Hindi
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

IndiPOPஇன்னைக்கு காலையிலே யதேச்சையா யாருடைய blog-ஐ படிச்சப்போ அதிலே அவங்க அம்மாவை நினைச்சு பயங்கர sentiment-ஆ எழுதி, அதிலே பாப் சாகரிகா பாடிய “மா..” என்ற பாடலின் வீடியோவையும் இணைத்திருந்தார்கள். எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. வழக்கமாக சாகரிகா ”டிஸ்கோ தீவானே” போன்ற beat songs-ஆக தான் பாடிக்கொண்டிருந்தார். அவர் வழக்கமாக அவருடைய சகோதரர் ஷானுடன் இணைந்து டூயட்கள் பாடிக்கொண்டிருந்தார். ஆனால் ஒரு jolt வைத்தது போல இன்ப பேரதிர்ச்சியாக ஒரு melody-ஐ பாடியிருந்தார். பயங்கர soulful பாடல் அது. அந்த Blogger-ன் பதிவில் இந்த பாடலை பார்த்ததும் ‘Open in YouTube' வழியாக திறந்தபோது அந்த காலக்கட்டத்தில் வந்த நிறைய பாடல்கள் இருந்தது. அவற்றை பார்த்ததும் எனக்கு காலச்சக்கரம் பின்னோக்கி சுழல ஆரம்பித்தது.

அது 1994-95 இருக்கும். அப்போது நான் பொறியியல் கல்லூரிக்கு போயிருந்தேன். (ஐயோ!!! வயசை சொல்லிட்டேனோ). அந்த சமயத்தில் இந்த பாடல்கள் வந்திருந்தன. இந்தி(ய) Pop music scene-ன் பொற்காலம் என்று சொல்லலாம். திரை சாராத இசைக்கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த (திரைப்பட பின்னணிக்கு நுழைய ஒரு துருப்புசீட்டாகவும்) இந்த Pop album-களை வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். இந்தியாவின் முதல் ராப் பாடகராக பாபா சேகல் புகழ் பெற்றதும் அந்த காலகட்டத்தில் தான். அவரை தொடர்ந்து ஆலிஷா சினாய் “Made in India" மூலமும், வெகு நாட்கள் திரையில் பாட வாய்ப்பில்லாமல் இருந்த ஹரிஹரன் “ரோஜா” மூலம் பெற்ற தேசிய அளவிலான அங்கீகாரம் அவருடைய “Colonial Cousins" Pop album மூலம் இன்னும் உயரத்துக்கு போய்க்கொண்டிருந்தார். அனாமிகா, ஷ்வேதா ஷெட்டி ஆகியோரும் தங்களுக்கு என்று ஒரு பெயர் உருவாக்கிக்கொண்டிருந்தார்கள்.

அப்போது திரை இசை மொழி வாரியாக ஒரு stamp / orchestration இருக்கும். வார்த்தை வரும் முன்பே இசையை கேட்டே அது என்ன மொழி பாடல் என்று சொல்லிவிடலாம். அந்த stereotype-ல் இருந்து ஒரு விடுதலை கொடுத்தது என்றால் இந்த indiPOP தான். மேலும் திரைப்பாடல்களில் கதையின் சூழ்நிலை காரணமாக சில கட்டுபாடுகள் இருக்கும். அந்த கட்டுத்தளைகளை தகர்த்து பாடகர்களுக்கு ஒரு creative freedom மற்றும் புதிய sound-ஐ கொடுத்தது இந்த indiPOP தான். அதனாலேயே அவை வந்தபோது ரசிகர்களின் மனதில் பச்சென்று ஒட்டிக்கொண்டது. இந்த 1992 - 1998 வரையிலான காலகட்டத்தை indiPOP-ன் பொற்காலம் என்றே சொல்லலாம். ஒரு கட்டத்தில் திரை இசையை ஓரம் கட்டிவிடுமோ என்னும் அளவுக்கு உயரங்களை அடைந்தது இந்த indiPOP இசை.

இந்த திரை சாராத இசையை வளர்க்க என்றே சில Music Label-கள் இருந்தன. Magnasound, Polygram, BMG Cresendo ஆகியவை திரை இசையை பெரிதாக நம்பாமல் இந்த பாப் இசையை வளர்த்துக்கொண்டிருந்தன. குறிப்பாக Magnasound. அவர்கள் மாதத்துக்கு 4 ஆல்பம் வெளியிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆரம்பத்தில் Baba Sehgal, Alisha Chenoy, Anaida, Suchitra Krishnamurthy, Hariharan, Daler Mehndi, Models ஆகியோரை promote செய்தது இந்த Magnasound தான். ஒரு TV Channel வெறுமனே indiPOP இசையை வைத்து காலம் ஓட்டிக்கொண்டிருந்தது. அது ETC Network. இந்த சேனல் பின்னர் indiPOP வீழ்ச்சி அடைந்ததும் பஞ்சாபி சேனலாக மாறி இப்போது ஜீ-யின் வசம் வந்துள்ளது.

Ho Gayi Hai...இந்த பாடல்களை ரசிகர்கள் மனதில் பதியவைக்க அழகிய visuals-ஓடு எடுக்கவேண்டியது அவசியமானதால் பாடல்களை மட்டும் இயக்கும் special இயக்குநர்கள் பலர் உருவானார்கள். அதுவே பின்னர் இந்தி படப்பாடல்கள் visually spectacular-ஆக மாற காரணம் ஆனது. பின்னாளில் அவர்கள் சில திரைப்படங்களை இயக்கவும் செய்தார்கள். இந்த களேபரத்தில் ஆண்களும், பெண்களும் இந்த music video-க்களை தங்கள் திரைப்பட வாய்ப்புகள் தேடும் முயற்சிகளுக்கு visiting card-ஆக, Portfolio-ஆக உபயோகப்படுத்தினர். அர்ஜுன் ராம்பால், ஜான் ஆபிரகாம், வித்யா பாலன், சமீரா ரெட்டி, ஆயிஷா தாக்கியா, த்ரிஷா, ரீமா சென், ஸ்ரேயா, தியா மிர்ஜா என பெரிய பட்டியலே இடலாம். கூட்டம் அதிகமாகும் போது visual attention வேண்டும் என்று சில பாடல்கள் படு கவர்ச்சியாக படமாக்கப்பட்டு சர்ச்சைக்கும் உள்ளானது. குமார் சானுவின் “ஜியே ஜா..”, பாலி சாஹூவின் “சுரா லியா தும்னே ஜோ..” பாடல்கள் வீட்டோடு உட்கார்ந்து பார்க்கமுடியாத ரகங்கள். ஆனால் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் சிலாகித்து பேசப்பட்டு அந்த வயதின் sexual fantascyகளுக்கு நல்ல தீனி போட்டது.

தெற்கில் பெரிதாக இந்த Pop கலாச்சாரம் வளரவில்லை. தமிழ் பாப்பின் மூலம் பலன் பெற்ற ஒரே நபர் - ‘பாப்’ ஷாலினி தான். 13 வயதில் இளம் sensation-ஆக முன்னிறுத்தப்பட்டார் அவர். தெற்கிலும் Magnasound இந்த திரை இசை சாராத indiPOP இசையை வளர்க்க முயற்சித்துக்கொண்டிருந்தது. ‘பாப்’ ஷாலினி, “Chennai Girl" அனுராதா ஸ்ரீராம், “Banana Boat" இரட்டையர்கள், S. திலீப்குமார் (பின்னாளில் AR Rahman), ”3 Brothers and a violin” பரசுராம் என பலரை promote செய்ய முயற்சித்தது. எனினும் AR ரகுமானுடன் ஏற்பட்ட பிணக்கு காரணமாக விரைவில் கடையை சாத்த வேண்டியதாயிற்று. இந்த சண்டையில் அவர்கள் தமிழுக்கு கொண்டுவந்த கஜல் முயற்சி கவனிக்கப்படாமல் போனது. அது தான் எனக்கு மிகவும் பிடித்த “காதல் வேதம்”.

அணையப்போகும் விளக்கு பளிச்சென்று எரியும் என்று சொல்வது போல இந்த indiPOP இந்தி இசையை பயங்கர உயரத்துக்கு கொண்டுபோனது. பல படங்களின் தயாரிப்பு செலவின் 60% பங்கை இந்த இசை உரிமையே பெற்றுத்தந்தது. ரூ. 10 கோடி அப்போது பெரிய budget. ஆனால் சில படங்களின் இசை உரிமை ரூ 7 கோடி வரை பெற்று தந்தது. இதை பார்த்து பல Music Companyகள் சொந்தமாக படம் எடுக்க ஆரம்பித்தன. 1998-99-ம் ஆண்டு வந்த mp3-ன் அபரித வளர்ச்சி, இந்த இசையை நசுக்க ஆரம்பித்தது. போதாக்குறைக்கு Remix கலாச்சாரம் ஆரம்பித்தது. கம்பெனிகள் remix மற்றும் ஆபாச நடனங்கள் மட்டுமே வெளியிட்டு காசு பார்க்க ஆரம்பித்ததில் நல்ல திறமைசாலிகள் எல்லாம் அழிந்துபோனார்கள். இதில் முதல் பலி indiPOP தான். அப்போது இருந்த பல பாப் பாடகர்கள் முழுநேர திரைப்பட பாடகர்களாக மாறினார்கள். மீதமுள்ளவர்கள் Stage shows செய்து அதில் வந்த வருமானம் மூலமும், Royalty மூலமும் வாழ்ந்தார்கள்.

இந்த indiPOP சமயத்தில் அதை கேட்டவர்களுக்கு நிச்சயம் அந்த காலகட்டம் ஒரு இனிமையான நினைவுகளை ஏற்படுத்தியிருக்கும். Magnasound, BMG Crescendo, Polygram ஆகியவை கடையை சாத்தி வருடங்கள் பல ஆகின்றன. Youtube-ல் இந்த பாடல்களை பார்க்கும்போது அப்படியே வாழ்க்கையை rewind செய்து 1995-99க்கு கொண்டுபோய்விடலாமா என்ரு தோன்றுகிறது. முடிந்த வரை அவற்றை mp3 வடிவில் சேகரித்து வைத்திருக்கிறேன். அவற்றை கேட்பதன் மூலம் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு... :-)

Related Articles