நான் மிகவும் ஆசைப்பட்டு வாங்கிய 'Amazon' Kindle-ல் தமிழ் எழுத்துருக்கள் (Fonts) வரவில்லை என்பது ஒரு ஆதங்கமாகவே இருந்தது. இருந்தால் என்ன? நாம் தமிழ் புத்தகங்களை 'PDF' வடிவில் படித்துக்கொள்ளலாம் என்று எனக்கு சமாதானம் செய்துக்கொண்டேன். பின்பு என் மாமா அனுப்பிய 'URL-ல்' யூனிகோட் எழுத்துருக்களை நிறுவுவது குறித்து படித்த போது தமிழ் எழுத்துருக்களை எனது Amazon Kindle-ல் நிறுவிவிட முடியும் என்ற நம்பிக்கை தோன்றியது. வெளிநாடுகளில் Data Plan-களோடு கூடிய 'i-Phone'-ஐ வாங்கி அதை 'Jail Breaking' என்ற முறையில் 'உடைத்து' கறுப்பு சந்தையில் விற்பது வழக்கம். அதுபோல Amazon Kindle-ஐ 'Jail Break' செய்து, நமக்கு பிடித்த Screen saver, எழுத்துருக்கள் (Fonts) ஆகியவற்றை இணைத்துக்கொள்ளும் முறையை அந்த Link-கில் அறிந்துக்கொள்ள நேர்ந்தது.
Jail Breaking Instructions:-
1. கீழ்க்கண்ட லின்க்கில் இருந்து பதிவிறக்கம் செய்து, உங்கள் Kindle-ன் model-க்கு ஏற்ற bin file-ஐ 'root folder'-ல் copy செய்து, restart செய்யவும். பின்பு Kindle-ல் [HOME] -> [MENU] > Settings -> [MENU] > Update Your Kindle. இது நல்லபடியாக நடந்தால் "Update successful, Your Kindle is restarting..." என்று வரும்.
Hacker Link
2. பின்பு உங்கள் kindle-இன் model-க்கு ஏற்ற 'update_*_install.bin' file, மற்றும் fonts -ஐ copy செய்து Kindle-ஐ Restart செய்யவும்.
ஆனால் எனது துரதிர்ஷ்டம் - எல்லாம் நல்லபடியாக 'Jail Break' ஆகியும், தமிழ் உருக்கள் மட்டும் வேலை செய்யவே இல்லை. பிறகு எனது Kindle-ல் தமிழ் புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தை மெதுவாக ஒதுக்கி வைத்துவிட்டு SAP Technical புத்தகங்களை மட்டும் படித்துக்கொண்டிருந்தேன். அமுக்கி வைக்கப்பட்ட ஆசை மீண்டும் ஒரு கட்டத்தில் தலை தூக்க, மீண்டும் எனது 'Amazon Kindle-ல்' தமிழ் எழுத்துக்களை நிறுவும் முயற்சியை தூசு தட்டி ஆரம்பித்தேன். எனக்கு எப்போதும் இரண்டாவது முயற்சி வெற்றியில் முடியும். என்னை போலவே தமிழில் படிக்கும் ஆர்வம் மிக்க சில நண்பர்களின் பதிவுகளை படிக்க நேர்ந்தது.
முரளி என்ற அந்த நண்பர், Amazon Kindle-ல் நிறுவக்கூடிய தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியிருந்தார். அத்தோடு அவர் உருவாக்கிய / மின் புத்தக வடிவில் உருமாற்றம் செய்த கல்கியின் 'பார்த்திபன் கனவு' புத்தகத்தையும் இணைத்திருந்தார். மீண்டும் எனது Kindle-ஐ Jail Break செய்து அந்த எழுத்துருக்களை நிறுவினேன். முரளி உருவாக்கியிருந்த 'பார்த்திபன் கனவு' புத்தகத்தை மின்புத்தக கணினியில் ஏற்றினேன். மிக ஆர்வத்துடன், என் நெஞ்சு திக் திக்கென்று துடிக்க, எனது 'Kindle-'ஐ 'Reboot' செய்தேன். முதல் பக்கத்தில் 'பார்த்திபன் கனவு' என்று தமிழில் தெரிய, என் சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
முரளி உருவாக்கிய 'Fertigo Tamil' மற்றும் 'பார்த்திபன் கனவு' புத்தகங்களை இந்த Link-கில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். மேலே சொன்னதுபோல Font Hack-ஐ install செய்துக்கொள்ளவும். அந்த புத்தக பெயரை கிளிக்கி உள்ளே நுழைந்ததும் பெருத்த ஏமாற்றம். எல்லா எழுத்துக்களும் 'கச்சா முச்சா' என்று 'Symbols-'களாக காண்பிக்க, கிட்டத்தட்ட நிலைகுலைந்து போனேன். பேசாமல் Kindle-ஐ மீண்டும் 'Factory Settings-க்கே' மாற்றிவிடலாமா என்று யோசித்தேன். ஆபீஸுக்கு போகும் போது படிக்கும் பழக்கம் இருப்பதால் தினமும் சோற்று டப்பாவுடன் Kindle-ஐயும் கொண்டு போவது வழக்கம். ஒரு நாள் மறந்து போய் ஆபீஸிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன்.
வீட்டுக்கு வந்தவுடன் எனது சக ஊழியையிடம் 'நீங்கள் வீட்டுக்கு போக்கும்பொழுது எனது Kindle-ஐ கொண்டுவர முடியுமா? என்று கேட்டேன். அன்று எனக்கு கடுமையான ஜுரம் ஆதலால் வீட்டுக்கு வந்தவுடன் மருந்து எடுத்துக்கொண்டு உறங்கிவிட்டேன். திடீரென்று ஜோதியிடம் இருந்து ஒரு போன் கால். "உங்கள் வீட்டை தாண்டி போக இன்னும் 5 நிமிடங்கள் இருக்கிறது. மெயின் ரோட்டில் வந்து உங்கள் Kindle-ஐ பெற்றுக்கொள்ளவும்" என்று சொன்னார். அதன் படி வாங்கியும் வந்துவிட்டேன். நல்ல தூக்கம் கலைந்ததாலும், வெளியே பணியில் சென்று வந்ததாலும் அதற்கு பிறகு கொஞ்சம் Fresh-ஆகிவிட்டேன். Kindle-ஐ மிக ஏக்கத்தோடு பார்த்துவிட்டு 'Jail Break'கை uninstall செய்ய எனது கணிணியுடன் இணைக்க போனேன்.
அப்போது கடைசி முறையாக 'பார்த்திபன் கனவு' புத்தகத்தை திறந்து பார்த்தேன். மிக யதேச்சையாக 'Typeface-'ஐ 'Regular'க்கு மாற்றினேன். எனது கண்கள் ஆச்சரியத்தில் வெளியே வந்துவிடும் அளவுக்கு விரிந்துவிட.... எனது Amazon Kindle 'பார்த்திபன் கனவு' புத்தகத்தை தமிழில் எந்த குறுக்கீடும் இல்லாமல் அழகாக காட்டிக்கொண்டிருந்தது. 'இதை... இதை.. இதைத் தானே இத்தனை நாளாய் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன்' என்று என் மனம் துள்ளாட்டம் போட... முரளி சொன்ன முறையில் எனது வலைமனையின் சில தமிழ் பதிவுகளை மின்புத்தகமாக மாற்றி Kindle-ல் ஏற்ற, அழகான எழுத்துருவில் காட்டியது. இப்போது முரளி புண்ணியத்தில் 'பொன்னியின் செல்வனை' மூன்றாவது முறையாக படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
இணையத்தில் முன்பு TSCII (Tamil Standard Code for Information Interchange) என்ற முறையில் தமிழில் எழுதப்பட்டு வந்தது. இந்த TSCII முறையில் எழுதப்பட்ட பதிவுகளை படிக்க அந்தந்த எழுத்துருக்கள் (Fonts) நிறுவப்பட்டிருக்க வேண்டும். அதனால் அந்த எழுத்துருக்கள் இல்லாத கணினியில் தமிழில் படிக்க முடியாது. பின்பு யுனிக்கோட் (Unicode) முறை அமலுக்கு வந்தது. Windows XP-க்கு பிறகு வந்த OS-கலில் Unicode support enabled-ஆக இருந்ததால், யுனிகோட் முறையில் எழுதப்பட்ட எந்த ஆங்கிலமல்லாத எழுத்துருக்களையும், எந்த வித special fonts- உம் install செய்யாமல் இணையத்தில் நேரடியாக படிக்க முடிகிறது. இந்த Font Jail Break முறையில், Kindle-ல் படிக்க நாம் உருவாக்கும் மின் புத்தகத்தை TSCII முறையில் உருவாக்கி, சம்பந்தப்பட்ட எழுத்துருக்களை Amazon Kindle-இல் install செய்து படிக்கிறோம்.
Amazon தன் அடுத்த பதிப்பில் Unicode support for non-english languages ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் எந்த வித "gimmicks" - உம் இல்லாமல், நேரடியாக தமிழ் எழுத்துருக்களை Kindle- ல் படிக்க முடியும். அதுவரைக்கும் இப்போது சொன்ன முறையை பின்பற்றலாம். ஆனால் Amazon Unicode Support-ஐ இப்போதைக்கு ஏற்படுத்தாது என்றே தெரிகிறது. காரணம் - Amazon.com விற்கும் புத்தகங்கள் பெரும்பாலானவை ஆங்கில நூல்களே. Unicode support செய்யும் பட்சத்தில், பல ஆசிய மற்றும ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலமல்லாத புத்தகங்கள் பெருமளவில் வாசிக்கப்படும். அந்த பட்சத்தில் Amazon.com- இன் விற்பனை பாதிக்கப்படலாம் என்ற அச்சம் தான் காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
இதனால சகலருக்கு தெரிவிப்பது என்னவென்றால், தமிழ் புத்தகங்களை 'Kindle-ல்' படிக்க முடியாது என்று மனம் தளர்ந்து Amazon Kindle வாங்க ஆசையிருந்தும் தயங்கிய நண்பர்கள் இனி தாராளமாக வாங்கி தமிழ் எழுத்துருக்களை ஏற்றி படிக்க ஆரம்பிக்கலாம். நான் இந்த வாரத்தில் முடிந்த வரைக்கும் மேலும் சில தமிழ் மின் புத்தகங்களை உருவாக்கி உங்களுடன் பகிர்ந்துக்கொள்கிறேன். மின்உருவிலும், இணையத்திலும் தமிழ் தழைத்து வாழ்ந்து, வரும் சந்ததியிடம் சேர தொழில்நுட்பம் தடையில்லை. அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது நமது தலைமுறையின் கையில் தான் இருக்கிறது.
{oshits} வாசகர்கள் இந்த பதிவை படித்து கிண்டிலில் தமிழ் நூல்களை படிக்க முடியும் என்று அறிந்துள்ளனர்!!!