Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Vijay and meசில நேரங்களில் சில விஷயங்கள் ஏன் நடக்கின்றன என்று நமக்கு புரியாது ஆனால் அவை நடக்கும்போது அது நமக்கு மகிழ்ச்சியூட்டுவனவாக அமைந்துவிடுகிறது. சமீபத்தில் எனக்கும் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. எனது ஆஸ்திரேலியா வாழ் நண்பரை பற்றி சொல்லியிருக்கிறேன் அல்லவா? கடைசியாக அவர் கடந்த வருடம் சென்னைக்கு வந்தபோது எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அதற்கப்புறம் அவரை எப்போது பார்ப்பேன் என்பது தெரியவில்லை. ஒருவேளை நான் ஆஸ்திரேலியா போனால் பார்க்கக்கூடும் என்று இருந்தோம். எனது Aussie PR வேலைகள் தடைபட்டு மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட்டபோது ஆஸ்திரேலியா இன்னும் இரண்டு வருட தூரத்தில் இருப்பதாக தோன்றியது. திடீரென்று விஜய் நான்கு நாட்களுக்கு சென்னைக்கு அவரது பள்ளியின் alumni meeting-க்கு வருவதாக சொன்னபோது எனக்கு பயங்கர சந்தோஷம்.


நான் கடலூரிலிருந்து சென்னை கிளம்பும்போது அகிலா “என்னவோ Girlfriend-ஐ பார்க்க கிளம்புறதுபோல ஆர்வமா கிளம்புறீங்க” என்று கேலி செய்துக்கொண்டு இருந்தாள். நானும் “உண்மையை எப்படி சொல்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன், இப்போ எனக்கு வேலை வைக்காம பண்ணிட்டே” என்று சளைக்காமல் பதிலுக்கு ஓட்டிக்கொண்டு இருந்தேன். விஜய் கிட்டத்தட்ட 1.25 வருடங்களுக்கப்புறம் வருவதாலும், குறைந்த தினத்துக்கே வருவதாலும், அவரது social commitments / appointment-களுக்கிடையே எங்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலை வரை தான் சமயம் கிடைத்தது. விஜய்யை CMBT பேருந்து நிலையத்தில் பார்த்தபோது உனர்ச்சிப்பிழம்பில் பேச்சுவரவில்லை என்று கவிதைத்தனமாக எழுத ஆசை தான், ஆனால் நாங்கள் (கிட்டத்தட்ட) தினப்படியாக - இன்று என்ன சாப்பிட்டோம், இன்று என்ன dress என்பது வரை Gtalk-ல் chat செய்துக்கொண்டு இருப்பதால் அவ்வளவு novelty எல்லாம் இல்லை. ஏதோ நேற்றிரவு தான் பார்த்து பேசிவிட்டு போனது போன்ற ஒரு familiarity. பிறகு அவர்கள் வீட்டுக்கு சென்று, அவர் வீட்டினரோடு அரட்டையடித்துக் கொண்டும், மேட்ச் பார்த்துக்கொண்டும் நள்ளிரவை கழித்தபிறகு எங்கள் அளவலாவளை ஆரம்பித்து பேசிக்கொண்டிருந்தோம்.

என்னை பொருத்தவரை யார் யாரெல்லாம் என்னோடு கடைசி வரை வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேனோ அவர்கள் வந்த வேகத்திலேயே என் வாழ்க்கையிலிருந்து போய்விடுவார்கள். உதாரணம் - பள்ளித்தோழர்கள் ஆனந்த், செல்வராஜ், கல்லூரித்தோழன் மோகனசுந்தரம், மாலதி அண்ணி, துபாய் தோழன் பாலாஜி. இந்த சம்பவங்களுக்கு அப்புறம் எனக்கு யாரிடமாவது நெருங்கிப்பழகவேண்டும் என்றாலே பயம். பின்னர் ஒன்றாக இருக்கும்போது நன்றாக enjoy செய்வது, பின்னர் வேலை முடிந்து / பிரிந்து செல்லும் வேளை வந்து விலகும்போது சிரித்தமுகத்தோடு ஒதுங்கிக்கொள்ள (ஓரளவுக்கு)கற்றுக்கொண்டேன். இந்த cold phase-க்கு பிறகு வந்த நண்பர்களில் ஓரளவுக்கு என்னை sweep under the feet செய்தது விஜய் தான். முதல் சந்திப்பிலேயே என்னை அவர் குடும்பத்தினரிடம் அறிமுகப்படுத்தியும், என் வீட்டில் வந்து என் அம்மாவை சந்தித்து எனக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பை அடுத்த தளத்துக்கு கொண்டுபோனது விஜய் தான். அன்று முதல் விஜய்யை எனது extended family-ஆகவே கருதத்தொடங்கினேன்.

அதனாலேயே எனக்கு அவ்வப்போது “கடைசி வரைக்கும் வருவார்கள் என்று எதிர்பார்த்த நண்பர்களின் நிலைமை இங்கும் வந்துவிடுமோ” என்ற பயம் வரும். அந்த நள்ளிரவில் ஒரு நெகிழ்ந்த கணத்தில் விஜய்யின் கையை இறுக கோர்த்துக்கொண்டு “நான் ஆஸ்திரேலியாவுக்கு PR வாங்குவது குறித்து விசாரித்து வைத்திருந்தபோதும், அதற்கு செயல் வடிவம் கொடுத்தது நீங்கள் என் வாழ்க்கையில் வந்த பிறகு தான். ஒருவேளை நமக்குள் ஏதாவது அசம்பாவிதமாக நடந்தால் எனக்கு அந்த நாட்டுக்கு வருவதோ அல்லது அங்கு வசிப்பதற்கோ அர்த்தமில்லை. நீங்கள் தான் அந்த jinx-ஐ உடைக்கவேண்டும்” என்று சொன்னேன். விஜய்யும் அப்படி எதுவும் நடக்காது என்று ஆறுதல் சொல்லி என்னை தேற்றினார்.

அடுத்த நாள் காலையில் படுக்கையில் விழித்தபோது தான் ராகவேந்திரர் கோவிலுக்கு செல்வதாகவும், என்னை உறங்கிவிட்டு 7:30 மணி வாக்கில் எழுந்து கிளம்பியிருக்குமாறும் சொன்னார். எனது எட்டாவது வகுப்பில் கடலூர் கூத்தப்பாக்கத்து ராகவேந்திர பிருந்தாவனத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்துக்கு அப்புறம் ராகவேந்திரர் கோவிலுக்கே போவதில்லை என்று வைத்திருந்தேன். ஆனால் ஏனோ அன்று எனக்கு விஜய்க்கு பிடித்த ராகவேந்திரருடைய பிருந்தாவனத்துக்கு, செல்லவேண்டும் போல இருந்தது. கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு ராகவேந்திரர் கோவிலுக்கு போனதற்கு விஜய்யே காரணம்.

விஜய் தன்னுடைய பள்ளிக்கு அழைத்துச்சென்று காட்டினார். சில இளம்வயது கதைகளை சொன்னார். இவ்வளவு பேசினோம், ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றவே இல்லை. பின்னர் என்னை பஸ் ஸ்டாப்பில் விட்டபோது எனக்கு ஞாபகம் வந்து எனது மொபைலில் எடுத்த படம் தான் இந்த சந்திப்பின் ஞாபக சின்னம். Even though it sounds cliched, அடுத்து எங்கள் சந்திப்பு எங்கே, எப்போது என்று இருவருக்குமே தெரியாது. அதனால் அதுவரை நினைவுகளே மிச்சம்.

Related Articles