This Deepavali happened to be a memorable one, not just because it is my first Deepavali after the marriage, but I had some good news pouring in. Also I had received calls from all the people who matters me a lot. Whether it were my nieces Meera, Indhu / Madhu or my most favourite kid friends Viggi & Vini, Thiru from Dubai and ofcourse my sweet darling Vijay (Australia), even those few minutes of talking to them on the Deepavali day made the festival still more special. I just want to extend my arms and say this in front of the whole world to them - "I Love You All... A Lot". And by the mid of the day I received the best news - Girish's marriage invitation via phone. I have been longing & praying a lot that he should get married soon and the moment he said that he is gonna get married with Kavya on coming Nov 5th, my day is made. I just wish Girish a Happy Marriage Life because as a calm & artistically inclined talented guy he deserves it much. He is a good Guitar player and I hope Kavya gets to be wooed by him with Girish playing the guitar.... How romantic!!! In the same vein, I wanted to share the comments from my friends about my previous article - பிறந்தநாள் வாழ்த்து.
அந்த பதிவை படித்துவிட்டு அனன்யாவும், மேலும் சில நண்பர்களும் அது மிகவும் feelings-ஆக இருந்ததாக சொன்னார்கள். என் மனைவி எனக்கு ஆறுதல் எல்லாம் சொன்னாள். உண்மையில் எனக்கு அந்த பதிவை எழுதியபோது அவ்வளவு உருக்கம் எல்லாம் இல்லை. குறிப்பாக இந்த தருணத்தில், அதுவும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் எல்லாம் மிக நன்றாக போய்க்கொண்டு இருக்கும் வேளையில் இப்படி கடந்த காலத்தை நினைத்து உருகும் நிலையில் நான் இல்லை. கடந்த 3-4 வருடங்களாகவே நான் யாரிடம் எல்லாம் நெருங்கி பழகவேண்டும் என்று நினைத்திருந்தேனோ அவர்கள் அனைவருடனும் நெருங்கிப்பழகும் வாய்ப்பும், இனிமையான நினைவுகளும் கிடைத்தன. சொல்லப்போனால் கடந்த காலத்தில் நெருக்கமாக பழகவேண்டும் (நந்தகுமார், சந்திரமோகன்) என்று நினைத்து அப்போது நடக்காமல் போன நட்புகள் பல வருடங்களுக்கு பிறகு ஆச்சரியமாக கைகூடியது. அலுவலக வட்டத்தில் ஜிஷோர் (my Dubai darling) , (குட்டி) வைத்தி - my kid brother, ஸ்ரீனிவாசன் (my favourite since I joined Keane), personal circle-ல் அனன்யா (foster sister), விஜய் (My ultimate heartthrob & soulmate), என் மேல் அன்பு செலுத்தும் மனைவி, அடுத்த மாதம் வரப்போகும் எங்கள் குட்டிப்பாப்பா என்று என்னை சுற்றி என்னை என்னை நேசிப்பவர்களுடன் வாழ்க்கையின் மிக மிக ரசனையான காலகட்டத்தில் இருக்கிறேன் & இதன் ஒவ்வொரு நொடியையும் ரசித்து அனுபவித்துக் கொண்டு இருக்கிறேன். எனினும் தற்போது தொடர்பில் இல்லை என்கிற ஒரே காரணத்தால் என் வாழ்க்கையில் கடந்தவர்களை ’நினைவில்லை’ என்று acknowledge செய்ய மறுக்க மனமில்லை. என் தங்கை ஒரு முறை சொன்னாள் - “உனக்கு கல்யாணத்துக்கு முன்பே இப்படி negative அனுபவங்கள் எல்லாம் கிடைத்தது நல்லது. நீ கல்யாணத்துக்கு பிறகு possessive ஆக இல்லாமல் மற்றும் உன் மனைவியுடன் அன்பாக இருப்பாய் காரணம் உனக்கு அன்பை திருப்பி செலுத்தாவிட்டால் அதன் வலி என்னவென்று தெரியும்”. 100% உண்மை. தற்காலத்தில் மிக சந்தோஷமாக இருப்பதால் தான் கடந்த கால உறவுகளை கசப்பு இல்லாமல் நினைவுகூர முடிகிறது. எனவே எனக்கு அந்த பதிவில் எந்த வித ‘feelings'-ம் தெரியவில்லை.
அனன்யாவின் தீபாவளி கொண்டாட்டங்கள் குறித்த பதிவை படித்ததும் எனது எண்ணமும் அதுவே என்று தோன்றியது. முன்பு எல்லாம் தீபாவளி என்றால் 1 மாதத்துக்கு முன்பே களை கட்டிவிடும். தீபாவளி பலகாரங்கள் போட அக்கம்பக்கத்து அத்தைகள் எல்லாம் கூடிவிடுவார்கள். ஒரு பக்கம் முறுக்கும் அதிரசமும் எண்ணெய் சட்டியிலிருந்து எடுத்துப்போட்டுக் கொண்டு இருப்பார்கள். மறுபக்கம் நாங்கள் குட்டி பசங்கள் எல்லாம் நைசாக லவுட்டிக்கொண்டு வந்துவிடுவோம். எல்லாம் சுட்டு முடித்தபிறகு காற்று புகாத சம்புடங்களில் அடைக்கப்பட்டால் தீபாவளி அன்று தான் கிடைக்கும். ஆனால் இப்போதோ பலகாரம் சுடும் சமயத்தை எல்லாம் மெகா சீரியல்கள் ஆக்கிரமித்துக்கொள்ள, தீபாவளிக்கு முதல் நாள் பலகாரங்களை ஸ்வீட் கடைகளில் வாங்கிக்கொள்கிறோம். தீபாவளி அன்று தெரிந்தவர்கள் வீட்டுக்கு எல்லாம் பலகாரங்கள் பரிமாறிக்கொள்ள தெரிந்தவர்கள் வீடுகளுக்கு போய்வருவோம். ஆனால் இப்போது மக்கள் அனைவரும் டி.வி முன்பு ஐக்கியமாகி சினிமாக்காரர்களின் இளிப்பு / உளறல்களை பேட்டி என்கிற பெயரிலும், வெட்டிப்பேச்சுகளை பட்டிமன்றம் என்ற பெயரிலும் பார்த்துக்கொண்டு, ‘இந்திய தொலைகாட்சிகளில் முதல்முறை’ என்ற பாடாவதிகளில் மூழ்கிப்போய்விடுகிறார்கள். நேற்று என் அண்ணன் வீட்டுக்கு போனபோது அந்த பிள்ளைகள் திரையில் இருந்து கண் எடுக்காமல், வீட்டுக்குள் நான் நுழைவதை கூட கவனிக்காமல்.. ’என்னடி, இது தான் தீபாவளி டிரஸ்ஸா?’ என்ற என் கேள்விக்கு மிகப்பெரிய மனது வைத்து ஒரு சிறு தலையசைப்பில் பதில் சொன்னார்கள். சிறியவர்கள் மட்டுமல்ல வயதானவர்கள் கூட அதே நிலையில் தான் இருக்கிறார்கள். வாயை திறந்து மக்கள் பேசினால் கூட அது பெரும்பாலும் சினிமாவை பற்றியதாக மட்டுமே இருக்கிறது. அதற்கு பேசாமல் இருப்பதே உத்தமம் என்று நன்றாக தூங்கினேன் இந்த இரண்டு நாள் பகல் பொழுதுகளில். அவ்வளவு தான் என் தீபாவளி.