ஒவ்வொரு வருஷமும் ஜனவரியிலே இந்த வருஷம் என்ன பண்ணனும்னு நினைக்கும்போது, கட்டாயம் 120 பதிவுகள் (மாசத்துக்கு பத்து வீதம்) போடனும்னு நினைச்சுப்பேன் ஆனா வருஷா வருஷம் பதிவுகள் எண்ணிக்கை அபாயகரமாக குறைஞ்சுகிட்டே போகுது. நான் பதிவுகள் எழுத ஆரம்பித்தபோது கூட ஓரளவுக்கு பிஸியா தான் இருந்தேன். ஆனால் ஆஃபீஸ் முடிச்சு வெளியே வந்ததும் வேலையை பத்தி சுத்தமா மறந்துடுவேன். ஆனா கடந்த ஒரு வருஷமா வீட்டுக்கு வந்தப்புறம் தான் நிறைய SAP பத்தி நினைக்கிறேன். இந்த project-ல வந்ததுல இருந்து மத்த விஷயங்கள்ல சுத்தமா ஈடுபாடு குறைஞ்சு போச்சு. புதுசா புத்தகம் படிச்சு ரொம்ப நாள் ஆயிடுச்சு. கடைசியா எப்போ தூரிகை (அது தாங்க paint brush) பிடிச்சேன்னு ஞாபகம் இல்லை. ஒருவழியா போன வாரம் Go-Live ஆனதும் கொஞ்சம் வேலை குறைஞ்சிரும்னு நினைச்சா இன்னும் குறைஞ்ச பாடு இல்லை. அடுத்த வாரம் சென்னை வந்து settle ஆனப்புறம் திரும்ப ஓவிய வகுப்புகளுக்கு போகனும்னு முடிவு செஞ்சிருக்கேன். இப்போ தான் மெல்ல மெல்ல மத்த விஷயங்கள்ல் மனசு போகுது. நம்ம வலைமனையை ரொம்ப நாளா கண்டுக்கவே இல்லையேன்னு நினைச்சு அதை புது version-க்கு update பண்ணினேன். இந்த look நல்லா இருக்கா இல்லையான்னு நீங்க தான் சொல்லனும்.

Dubai Nightபேரை கேட்டதும் ஏதோ கில்மா மேட்டர்னு நினைச்சுக்காதீங்க... ஏமாந்து போவீங்க. சந்தியா எழுதின பதிவை படிச்சதும் எனக்கும் என்னோட நைட் லைஃப் ஞாபகங்கள் வந்துச்சு. அதனால என்னோட சில நினைவுகளையும் பகிர்ந்துக்கனும்னு தோணுச்சு. என் பொண்டாட்டி என்னை சரியான தூங்கு மூஞ்சின்னு திட்டுவா. வீட்டில் அப்பாவோ என்னை வேற மாதிரி திட்டுவார். நேரத்தோட படுத்து நேரத்துல எழுந்து பொழப்ப பாரேண்டான்னு திட்டுவார். என்னை பொருத்தவரை எனக்கு மிகவும் பிடிச்ச சமயம்னா அது நள்ளிரவு தான். ஏன்னா அப்போ தான் உலகமே அடங்கிப்போய் அமைதியா இருக்கும். அந்த அமைதி ஏனோ மனசுக்கு பயங்கர சந்தோஷத்தை குடுக்கும் எனக்கு. எனக்கு மூளை கொஞ்சம் சுறுசுறுப்பா வேலை செய்யுறது எல்லாம் அந்த அமைதியான சூழ்நிலையில் தான். இதமான தென்றல் காற்று நம் முகத்தை வருட, நமக்கு பிடித்த வேலையை செய்யும் அந்த அமைதியான தருணங்கள் மிக அழகானவை. அது அனுபவிச்சவங்களுக்கு தான் புரியும். ஒருவகையிலே பெரிய கவனச்சிதறல்கள் இல்லாம நமக்கு பிடிச்ச வேலையை செய்ய இந்த நள்ளிரவு தான் உகந்த சமயம். அந்த சமயங்கள்ல நமக்கு ரொம்ப பிடிச்சவங்க நம்ம கூட இருந்துட்டாங்கன்னா... சொல்லவே வேண்டாம். உலக தொந்தரவுகள் இல்லாம சந்தோஷமா இருக்கலாம்.

Aadhi and mobileகுழந்தைகள் வளர்வதை பார்ப்பதே ஒரு சந்தோஷமான விஷயம். சமயத்தில் அந்த சந்தோஷத்தில் நாம் சில விஷயங்களை கோட்டை விட்டுவிடுகிறோம் என்று தோன்றுகிறது. குறிப்பாக குழந்தைகள் Mobile Games / Video Games / PSP இவற்றை உபயோகிக்க ஆரம்பிக்கும் போது நமக்கு அது பிரமிப்பாக இருக்கும். ஆனால் காலப்போக்கில் அது ஒருவித addiction ஆக மாறும்போது நமக்கும் தலைவலியாக மாறிப்போகிறது. இதில் முழுதாக குழந்தைகளை குறை சொல்லிவிடமுடியாது. நாம் என்ன செய்கிறோம் என்பதை தான் குழந்தைகள் replicate செய்கிறார்கள். அதனால் நாமும் கொஞ்சம் கவனமாக நடந்துகொள்ளவேண்டும் என்பது சமீபத்தில் கண்கூடாக புரிந்தது. ஆதி என்னுடைய mobile-ஐ எடுத்து விளையாடிக் கொண்டிருக்கும்போது எனக்கு அது சந்தோஷமாக இருந்தது. அவன் தானாக screenlock-ஐ open செய்து media player / folder-க்குள்ளே navigate செய்து அவனுக்கு தேவையான பாடல்களை தேர்ந்தெடுக்கொள்ளும்போது பிரமிப்பாக இருந்தது.

Facebookசில வருடங்களுக்கு முன்னாடி என்னோட ஈமெயிலோட இன்பாக்ஸை திறந்த உடனே “உங்கள் நண்பர் தனது போட்டோவை உங்களோட பகிர்ந்துக்குறார். பாருங்க”-ங்குற ரீதியிலே ஏதாவது மெயில் வந்திருந்தா ரொம்ப சந்தோஷமாயிடுவேன். திறந்து பார்த்தா “இந்த link-ஐ click பண்ணி புது அங்கத்தினரா சேருங்க”ன்னு சொல்லும். ஐய்யோன்னு இருக்கும். ஆனா இது எப்போவாவது நடக்கும்... ஆனா கடந்த 1-2 வருடங்களாக இது மாதிரியான தொல்லைகள் அதிகமாயிடுச்சு. 10 மெயில் வந்தா அதுல குறைந்தது 4-5வது இது மாதிரியான மெயில்களா வரத்தொடங்கியது. நம்ம பசங்க இவ்ளோ பாசக்காரனுங்களான்னு பாக்கும்போது தான் “Send invitation to your friends"னு சொல்லி அவங்களோட contacts-ஐ எடுத்துக்குது. இவனுங்களும் “காசா பணமா”ன்னு “OK" குடுத்துடுறாங்க. அதனால எல்லாருக்கும் இது போன்ற மெயில்கள் வந்து தொல்லை பண்ணுது.

Playschoolநேத்திக்கு என்னோட நண்பர் கிட்டே பேசிகிட்டே இருந்தப்போ புட்டுவை (ஆதித்யா) ஸ்கூல்ல போடுறது பத்தி பேச்சு வந்துச்சு. அவனுக்கு ரெண்டு வயசு முடிஞ்சுடுச்சே அப்போ இன்னும் ஆறு மாசத்துல ப்ளே ஸ்கூல்ல போட்டுடுங்கன்னு சொன்னார். எனக்கு என்னவோ அதில் உடன்பாடு இல்லை. அதுங்க LKG-க்கு ஓட ஆரம்பிச்சா அடுத்து 20 வருடங்களுக்கு (PG உட்பட) ஸ்கூலுக்கு ஓடிகிட்டே இருக்கனும். இதிலே எதுக்கு ஒரு வருஷம் முன்னாடியே ஓடவிடனும்னு தோணுது. முன்னாடி பெற்றோர்கள் ரெண்டு பேரும் வேலைக்கு போறதால குழந்தையை பாத்துக்க நேரமில்லாம Creche, உடனே Play Schoolனு போட்டாங்க. அது பின்னே Peer Pressure-ல “பக்கத்து வீட்டு புள்ள Play School போகுது, நம்ம புள்ளக்கு முன்னாடியே ABCD கத்துகிச்சு”ன்னு பெற்றோர்கள் முண்டியடிச்சு சேர்த்து இப்போ PlaySchoolங்குறது ஒரு Norm ஆகவே மாறிப்போச்சு. My parents dote on Buttu. அவங்களும் அவன் கூட இன்னும் கொஞ்ச நாள் செலவழிக்கட்டுமே.

Aadhithyaஇரண்டு வருஷங்களுக்கு முன்னாடி ஒரு நவம்பர் 3ம் தேதி நள்ளிரவில் விஜயகிருஷ்ணனிடம் chat செய்துக்கொண்டிருந்த சமயம். அப்போது அகிலாவுக்கு பிரசவ வலி ஆரம்பித்திருந்தது. அப்போது விஜய் “உனது வாழ்க்கை இன்னும் சில மணிநேரங்களில் drastic-ஆக மாறப்போகிறது” என்று சொன்னார். மாற்றம் இருக்கும் என்று தெரிந்தாலும் இப்படி ஒரேயடியாக மாறும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. சில நாட்களிலேயே குழந்தைகள் நமது வாழ்க்கையின் pivot / அச்சாணியாக மாறிவிடுகிறார்கள். நமது வாழ்க்கை என்றபோது அது அவர்களை சுற்றி சுற்றி வரும்படி மாற்றிவிடுகிறார்கள். எங்கள் புட்டு (ஆதி) எங்கள் வாழ்க்கையில் வந்து 2 வருடங்கள் முடிந்துவிட்டன. அவன் பிறந்த சில மணிநேரங்களிலேயே அவனது புகைப்படங்களை உங்களோடு பகிர்ந்துக்கொண்டேன். இப்போது இந்த பிறந்தநாள் படங்களையும் உங்களுடன் பகிர்ந்துக்கொள்வதில் சந்தோஷம்.

Cigaretteதம்மட்டிக்காம தண்ணியடிக்காம வாழ்க்கையிலே எண்ணத்தை சாதிச்சோம்னு சில சமயம் தோனறதுண்டு. ஒரு தடவை என் தங்கச்சி அவ பிரெண்டு கிட்டே சொன்னா "அவன் வேஸ்ட்டு.. தண்ணி தம்மு அடிக்க மாட்டான்". ஒரு காலத்துல எதை வாழ்க்கையிலே உத்தமமான குணம்னு நினைச்சேனோ அது இப்போ கையாலாகாதத்தனம்னு படுது. தண்ணி அடிக்கிறதை இது வரைக்கும் ஒருத்தர் கூட பெருமையா சொன்னதில்லை.. ஆனாலும் தண்ணி தம்மு அடிக்கிறவங்க எண்ணிக்கை மட்டும் exponential-ஆ தான் வளருது. மனசு கஷ்டமா இருந்தா (ஒரு வேளை தண்ணி அடிக்க பழகியிருந்தா) ஒரு குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்து தூங்கியிருக்கலாம். இப்படி உங்களை எல்லாம் Blog எழுதி கொல்லாம இருந்திருக்கலாம். ஆபீஸ்ல சக ஊழியர்கள் கூட வார இறுதிகள்ல ஜோதியிலே ஐக்கியம் ஆகி "நல்ல Team member"நு சீக்கிரமா பேர் எடுத்திருக்கலாம். ஏனோ நான் Out of sync-ல வளர்ந்ததால எனக்கு பக்கத்துல யாராவது தொடர்ந்து 2 சிகரெட் புடிச்சாலேயே அவங்க மேலேயே வாந்தி எடுத்துடுவேன்.

Crazy Mohanஇந்த தீபாவளி அன்று சேனல் மாற்றிக்கொண்டிருந்த போது டி.டி-யில் கிரேஸி மோகனின் பேட்டி ஓடிக்கொண்டிருந்தது. கமல்ஹாசனுடனான தனது திரையுலக பயணத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தார். தமிழ் நாடகவுலகத்துக்கு கிடைத்த ஒரு அற்புதமான பொக்கிஷம் இவர். பொதுவாக கத்தி கத்தியும், உடல் அபிநயத்தாலுமே பலர் நகைச்சுவையை முயற்சித்துக்கொண்டிருக்க, இவர் அசால்ட்டாக வார்த்தைகளாலேயே அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தார். அதுவும் மீட்டருக்கு மேலாக. நிமிஷத்தில் நூறு நகைச்சுவையை அடைத்துக்கொடுப்பார் இவர். அத்தனை ஜோக்குகளும் நமக்கு புரியவேண்டும் என்றால் பத்து தடவை கேட்டிருக்கவேண்டும். அவருடைய திரையுலக பிரவேசம் மற்றும் பயணம் கமல்ஹாசனோடு மட்டுமே இருந்திருக்கிறது. அவர் கமல்ஹாசன் அல்லாமல் ஒன்றிரண்டு படங்களில் பணிபுரிந்து இருந்தாலும் அவை வெற்றி அடையாததால் அவர் கமல்ஹாசன் “exclusive" என்பது போல ஒரு தோற்றம் உருவாகிவிட்டது. இரவென்று ஒன்று இருந்தால் பகல் என்று இருக்கவேண்டும் அல்லவா? மாஸுக்கு ரஜினி என்றால் க்ளாஸுக்கு கமல் இருக்கவேண்டுமே... சுஜாதாவுக்கு ஒரு பாலகுமாரன். அது போல தமிழ் நாடக உலகத்தில் கிரேஸிக்கு இணையாக பேசப்பட்டது எஸ். வி சேகர் தான்.

Lady Auto Driverஇன்னைக்கு கடலூர்ல இருந்து பாண்டிக்கு போக பஸ் ஸ்டாண்டுக்கு கிளம்பும்போது யதேச்சையாக ஒரு பெண் ஓட்டுநரின் ஆட்டோவில் பயணிக்க நேர்ந்தது. நான் கடலூரில் பார்த்த முதல் பெண் ஆட்டோ ஓட்டுநர் அந்த பெண் தான். அந்தப்பெண் ஷேர் ஆட்டோவுக்கு பதிலாக சவாரி ஆட்டோவாக எங்களை அழைத்து சென்றிருந்தாலும் நாங்கள் கேட்ட பணத்தை கொடுக்க தயாராக இருந்தோம். எனக்கு அவரை பார்த்ததும் சந்தோஷப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்று புரியவில்லை. கடினமான உடல் உழைப்பு தேவைப்படும் இந்த தொழிலில் ஆணுக்கு நிகராக இந்த பெண்ணும் வந்திருக்கிறாரே என்று சந்தோஷப்படுவதா இல்லை இப்படிப்பட்ட கஷ்டமான வேலைக்கு வரும் அளவுக்கு பொருளாதாரரீதியான கஷ்டம் அவரை செலுத்தியிருக்கவேண்டும் என்ற ஆதங்கமும் தோன்றியது. எது எப்படியோ, அந்தப்பெண்ணுக்கு வாழ்க்கை வண்டி நல்லபடியாக ஓடவேண்டும் என்று பிரார்த்திக்க தான் தோன்றியது. கடலூரில் இப்போது மூன்று பெண்கள் ஓட்டுகிறார்களாம். இந்தப்பெண் ஐந்து வருடங்களாக ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கிறாராம். எனக்கு ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது.

இன்னைக்கு “ஜெயா மேக்ஸ்” சேனல்ல “கண்ணுக்குள் நிலவு” பாட்டு பார்த்தேன். அந்த பாட்டுல ஊட்டியில வழக்கமா ஷூட்டிங் எடுக்குற ஷூட்டிங் மேட்டுல எடுத்த போர்ஷன் பார்த்தப்போ என் கவனம் அந்த ஒத்த மரத்துல போய் நின்னுச்சு. அவ்ளோ பரந்த புல்வெளியிலே இந்த ஒத்த மரம் மட்டும் பயங்கர வசீகரமா ஸ்டைலா நிக்கும். முதல் முதலா ரோஜா படத்தில் வந்த “புது வெள்ளை மழை” பாட்டுல தான் அந்த மரத்தை கவனிச்சேன். என்னடா இது காஷ்மீர் மாதிரியும் இல்லை ஆனா மணிரத்னம் ஏமாத்த மாட்டாரேன்னு நினைச்சேன். அப்புறமா இந்த மரத்தை மஞ்சு வாரியர் நடிச்ச மலையாள படமான “Summer in Bethlehem” படத்துல வந்த “சூல மடிச்சு..”ன்னு தொடங்குற பாட்டை கவனிச்சப்போ இது ஊட்டி தான்னு தெரிஞ்சுது. ஆனா 2003-ல் ஊட்டி போனப்போ தான் இந்த மரம் வழக்கமான ஷூட்டிங் மேட்டுல இருக்குன்னு தெரிஞ்சுது. அந்த மரத்தை பார்த்ததும் எனக்கு செம பரவசம் - ஏதோ நான் வணங்குற தெய்வத்தையே நேர்ல பார்த்த மாதிரி ஒரு நெகிழ்ச்சி. அந்த மரத்தை புடிச்சுகிட்டு புதுசா வெட்கப்படுற ஹீரொயின் மாதிரி கன்னத்தை இழைச்சுகிட்டு சுத்தி சுத்தி வந்தேன். அந்த மேட்டுல, கிட்டத்தட்ட 2-3 சதுர கிலோமீட்டர் பரப்புல இது ஒரு மரம் மட்டும் தான் இருக்கும். Sunset-ல இந்த மரம் தனியா நிக்கறதை பாக்கும்போது ஏதோ ஒருவித சோகம் நம்மை வந்து தொத்திக்கும். அதுக்கப்புறம் ஊட்டியிலே எடுத்த எந்த பாட்டா இருந்தாலும் என் கண் அந்த ஒத்த மரத்தை மட்டுமே தேடும்.