தெலுங்கு எழுத்தாளர் “யண்டமூரி” விரேந்திரநாத் தனது படைப்பான இந்த புத்தகத்தில் Abstract பாணி கதை சொல்லும் முயற்சியை கையாள முயற்ச்சித்திருக்கிறார். Abstract பாணி என்பது சில நிகழ்ச்சிகளை கொஞ்சம் மிகைப்படுத்தி படிக்கும் வாசகர்களை அதிர்ச்சி அடையவோ அல்லது amuse செய்தோ தான் சொல்லவந்ததை வேறு விதமாக அவர்களது மனதில் பதிக்கும் முறை. வித்யாதரி புத்தக கடையில் த்ரில்லர் என்ற புத்தகத்தை வாங்கி அதில் வெறும் வெள்ளைத்தாள்கள் மட்டுமே இருப்பதை கண்டு பொழுதுபோக்காக தன் அனுபவங்களை எழுத ஆரம்பிக்கிறாள். சிறிய வயதிலிருந்து சூழ்நிலைகள் காரணமாக ஆண்களை வெறுக்கும் வித்யாதரியை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றி தன்னுடைய காதலை சொல்கிறான் அனுதீப். அவ்வப்போது தன் காதலை நிரூபிக்க சில சில அதிசயங்களை நிகழ்த்திக்காட்டும் அனுதீப்பிடம் வித்யாதரிக்கு காதல் தலைதூக்கும் போதெல்லாம் அந்த அதிசய நிகழ்ச்சிகளுக்கு logical reasoning மூலம் காரணம் கற்பித்துக்கொண்டு வித்யாதரி அவனை மேலும் மேலும் அவமானப்படுத்துகிறாள். கடைசியில் அதிசயங்களின் உச்சக்கட்டமாக உலகமெங்கும் மின்சாரத்தை நிறுத்திவிடுகிறான் அனுதீப். அந்த ஆச்சரியத்தில் இருந்து மீளும் வித்யாதரிக்கு மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. பல இடங்களில் இந்த புத்தகம் Mushy romance என்னும் அளவுக்கு காதல் காதல் காதல் என்று ஒரே லெக்சராக இருக்கிறது. கடைசியில் அந்த எல்லாமே காதல் என்பது சுயநலமில்லாத எதிர்பார்ப்பில்லாத அன்பு, காதல் என்பது காரணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு உணர்ச்சி என்கிற cliche-க்களுடன் முடிகிறது. கதை Abstract முயற்சி என்பதால் அனுதீப் யாரென்பதை வாசகர்களுக்கு தெளிவுபடுத்த எழுத்தாளர் விரேந்திரநாத்தே வித்யாதரியை பார்த்து விளக்கம் கூறிவிட்டு அவளிடம் இருக்கும் “த்ரில்லர்” நாவலை எடுத்துக்கொள்வதாக முடித்திருக்கிறார். புது வகையான முயற்சி என்பதால் பாராட்டலாம் என்றாலும் நீளத்தையும், பல இடங்களில் வளவளவென்று தேவைக்கு மீறிய வசனங்களையும் குறைத்திருந்தால் இன்னும் எடுபட்டிருக்கும்.