Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

Cigaretteதம்மட்டிக்காம தண்ணியடிக்காம வாழ்க்கையிலே எண்ணத்தை சாதிச்சோம்னு சில சமயம் தோனறதுண்டு. ஒரு தடவை என் தங்கச்சி அவ பிரெண்டு கிட்டே சொன்னா "அவன் வேஸ்ட்டு.. தண்ணி தம்மு அடிக்க மாட்டான்". ஒரு காலத்துல எதை வாழ்க்கையிலே உத்தமமான குணம்னு நினைச்சேனோ அது இப்போ கையாலாகாதத்தனம்னு படுது. தண்ணி அடிக்கிறதை இது வரைக்கும் ஒருத்தர் கூட பெருமையா சொன்னதில்லை.. ஆனாலும் தண்ணி தம்மு அடிக்கிறவங்க எண்ணிக்கை மட்டும் exponential-ஆ தான் வளருது. மனசு கஷ்டமா இருந்தா (ஒரு வேளை தண்ணி அடிக்க பழகியிருந்தா) ஒரு குவார்ட்டர் அடிச்சுட்டு குப்புற படுத்து தூங்கியிருக்கலாம். இப்படி உங்களை எல்லாம் Blog எழுதி கொல்லாம இருந்திருக்கலாம். ஆபீஸ்ல சக ஊழியர்கள் கூட வார இறுதிகள்ல ஜோதியிலே ஐக்கியம் ஆகி "நல்ல Team member"நு சீக்கிரமா பேர் எடுத்திருக்கலாம். ஏனோ நான் Out of sync-ல வளர்ந்ததால எனக்கு பக்கத்துல யாராவது தொடர்ந்து 2 சிகரெட் புடிச்சாலேயே அவங்க மேலேயே வாந்தி எடுத்துடுவேன்.

எனக்கு தண்ணி அடிக்கிறவங்களைவிட தம் அடிக்கிறவங்க மேல தான் வெறுப்பு அதிகம். தண்ணி அடிக்கிறவன் - அவன் குடிக்கிறான், அவன் உடம்பை கெடுத்துக்குறான். எக்கேடோ கெட்டு செத்து ஒழின்னு வீட்டுடலாம். ஆனா இந்த சிகரெட் புடிக்கிறவங்க அவங்க மட்டும் உடம்பை கெடுத்துக்காம அவங்களை சுத்தி இருக்குறவங்களை Passive Smoking மூலமா பக்கத்துல இருக்குறவங்களையும் சேர்த்து கெடுப்பாங்க. ஆனா என்னவோ தம்மடிக்கிறது பெருமைங்கூற மாதிரி பஸ்ஸுல, ரயில்ல வெட்கமே படாம எடுத்து பத்தவச்சு பயணிகளை தொந்தரவு படுத்துவாங்க. தட்டிக்கேட்க போனா திருடனுக்கு திருடன் கூட்டுன்னு தம்மடிக்காத மத்த களவாணிங்க துணைக்கு வந்துடுவாங்க. ஒரு தடவை யோசிச்சிருக்கேன் - ஒருவேளை நானும் தம்மடிக்க ஆரம்பிச்சிருந்தா அந்த "யார் எக்கேடு கேட்டா என்ன"ங்குற attitude எனக்கும் வந்திருக்குமோன்னு ... அப்புறம் அத்தைக்கு மிசை முளைச்சா கதையா போயிடப்போகுதுன்னு விட்டுடுவேன்.

ஆபீஸ்ல சக ஊழியர்கள் சாப்பிட்ட பிறகு தம்மடிக்க போகும்போது நான் அவங்க கூட போறது இல்லை. அலுவலகங்கள்-ல பல முடிவுகள் தம்மடிக்கும்போது / தண்ணியடிக்கும்போது தான் எடுக்கப்படுது. அதனாலேயே automatic-ஆ எனக்கு முடிவுகள் வெறுமனே தெரிவிக்கப்படுது. இதால எனக்கு பெரிய பாதிப்பு இல்லைங்குற போதிலும் ஒரு Team-ங்குற வகையிலே பாக்கும்போது நான் பெரிதா "ஒட்டுறது இல்லை"ங்குற மாதிரி பிம்பம் உருவாக்கிடுது. எனக்கென்னவோ தண்ணி / தம் அடிக்காததால நிறைய இழந்திருக்கேனோன்னு சில சமயம் தோணும். அப்புறம் இந்த வேலையை செய்யுறவங்களே "விடணும்னு நினைக்கிறேன்.. ஆனா முடியலைன்னு" குற்ற உணர்ச்சியோட (சால்ஜாப்பு) சொல்லிகிட்டே தான் செய்யுறாங்க. ஒருவேளை "எனக்கு பிடிச்சிருக்கு, நான் தண்ணி அடிக்கிறேன் / தம் அடிக்கிறேன்னு" தைரியமா சொல்றவங்களை பார்த்திருந்தா எனக்கும் இது பற்றிய apprehensions இல்லாம இருந்திருக்குமோன்னு தெரியலை.

ஒரு வேளை தண்ணியடிக்க ஆரம்பிச்சு இருந்தா பெத்தவங்களும், மத்தவங்களும் என் மீது ஒருவித பயத்தோடு (கூடவே சில சமயம் அருவெறுப்போடு) இருந்திருக்கலாம். அதனாலேயே நான் இன்னும் சீரியஸாக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கலாம். தண்ணியடிக்கும் எனது Cousins-களுடன் இன்னும் நெருக்கமாகி இருக்கலாம். நாளை எனது சுயசரிதை எழுதும்போது எப்படி குடிப்பழக்கத்தை நிறுத்தினேன் / கைவிட்டேன் என்பதை சொல்லும்போது சுவாரசியமாக இருந்திருக்கலாம். Being normal is boring :-) இது காலம் கடந்த ஞானோதயமோ? இத்தனை வருஷம் இது எதுவும் இல்லாம வாழ்ந்தாச்சு. இனிமேல் இதை எல்லாம் ஆரம்பிக்கனுமா? அதனால வாழ்க்கையிலே நிறைவேறாத ஆசையா இந்த தண்ணி / தம் பழக்கத்தை நினைச்சுக்க வேண்டியது தான் :-) இக்கரைக்கு அக்கரை பச்சையோ?

Related Articles