{mosimage}
கொஞ்ச நாட்களாக பார்த்த படங்களை பற்றி ஒன்றும் எழுதவில்லை... பெரிதாக காரணமில்லை - வெறுமனே சினிமா குறித்த பதிவுகள் குவிந்துவிட கூடாது என்கிற கவனம் தான். பின்பு பல படங்கள் ஒன்றாக சேர்ந்துவிட்டபடியால் ஒவ்வொன்றை பற்றியும் சுருக்கமாக சொல்லிவிடலாம் என்று முடிவு செய்து போட்ட பதிவு. என்னென்ன படங்கள் நான் சமீபத்தில் பார்த்தது? தமிழில் - ஊட்டி வரை உறவு, மறுபடியும், மலையாளத்தில் - வாஸ்தவம், தலப்பாவு, ஹிந்தியில் - Woh Kaun Thi, Anupama, Arth. மலையாள - வாஸ்தவம் / தலப்பாவு மற்றும் தமிழ் ஊட்டி வரை உறவு தவிர மற்றவை எல்லாம் veoh.com-ல் இருந்து Download செய்யப்பட்டவை. முன்பே சொன்னது போல - பல அரிய படங்கள் எல்லாம் veoh-ல் கிடைத்தது. எனவே இந்த பதிவு Veoh-க்கும், Google Videos-க்கும் மற்றும் இதை upload செய்த புண்ணிய ஆத்மாக்களுக்கும் சமர்ப்பனம்.
ஊட்டி வரை உறவுTab Title 1
மறுபடியும்:-
{mosimage}எனது All Time favourites-ல் இந்த படமும் ஒன்று. பல வருடங்களுக்கு பிறகு இந்த படத்தை 2 நாட்களுக்கு முன்பு தான் பார்த்தேன். பல இடங்களில் DVD/VCD-ஐ தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. கடைசியாக Google Videos-ல் யாரோ ஒரு புண்ணியவான் 1 வருடத்துக்கு முன்பு ஏற்றிவைத்து இருந்திருக்கிறார். அதை Download செய்து பார்த்தபோது இம்முறை படம் இன்னும் நன்றாக இருந்தது. ரேவதி நடிப்பில் பின்னியிருந்தார். குடும்பமே உலகம் என்று நினைத்து சந்தோஷமாக இருந்த துளசி (ரேவதி), தன் கணவனான திரைப்பட இயக்குநர் முரளி (’நிழல்கள்’ ரவி) நடிகை கவிதா (ரோகினி) கூட கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறான் என்று தெரிந்தவுடன், மீண்டும் தன் வாழ்க்கையை புதிதாக தொடங்குவதால் படத்துக்கு ‘மறுபடியும்...’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். காட்சிக்கு காட்சி பாலுமகேந்திராவின் ’டச்’ தெரிந்தது. நாடகத்தன்மையை ஓரளவுக்கு குறைத்து இயல்பாக நகர்த்தியிருந்தார். இளையராஜாவின் பாடல்கள் இனிமை என்றால், இதன் பின்னணி இசை ‘மாஸ்டர் பீஸ்’. அற்புதமான இசைக்கோர்வைகளை கேட்க முடிந்தது. பாலு மீது இருந்த மதிப்பை இந்த படம் குறைத்துவிட்டது. ஏன் என்று இதே பதிவில் பின்னால் சொல்கிறேன்.