இது திரு. விரேந்திரநாத் தெலுங்கில் எழுதிய 'செங்கல்வ பூதண்ட' என்ற நாவலின் தமிழாக்கம். விரேந்திரநாத்தின் மற்ற நாவல்களோடு ஒப்பிடும்போது மிக பிரமாதம் என்று சொல்லமுடியாது. ஆனால் ஓரளவுக்கு நல்ல முயற்சி. தன்னை சுற்றியிருந்தவர்களின் சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டு சிறைக்கு அனுப்பப்படும் அப்பாவி கிருஷ்ணனை சிறைவாசம் எப்படியெல்லாம் மாற்றுகிறது, அவன் வெளியே வந்தானா? பழிவாங்கினானா? என்று விரியும் ஒரு சாதாரண கதை. இதை சுவாரசியமாகவும், வித்தியாசமாகவும் ஆக்குவது இதில் வரும் கிருஷ்ணனின் குருவான தாகூரின் கதாபாத்திரம். முடிவில் கிருஷ்ணன் தன்னை சமுதாயத்தின் பாதுகாவலாளியாக நியமித்துக்கொண்டு புரட்சி பாதை மூலம் பயணிக்க தொடங்குகிறான். பல இடங்களில் மிகவும் cliched-ஆக பயணிக்கும் இந்த நாவலை ஒரு முறை படிக்கலாம். பதிப்பு: அல்லையன்ஸ், 244 ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர் சென்னை. பக்கங்கள்: 216, விலை: ரூ. 50