உங்களுக்கு நீங்கள் கல்லூரியில் படித்த Maslow theory of hierarchy நினைவிருக்கிறதா? மனிதனின் முதல் / அடிப்படை தேவை - வாழ்வாதாரம் சார்ந்த உணவு, உடை தேவைகள் பூர்த்தியடைந்த பிறகு அடுத்த கட்டமான உத்தியோகம், பணம் சார்ந்த தேவைகளை மனம் நாடுமாம். அதுவும் பூர்த்தியடைந்த பிறகு அங்கீகாரம், அதிகாரம் ஆகியவற்றில் மனம் செல்லுமாம். நமது வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் இந்த Hierarchy அல்லது படிக்கட்டு பின்னணியில் இருப்பதை பார்க்கலாம். படிகளை கடப்பதில் ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு காலங்கள் ஆகலாம், அது அவருடைய மனநிலை மற்றும் தேவைகளை பொறுத்த விஷயம். எனது வாழ்வில் நானும் கிட்டத்தட்ட அந்த மாதிரியான ஒரு சந்தியில் நிற்கிறேன்.
Sales வேலையில் இருந்தபோது எப்போது IT துறைக்கு மாறுவோம் என்று இருந்தது. ஒரு வழியாக கணினி துறைக்கு மாறிய பின்பு, இந்த வேலையில் நமக்கு பிடித்த மாதிரியான projects கிடைக்கிறதா என்று பார்க்க தோன்றும். சிலருக்கு onsite போகும் வாய்ப்பு கிடைக்குமா என்று தேடி அதற்கேற்றார்போல அடுத்த வேலை தேடுவார்கள். இன்னும் சிலரோ எனக்கு இது போன்ற project தான் வேண்டும் என்று அடம் பிடித்து அதுபோல தேடுவார்கள். அதாவது எனக்கு வருமானத்தை விட வேலையில் கிடைக்கும் திருப்தியே முக்கியம் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள். இன்னும் சிலரோ வேலை எக்கேடு கேட்டு இருந்தாலும், எனக்கு மாதாமாதம் சம்பளம் ஒழுங்காக வருகிறதா? அது போதும் என்று நினைப்பவர்கள். எது சரி எது தவறு என்று நான் விவாதிக்க வரவில்லை. காரணம் அது அவரவர்களின் மனநிலை மற்றும் தேவைகளை அனுசரித்த விஷயம்.
எனக்கு சமீபத்தில் நான் செய்யும் support project-ல் அலுப்பு வந்தது. அது கிட்டத்தட்ட client போட்ட குப்பையை நான் சுத்தம் செய்யவேண்டிய வேலை தான். அதில் கற்றுக்கொள்வது என்பது பெரிதாக இருக்காது. எனது கம்பெனியிலும் வேறு உருப்படியான project-உம் இல்லை. அதனால் வெளியே வேலை தேடலாம் என்று இறங்கினேன். அப்போது நேர்முக தேர்வுகளில் ஒரு கேள்வி மட்டும் அடிக்கடி வந்துக்கொண்டிருந்தது. "வேலைக்கு சேர்ந்து ஒரு வருடம் தாண்டிய உடனேயே அடுத்த வேலை தேடுகிறீர்களே, நீங்கள் எங்கள் கம்பெனியிலும் அப்படி செய்ய மாட்டீர்கள் என்று என்ன நிச்சயம்?" என்பதே அது. அவர்களிடம் "நீங்கள் என்ன project-க்கு ஆள் எடுக்கிறீர்கள் என்று சொல்லுங்கள், நான் எவ்வளவு நாள் இருப்பேன் என்று சொல்கிறேன்" என்று சொன்னேன். அதற்கு "அதை இப்போது சொல்ல முடியாது என்று சொன்னார்கள்." நானும் என்னால் இப்போதைக்கு வாக்கு கொடுக்க முடியாது என்று சொன்னேன். பின்பு யோசித்தேன் - "இப்படி கண்டவர்களுக்கும் பதில் சொல்லிக்கொண்டு இருப்பதை விட பேசாமல் நான் Freelancer ஆகிவிட்டால் என்ன?
Freelancing என்பது நம் நாட்டில் தற்போது அவ்வளவு மரியாதைக்கு உரிய விஷயமாக கருதப்படுவதில்லை என்பது எனக்கு தெரிந்தது தான். வெளிநாடுகளில் இது போன்ற freelancing assignments களுக்கு திறமைக்கு ஏற்ற மதிப்பு கிடைப்பது சாதாரணம். நம் ஊரில் இன்னும் அந்த கலாச்சாரம் அதிகம் வரவில்லை. மேலும் இதுபோன்ற சூழலில் எத்தகைய assignments கிடைக்கும் என்பதும் கொஞ்சம் கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் ஒரு திடமான வருமானத்தை விட்டுவிட்டு ஒவ்வொரு assignment முடிவதற்குள்ளும் அடுத்த assignment தேடி வைத்தாக வேண்டிய pressure-உம் இதில் உண்டு. ஒரு நேரம் பிய்த்துக்கொண்டு காசு கொட்டினாலும், அடுத்த வேலை வறட்சி ஆகலாம். இவை அத்தனையையும் மனதில் கொண்டு ஒரு குழப்பத்திலேயே காலத்தை ஒட்டிக்கொண்டு இருந்தேன்.
இந்த சமயத்தில் எனது நண்பர் பிரபுவிடம் பேசியபோது அவர் எனக்கு உதவியாக இருப்பதாக உறுதியளித்தார். சொன்னது போல எனக்கு சில assignments - உம் வாங்கி தந்து உதவினார். இப்போது எனக்கு முழுநேர Freelancer ஆகும் தைரியம் வந்துள்ளது அவரால் தான். இருப்பினும் ஒருவித தயக்கம் இருந்தாலும், காலப்போக்கில் எனக்கு பிடித்த வேலையை செய்யும்போது அந்த சங்கடங்கள் மறைந்து போகும் என்று நம்புகிறேன்.
எனது Freelancing தொழிலுக்கு visiting card - ஆக ஒரு சிறிய website -ஐ துவக்கியுள்ளேன். http://www.maheshwaran.net என்பது தான் அது. ஒரு வேளை நான் Freelance consultant - ஆக வெற்றிகரமாக வந்தால் அது பிடிக்காத வேலையில் "மாட்டிக்கொண்டு" தவிக்கும் பலருக்கு தங்கள் விலங்குகளை உடைத்தெறிய ஒரு நல்ல உதாரணமாக இருக்கக்கூடும். உங்களுக்கு தெரிந்த வகையில் என்னால் செய்யமுடியும் என்ற அளவில் ஏதேனும் openings இருந்தால் எனக்கு தெரிவிப்பதே நீங்கள் எனக்கு செய்யும் உதவியாக இருக்கும்.
{oshits} வாசிப்புகள்!