோட நான் உள்ளே போய் பார்க்க, அது “Signup to see the message"னு சொல்ல, அந்த கருமத்தை கூட செய்து அந்த application-ன் inbox-ல் சென்று பார்க்க “I am finding this website useful”னு ஒரு general message வந்திருக்க, பயங்கரமாக நொந்துபோய்விட்டேன். பொறுத்து பொறுத்து பார்த்துட்டு இந்த மாதிரி வர்ற invitation mails எல்லாமே Spam-ஆ mark பண்ணிட்டேன். இந்த மாதிரி மெயில்கள் inbox-ஐ spam செய்வதை ஓரளவுக்கு தவிர்க்க முடிந்தாலும், ஒரு சில சமயங்களில் சம்பந்தப்பட்ட நண்பர்களிடமிருந்து வந்த நல்ல மெயில்களும் தவறிப்போயின. கிட்டத்தட்ட “புலி வருது” கதை மாதிரி ஆயிடுச்சு. அதனால இப்போ எல்லாம் Linkedin / Orkut / Facebook போன்ற தளங்களில் வரும் "Invite your friends"-ன்னு என்னோட Gmail / Hotmail-ன் address book-களை தொட விடுவதில்லை. நான் பட்ட அவஸ்தையை என் நண்பர்களுக்கு நான் செய்யமாட்டேன்.
இப்போதைக்கு இது போதாதென்று Facebook-ல் Application Request என்று புற்றீசல் போல கிளம்பியிருக்கிறது. Farmville-ல் ஆரம்பித்தது இந்த தொல்லை. நான் கணினியில் கேம்ஸ் எல்லாம் விளையாடுவதில்லை. அதனால் அதை ignore செய்தேன். ஆனால் அது ஒரு வெறும் தொடக்கமாகிப்போனது. அதை தொடர்ந்து ஊர்பட்ட Application request-கள். நண்பர்களிடமிருந்து வருவதும், அதை “Remove Post" செய்வதும் வாடிக்கையாகிப்போனது. ஒரு கட்டத்துக்கு மேலே “Hide All Post by XXXXX" என்று செய்யவேண்டியதாயிற்று.
இது போன்ற Applications-ஆல் பெரிய உபயோகமில்லை என்பது மட்டுமல்ல, இது ஒரு serious security hack என்பதும் என் நண்பர்களுக்கு தெரியவேண்டும். இது போன்ற தேவையற்ற Application request-கள் பார்ப்பவர்களுக்கு எரிச்சலை உண்டாக்குவன என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. பொதுவாக மக்கள் Facebook போன்ற social networking site-களில் சேர்வது தங்களது நண்பர்களுடன் தொடர்பில் இருக்கவேண்டும் என்பதற்காக தான். தங்களுடைய தினசரி வாழ்க்கையில் வரும் சுவாரசியமான விஷயங்களையும், அபிப்பிராயம் / கருத்துகளையும் பகிர்ந்துகொள்வதற்காக தான் இதுபோன்ற வலைதளங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் ”என் புருஷனும் கச்சேரிக்கு போறார்”னு peer pressure காரணமாக ஒரு profile-ஐ create செய்துவிட்டு, இதுபோன்ற application request-களும், link forwards-களும் செய்து பக்கங்களை நிரப்பிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்ன கருமத்துக்கோ Facebook profile-கள் create செய்துகொள்ளுங்கள், ஆனால் இது போன்ற request-களை விரும்பாதவர்களை தொல்லை செய்யாமல் இருக்க “Custom Group" ஒன்று உருவாக்கி, அதில் இந்த நண்பர்களை தவிர்த்து இதை default setting-ஆக வைத்துவிடுங்கள். மற்றவர்களை சேர்த்து Link Post / Apps Request அனுப்பும்போது ”Custom Group" மூலம் post செய்தால் என் போன்ற ஆட்களை தொல்லை செய்யாமல் விட்ட புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும்.