இது ஒரு புதிய Category - ஆக ஆரம்பிக்கிறேன். எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு எனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் பிரதிபலிப்பதை உணரலாம். அந்த வகையில், திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், திருமணத்தை பற்றி, என்னுடைய மற்றும் என்னை சுற்றி இருக்கும் நண்பர்களின் திருமண வாழ்க்கையை பற்றி நான் கவனித்ததை, எனது கருத்துகளை பதிய முற்படும் முயற்சி தான் இந்த category-ல் வரும் பதிவுகள். எந்த திருமணமும் Perfect இல்லை என்பது தான் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம். மிகவும் ideal திருமண வாழ்க்கை புத்தகங்களிலும், திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். இத்தனையையும் மீறி எவரேனும் தங்கள் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்னால் அவர்கள் fake செய்கிறார்கள் என்பதே உண்மை. அதற்காக பிரச்சினைகள் இருக்கும் திருமணங்கள் தோல்வி அடைந்தவை என்று அர்த்தமில்லை. மாறாக பிரச்சனைகளை தீர்க்க இருவரும் முழு மனதோடு முயலும் திருமணங்களே வெற்றி பெறுபவை. அந்த வகையில் என்னால் பிரச்சினை என்ற கண்டுபிடிக்கப்பட்ட சில சம்பவங்களை சொல்கிறேன்.
அவள் பெயர் "தியா" என்று வைத்துக்கொள்வோம். இருபதுகளின் மத்தியில் இருந்தாலும், பள்ளிக்கூடத்து பெண் போல ஒரு துறுதுறுப்பு இருக்கும் அவளிடம். அலுவலகத்தில் அவள் இருக்கும் இடத்தில் சத்தத்துக்கு பஞ்சமிருக்காது. ஆனால் அவள் ஒரு நாள் வந்து தனக்கு அடுத்த மாதம் திருமணம் நிச்சயம் ஆகியிருப்பதாக சொன்னபோது எங்கள் எல்லோருக்கும் ஆச்சரியம். அதை விட அவள் ஒருவர மூன்று வருடங்களாக காதலித்து வருவதாகவும், அவருடனேயே திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருப்பதாக சொன்னபோது எங்களுக்கு மயக்கம் வராத குறை தான். காரணம் அந்தப்பெண் தன் காதலனிடம் எப்போது பேசுகிறாள் என்று யாராலும் யூகிக்க முடியவில்லை. திருமணம் இனிதே நடைபெற்றது.
அவள் ஒரு பஞ்சாபி, அவள் கணவன் கன்னடிகா. ஆனால் திருமணம் நடந்து ஒரே மாதத்தில் அவர்கள் கல்யாணம் சத்தமாகி போனது. அலுவலகத்தில் பக்கத்தில் யார் இருக்கிறார் என்று பார்க்கக்கூட தோன்றாமல் ஒரே போன் சண்டை. ஒரு நாள் அவள் கணவன் அவளை அறைந்துவிட்டதை தன் தோழிகள் அனைவரையும் கூப்பிட்டு கூப்பிட்டு சொல்லிக்கொண்டிருந்தாள். எதை பொதுவில் சொல்லவேண்டும் / கூடாது என்ற அறியாமை / முதிர்ச்சியின்மை அப்பட்டமாக தெரிந்தது. அப்போது அவளிடம் நான் சொல்லியும்விட்டேன் "நீ காதலிக்கும் போது உங்கள் காதல் எவ்வளவுக்கு அமுக்கமாக இருந்ததோ, இப்போது உங்கள் கல்யாண வாழ்க்கை அவ்வளவுக்கு இரைச்சலாக ஆகிவிட்டது." ஒரு vulnerable moment -ல் தன் பிரச்சினையை சொன்னாள்.
பிரச்சினை என்னவென்றால் அந்தப்பெண் வார இறுதிகளில் நன்றாக ஊர் சுற்றவேண்டும் என்று பழகிய பெண். பெற்றோர்கள் டில்லியில் இருந்தனர். இவள் தன் தோழிகளோடு பெங்களூருவில் இருந்ததால் அதுபோல social - ஆக பழகிவிட்டாள். ஆனால் அவள் கணவனோ மிக அமைதியானவன். வார இறுதிகளில் அவளை எங்கும் வெளியே அழைத்துச் செல்ல மாட்டேன் என்கிறானாம். அதனால் திங்கட்கிழமை காலையில் அலுவலகத்துக்கு வந்தவுடன் தொடங்கும் அவர்களது சண்டை வெள்ளிக்கிழமை வரை தொடரும்.
”இதோ பார் மகேஷ்... என் கல்யாண வாழ்க்கை எப்படி மாறிவிட்டது. நீங்கள் ஆண்கள் எல்லோரும் கல்யாணத்துக்கு முன்பு ஒரு மாதிரியும், கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு மாதிரியும் மாறிவிடுகிறீர்கள். அதனால் தான் இந்த பிரச்சினைகள் எல்லாமே”
“அப்படி இல்லை தியா! நீங்கள் பெண்கள் எல்லாம் தொட்டதற்கெல்லாம் extreme-ஆக react செய்கிறீர்கள். அது தான் முதல் பிரச்சினை. உன்னுடைய முதல் மாத anniversary அன்று உன் கணவன் bike-ல் வந்து அழைத்துச்செல்லவில்லை என்று நீ ஆடிய ஆட்டம் இப்போது நினைத்தால் valid ஆக இருக்கிறதா? அவர் தான் cab-ல் வந்து அழைத்து போவதாக சொன்னாரே. ஆனால் உனக்கு bike-ல் வரவில்லை என்ற ஏமாற்றம். அதற்காக அன்று வேண்டுமென்றே வீட்டுக்கு தாமதமாக போனாயே... இது போன்ற extreme reactions தான் முதல் சத்ரு” - இது நான்.
“அது OK... ஆனால் வாரத்துக்கு 5 நாள் ஆபீஸ் ஆபீஸ் என்று ஓடுகிறோம். காலை 7 மணிக்கு போனால் அவர் திரும்ப வர இரவு 10 மணி ஆகிரது. ஆனால் வார இறுதிகளில் கூட அவர் வெளியே அழைத்துப்போக மாட்டேன் என்கிறார். மாறாக தூக்கம் வருகிறது, Rest எடுக்கவேண்டும் என்று வீட்டிலேயே சுணங்கி கிடக்கிறார்”.
“அது சரி... அவர் தான் வார நாட்களில் கிட்டத்தட்ட 15 மணி நேரம் உழைக்கிறார். அதனால் நல்ல ஓய்வு அவசியம் என்று நினைக்கிறார். அப்படியே செய்கிறார். அவரை ஞாயிற்றுகிழமைகளில் வெளியே அழைத்துக்கொண்டு போ... இல்லையென்றால் உனக்கு தான் கார் ஓட்ட தெரியுமே.. அதனால் அவரை உட்காரவைத்து நீ ஓட்டிக்கொண்டு உங்களுக்கு பிடித்த இடங்களுக்கு போயேன்... what big deal?" என்றேன்.
”என் தோழி திருமணம் ஆகி குழந்தை பெற்ற பிறகும், அவள் கணவனோடு வார இறுதிகளில் MG Road-க்கு வழக்கமாக சென்று சுற்றிக்கொண்டு இருக்கிறாள், ஆனால் இவரோ வரமாட்டேன் என்கிறார். அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் தெரியுமா?”
“ப்ளீஸ்... முதலில் இந்த ஒப்பிடுதலை நிறுத்து. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. அதனால் தான் நாம் மக்களை individuals என்கிறோம். உன் பிரச்சினை என்ன என்று மட்டும் பார்”.
“அவர் வார இறுதிகளில் என்னை வெளியே அழைத்துச்செல்ல மாட்டேன் என்கிறார். காதலித்த போது தான் என்னை ஷாப்பிங் மால், சினிமா என்று அழைத்துச் செல்லவில்லை, கல்யாணத்துக்கப்புறமாவது திருந்துவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என்னை ஏமாற்றிவிட்டார்”.
எனக்கு லேசாக பொறி தட்டியது. பிரச்சினை எங்கே என்று பிடிபட்டது.
“சரி... காதலித்தபோது எப்படி உங்கள் நேரத்தை செலவழித்தீர்கள்?”
அதற்கு தியா “நாங்கள் தினமும் 2-3 மணி நேரம் இரவில் பேசிக்கொள்வோம். சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை அவர் என்னை பார்க்க என் PG-க்கு வருவார். என்னை எங்கேனும் restaurant-க்கு அழைத்துச்செல்வார். அதில் கூட எங்களுக்குள் சண்டை வரும். அவருக்கு South Indian உணவுகள் தான் பிடிக்கும், எனக்கோ பஞ்சாபி சாப்பாடு தான் தொண்டையில் இறங்கும்”
”சரி! என்ன மாதிரி படங்களுக்கு போவீர்கள்?”
“நான் ஏதாவது ஹிந்தி படத்தை சொன்னால் அதற்கு வரமாட்டார். ஆனால் எப்போதாவது ஆங்கில படங்களுக்கு போவோம்”.
அவள் கணவனுக்கு எதிலும் ஒரு திடமான, அழுத்தமான அபிப்பிராயங்கள் இருப்பது புலப்பட்டது. தனக்கு பிடித்த comfort zone-ல் இருந்து அவ்வளவு எளிதில் வெளியே வரமாட்டான் என்பது உறுதியானது. அப்படிப்பட்டவர்களை மற்றவர்கள் எவ்வளவு எளிதில் தங்கள் இஷ்டத்துக்கு மாற்றிவிட முடியாது.
“சரி... உனது வார இறுதி பிரச்சினைக்கு வருவோம். அவருக்கு வாரத்தில் ஒரு நாள் நல்ல ஓய்வு கொடுத்துவிடு. ஞாயிற்றுக்கிழமை எங்கேனும் போங்கள்”
“அவரை MG Road-க்கு / ஷாப்பிங் மாலுக்கு வரச்சொன்னால் வரமாட்டார். வெளியே சாப்பிட போகலாம் என்றால் கூட இரவு 9:30 மணிக்கு மேல் தான் கிளம்புவார். அப்போது தான் சாலையில் கூட்டம் கம்மியாக் இருக்குமாம்” - தியா.
எனக்கு இப்போது தியாவின் கணவனை இன்னும் அதிகம் அறிந்துக்கொண்டது போல தோன்றியது.
“சரி! உங்கள் தேன்நிலவுக்கு எங்கே போனீர்கள்” என்று கேட்டேன்.
“கேரளாவில் குமரக்கோம் போனோம். அங்கே Le Meridien-இல் தங்கினோம். அதில் தான் ஹோட்டலுக்கும், Backwaters-க்கும் தூரம் அதிகமில்லை”
இன்னும் கொஞ்சம் பிடிகிடைத்தது எனக்கு.
“ஒருவேளை உன் கணவருக்கு பிரயாணத்தில் விருப்பமில்லை போல. அதனால் தான் பிரயாண நேரத்தை குறைக்க அந்த ஹோட்டலை தேர்ந்தெடுத்திருக்கிறார்” என்றேன்.
“இல்லை. அவர் கல்யாணத்துக்கு முன்னாடி கூர்க், ஷிமோகா என நண்பர்களோடு சென்றிருக்கிறார். ஆனால் நான் அவரை MG Road-க்கு அழைத்தால் மட்டும் வரமாட்டேன் என்கிறார்”
(Geography தெரியாதவர்களுக்கு - கூர்க், ஷிமோகா ஆகியவை கர்நாடகத்தில் உள்ள மலைவாச ஸ்தலங்கள். MG Road என்பது பெங்களூருவின் முக்கிய கடைவீதி. சொல்லப்போனால் சென்னையில் ரங்கநாதன் தெரு போல. எந்நேரமும் ஜனசமுத்திரம் மிதக்கும்)
தியாவிடம் கேட்டேன் - “நீ காதலிக்கும் போது உன் கணவனை புரிந்துக்கொள்ள முயற்சிக்கவில்லையா? அவனது ரசனை மிக தெளிவாக உள்ளது. இயற்கை சூழ்ந்த இடங்களில், கூட்டம் கம்மியான சூழ்நிலையை விரும்புபவனாக இருக்கிறார். சாலையில் கூட்டம் இருக்கும் என்பதற்காக இரவு 9:30 மணிக்கு மேலே கிளம்புபவரை இந்த MG Road ஜனசமுத்திரத்தில் மூழ்கடிக்க விரும்புகிறாயே, இது சரியா?”
அவள் இதற்கு பதில் சொல்லவில்லை. எனினும் தொடர்ந்தேன்..
“உன் கணவருக்கு இது போன்ற இயற்கையான / அமைதியான சூழலில் இருக்க தான் பிடிக்கிறது. அதனால் தான் ஒன்று இது போன்ற இடங்களுக்கு போவதை விரும்புகிறார் அல்லது வீட்டில் தன் குடும்பத்தினருடன் comfort zone-ல் இருப்பதை better என்று நினைக்கிறார். அப்படிப்பட்டவரை அவருக்கு பிடிக்காத ஒன்றை செய்ய நீ நிர்பந்திக்கும்போது அவர் violent ஆகியிருக்கிறார். அதனால் தப்பை உன் மீது வைத்துக்கொண்டு அவரை குறை சொல்லாதே. மேலும் இது போன்ற negative எண்ணங்களை வளர்த்துக்கொள்வது உனக்கு நல்லதல்ல” என்றேன்.
ஏதோ புரிந்தவளாக அதே சமயம் தன் தோல்வையையும் ஒத்துக்கொள்ள முடியாமல் “அப்படியே வெளியே அழைத்துச் சென்றாலும் ஒரே Hypermarket- க்கு அழைத்துச் சென்று எல்லாவற்றையும் ஒரே இடத்தில் shopping- ஐ முடித்துவிடுகின்றார். எனக்கோ list-ல் உள்ள ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி வாங்கினால் தான் ஷாப்பிங் செய்த திருப்தி.” என்று ஈனஸ்வரத்தில் முனகினாள்.
“தாயே! உன் போன்ற பெண்களின் சந்தோஷத்துக்காக துணிக்கடை வாசலில் போடப்பட்ட சேர்களில் தேமேவென்று உட்கார்ந்து நாட்களை தொலைக்கும் புருஷனின் கூட்டத்தில் கலந்தால் தான் உன் மீது அவன் அன்பு வைத்திருக்கிறான் என்று நம்புவாயா? உனக்கு இப்படி ஷாப்பிங் செய்வது தான் பிடித்திருக்கிறது என்றால் உன் தோழிகளோடு போய்வா” என்றேன்.
“ஆங்..... தோழிகளோடு ஷாப்பிங் போவது என்றால் எதற்கு கல்யாணம்?”
“Wait... எந்த வேதத்தில் எழுதியிருக்கிறது புருஷன் என்றால் இப்படி வெட்டிக்கு ஷாப்பிங்குக்கு அழைத்து சென்று வதைபட வேண்டும் என்று? இது நீங்களாக உங்கள் வசதிக்கேற்ப எழுதிக்கொண்ட கோட்பாடு. நீங்கள் இருவரும் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்.. சேர்ந்து செய்யக்கூடியதை சேர்ந்து செய்யுங்கள்... இருவருமே படித்தவர்கள், அதனால் குடும்பம் பாதிக்காத அளவுக்கு உங்கள் விருப்பம் போல சுதந்திரமாக செயல்படுங்கள். மாறாக கஷ்டப்பட்டு தான் மற்றவர்கள் தங்கள் அன்பை நிரூபிக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதே” என்றேன் கொஞ்சம் காட்டமாக.
சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் பெங்களூருவை சுற்றியுள்ள இயற்கை சூழலில் அமைந்த இடங்களை பற்றிய தகவல்களை சேகரித்துக்கொண்டிருந்தாள் தியா. வார இறுதிகளில் அவர்கள் சமயம் செலவழிக்க இடங்களை குறித்துக்கொள்கிறாளாம். பார்க்கும்போது சந்தோஷமாக் இருந்தது.
கடந்த வாரம் சொன்னாள் “நாங்கள் இந்த வாரம் அவருடைய கிராமத்துக்கு போனோம். அங்கே ஒரு மகாலட்சுமி கோவில் இருந்தது - அமைதியாக, அழகாக. It was a nice weekend.”
இனிமேல் அவர்களிடையே “வார இறுதிகள்” குறித்த சண்டைகள் அதிகம் வராது என்று தோன்றியது. பிரச்சினைகளும் அதற்கான விடையும் அவர்களிடமே இருந்தது. தியாவின் கணவன் அவர்கள் காதலிக்கும்போது கூட தன்னை மாற்றிக்காட்டிக்கொள்ளவில்லை. மாறாக தனது ரசனைகள் குறித்த குறிப்புகளை கொடுத்துக்கொண்டு தான் இருந்தான். அதை தியா புரிந்துக்கொள்ளாதது தான் இந்த பிரச்சினைகளின் ஆரம்பமே. அதிர்ஷ்டவசமாக தியா இதை புரிந்துக்கொண்டதும், தங்கள் வார இறுதிகளை இருவருக்கும் பிடித்தமாதிரி வடிவமைத்துக்கொள்ள முயற்சித்ததும் அவர்களுடைய திருமணம் வெற்றிப்பாதையில் அடியெடுத்து வைத்திருப்பதையே காட்டுகிறது.
{oshits} வாசிப்புகள் இந்த observation-க்கு!!!