Questions
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
{mosimage}வெள்ளிக்கிழமை மதியம்... பொதுவாக IT ஊழியர்கள் கும்பல் கட்டி நிதானமாக சாப்பிடும் நாள். என்றும் இல்லாத அதிசயமாக நானும் விச்சுவும் கீழே சாப்பிட போனோம். நான் என்னுடைய டிஃபன் பாக்ஸ் வைத்திருந்ததாலும், விச்சு சாப்பாடு வாங்க போனதாலும் நான் ஒரு lawn ஓர table பிடித்து உட்கார்ந்து காத்திருந்தேன். ஒரு பெண் வந்து 'அந்த table-இல் உட்கார்ந்துக்கொள்ள முடியுமா?' என்று கேட்டாள். நான் அரை மனதோடு எழுந்து அடுத்த table-ல் அமர போனபோது 'இதில் இல்லை அங்கே..' என்று சற்று தொலைவில் கூட்டமாக இருந்த இடத்தில் ஒரு table-ஐ காட்டினாள். எனக்கு ஜிவ்வென்று கோபம் வந்தது. 'வேணும்னா அதை இழுத்து இங்கே போட்டுக்கோங்க..' என்று கோபமாக சொன்னாலும் அந்த இடத்தில் இரண்டு chair-கள் இருந்ததால் அவள் சொன்ன இடத்தில்லேயே சென்று உட்கார்ந்து கொண்டேன். அந்த பெண் அந்த இடத்திலிருந்த தன்னுடைய டிபன் பாக்ஸை எடுத்துகொண்டு 'Sorry for the inconvenience' என்று சொன்னாள். அவள் முகத்தை கூட பார்க்காமல் 'its OK' என்று வெறும் கையசைப்பிலேயே சைகை காண்பித்துவிட்டேன்.

Admitted - நான் சற்று கடுப்பாகத்தான் கீழே வந்தேன். கிளம்பும் முன்பு ஒரு சக ஊழியன் எனக்கு திருமணம் ஆகாதது குறித்து அவசியமில்லாத சில comment-கள் அடித்திருந்தான். மேலும் நல்ல பசி ஆனாலும் விச்சு இன்னும் வராததால் கொஞ்சம் upset-ஆக இருந்தேன். யதேச்சையாக திரும்பி பார்த்தபோது அந்த பெண்ணும் அவள் 9-10 சக ஊழியர்களும், இரண்டு table-களை இணைத்து போட்டு சிரித்து பேசியபடியே சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. எனக்கு குற்ற உணர்ச்சி குத்த ஆரம்பித்தது. நான் சாப்பிட்டு முடிக்கையில் அவர்கள் அந்த இடத்தை விட்டு கிளம்பியிருந்தார்கள். பொதுவாக ஒருவர் மீதுள்ள கோபத்தை மற்றவர்களிடம் காட்டுவதை முடிந்தவரை தவிர்ப்பவன் நான். மேலும் முன்பின் தெரியாத அந்த பெண்ணோடு எந்த முன்விரோதமும் இல்லை. இருந்தும் ஏன் எனக்கு இந்த கோபம் வந்தது? I shouldn't have done this.

சில சமயத்தில் நாம் கூட்டமில்லாத பேருந்தில் போகும்போது நாமும், ஒரு சிலரும் ஒற்றையாக ஆனால் வசதியாக ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருப்போம். அப்போது யாராவது வந்து 'கொஞ்சம் மாறி உக்காந்துக்கிறீங்களா?' என்று கேட்பார்கள். வசதியான சீட் கைவிட்டு போகிறதே என்ற ஆதங்கத்தோடு சுற்றி பார்த்தால் வேறு சில சீட்டுகளில் சிலர் தனியாக வசதியாக உட்கார்ந்திருப்பார்கள். அப்போது நம்மில் சிலருக்கு சட்டென்று கோபம் வரும் - 'ஏன் அவங்ககிட்டே கேட்கவேண்டியது தானே? என்னை ஏன் எழுப்பனும்? என் மூஞ்சிலே என்ன இளிச்சவாயன்னு எழுதியிருக்கா?' சற்று நிதானமாக யோசித்து பார்த்தால் நம்மை போல மற்றவர்களுக்கும் அந்த இடத்தின் மீது உரிமையுண்டு. இருப்பினும் 'First Come First Served' basis-இல் தான் உரிமையிருக்கிறது. நாம் இனிமையாக நடந்துகொள்ளும் பட்சத்தில் இழப்பதற்கு ஒன்று இல்லை. நமக்கு தகுந்த alternative solution கிடைக்கும் பட்சத்தில் ஏற்றுக்கொள்வதில் எந்த குழப்பமும் இல்லை. Assertiveness-க்கும் rudeness-க்கும் மயிரிழை வித்தியாசம் தான்.

இதை விடுத்து 'நான் என்ன இளிச்சவாயனா?' என்று கோபப்பட்டு complicate செய்துகொள்வது என் வழக்கம் இல்லை என்றபோதும், அன்று நான் அப்படி நடந்துகொண்டது சற்று வெட்கமாகவே இருக்கிறது. நான் கோவை போனால் முன்பின் அறியாதவர்களிடம் கூட மிக இனிமையாக நடந்துகொள்கிறேன். Infact பொதுவாக கோவை மக்களும் சற்று மரியாதையாகவே நடந்து கொள்கிறார்கள். எனவே நமக்கும் விட்டுகொடுப்பதில் சந்தோஷமே. அதனால் எனக்கு இது போன்ற சூழ்நிலைகள் அங்கே வந்ததில்லை.

இதில் மற்றொரு aspect - நான் ஏன் இளம்பெண்களிடம் கொஞ்சம் rude-ஆகவே பதில் சொல்கிறேன்? எனக்கு சென்னை பெண்களை பற்றி ஒரு not-so-good அபிப்பிராயம் தான் இருக்கிறது. They are quite manipulative using their sexuality. எனவே முன்பின் தெரியாத சென்னை பெண்களை பற்றி ஒர் மூன்றாம் தர அபிப்பிராயமே உள்ளது. மேலும் சென்னையை ஏற்கனவே எள்ளளவும் பிடிக்காது. ஒரு சில மனிதர்களை பார்த்து பொதுப்படையாக அபிப்பிராயம் கொள்வது தவறு என்று தெரிந்தபோதும் அதை திருத்திக்கொள்வது கொஞ்சம் கடினமாகவே உள்ளது.

எது எப்படியோ, இனிமேல் இது போல நான் தேவையில்லாமல் கோபிக்க கூடாது என்று முடிவு செய்திருக்கிறேன். மிக நெருங்கிய வட்டத்தில் இருக்கும் நண்பர்களை தவிர மற்ற புதியவர்கள் என்னைப்பற்றி என்ன அபிப்பிராயம் கொண்டுள்ளார்கள் என்று கவலைப்படுவதில்லை. இது ஒரு withdrawal symptom-இன் அறிகுறி என்று நினைக்கிறேன். I have to work on this..

Related Articles