{mosimage}
ஓரு regressive கே. பாலசந்தர் படத்தை எதிர்பார்த்தவர்களுக்கு இந்த படம் ஒரு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கும். யதேச்சையாக online-இல் இதன் கதைச்சுருக்கத்தை படித்தவுடன் இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டாகியது. எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. ஒரு கல்லூரி பேராசிரியர் மீது அவர் மாணவி கற்பழிப்பு புகாரை வீசுகிறாள். கிணறு தோண்ட பூதம் புறப்பட்டது போல சரமாரியாக அடுத்தடுத்து இரு பெண்கள் மேலும் புகார் கூற பேராசிரியரின் பாடு திண்டாட்டமாகிறது. உலகமே அவரை கைவிட்டுவிட்ட சமயத்தில், அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் மட்டும் அவரை உத்தமன் என்று நம்புகின்றாள். படத்தை காப்பாற்றுவது நல்ல விறுவிறுப்பான திரைக்கதை. அனாவசியமான பாடல்களோ, தேவையற்ற பில்ட்-அப்களோ இல்லாமல், நேர்க்கோட்டில் வேகமாக பயணிக்கிறது இந்த கதை. ஸ்ரீவித்யா, லட்சுமி, விஜயலலிதா என மூன்று நாயகிகள் இருந்தும், நம் மனதில் பதிவது என்னவோ விஜயலலிதா தான். கே.பியின் வழக்கங்களான ஜெமினி கணேசனும், ஜெயந்தியும் வந்து போகிறார்கள். ‘உன்னை வாழ்த்தி பாடுகிறேன்’ பாடல் ஒவ்வொரு ஃப்ளாஷ்பேக்கிலும் நுனுக்கமான ஆனால் முக்கியமான வித்தியாசங்களுடன் வருவது நல்ல யுக்தி. ஆங்காங்கே கே.பியின் நாடகத்தனமான டச்சுகள் தெரிந்தாலும், ‘நூற்றுக்கு நூறு’ ஒரு வித்தியாசமான அனுபவமே!!!
இதை படித்த {oshits} வாசகர்கள்களில்... எத்தனை பேர் இந்த படத்தை இனிமேல் பார்க்கப்போகிறார்களோ தெரியவில்லை.
நூற்றுக்கு நூறு
Tools
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode