இந்த பதிவை நான் ஆங்கிலத்திலேயே எழுதியிருக்கலாம், ஏனென்றால் இது உலகத்தில் உள்ள எல்லா வேலை பார்க்கும் மனிதர்களுக்கும் பொருந்தக்கூடியது, எனினும் என் மனதில் உள்ளதை effective-ஆக சொல்ல என் தாய்மொழியில் எழுதினால் மட்டுமே முடியும் என்பதால் தமிழில் எழுதுகிறேன். கொஞ்ச நாட்களாகவே எனக்கு தனிமை மிகவும் அதிகமாக உறைக்கத் தொடங்கிவிட்டது. வேலையில் உள்ள அழுத்தம், வெள்ளிக்கிழமை விடுமுறையில் கூட வேலை செய்யும் நிர்ப்பந்தம், இரவு அறைக்கு வந்தால் படுக்க மட்டுமே தோன்றுகிறது. இந்தியாவில் இருந்தபோது ஒரு colourful வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டு இருந்தேன். வார இறுதிகளில் தொலைதூர பயணங்கள், புதிய இடங்கள், புதிய மனிதர்கள், புதுப்புது கலைப்பொருள் முயற்சிகள் என வாழ்க்கை மிக அழகாக இருந்தது. ஆனால் onsite-க்கு வந்தப்புறம் வாழ்க்கை மொத்தமாக மாறிவிட்டது. வேலையினால் வரும் அழுத்தம் மட்டும் என்றால் கூட என்னால சமாளித்துவிட முடிகிறது. ஆனால் சில அனாவசியமான காரணமற்ற நிர்ப்பந்தங்களை, அதிலும் மேலதிகாரிகளால் வரும் காரணம் விளக்கப்படாத கட்டுப்பாடுகளால் சோர்ந்து போகும் மனதை, அந்த அழுத்தத்தின் வீரியத்தை தனிமை மேலும் பல மடங்காக பெருக்கிவிடுகிறது.
இவ்வளவு நாட்களாக நான் தனிமையை விரும்புபவன், தனிமையிலே இனிமை காண்பவன், எல்லோருக்கும் வாய்க்காத திறமையாக தனிமையை அனுபவிக்கும் திறன் கொண்டவன் என்றெல்லாம் என்னைப் பற்றி நினைத்துக்கொண்டு இருந்தேன். இந்த onsite-ல் தான் எனக்கு என்னால் தனிமையை கையாள்வதில் பிரச்சினை இருக்கிறது என்று புரிந்தது. என்னை சேர்ந்தவர்கள் / குடும்பத்தினர் கூட இருக்கும்போது தனிமை படுத்திக்கொள்வது ஒரு வித பாதுகாப்பு உணர்ச்சியிலே தான் - சில அடிகளுக்கு அப்பாலேயே நம்மவர்கள் இருக்கிறார்கள், எப்போது வேண்டுமானாலும் நம் தனிமையை கலைத்துக்கொள்ளலாம் என்ற இறுமாப்பு. ஆனால் மனதுக்கு பிடித்தவர்கள் யாரும் அருகில் இல்லாதபோது தனிமை பயமுறுத்துகிறது. சமீபத்தில் ஜுரம் வந்தபோது ஜுரத்தின் வீரியத்தை விட, இது போன்ற சமயத்தில் கூட யாரும் இல்லையே என்ற வருத்தமே ஜுரம் இறங்காமல் செய்கிறது. தினமும் மனைவியிடம் ஃபோனில் பேசினாலும் அந்த 10 - 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் தனிமை சூழ்ந்துக்கொள்கிறது., தினமும் ஆஸ்திரேலியாவில் இருந்து என்னோடு gtalk-இல் உரையாடும் விஜய்யின் உரையாடல்கள் சந்தோஷத்தை கொடுத்தாலும், இவர்களை physical-ஆக feel செய்ய முடியாததில் தனிமை மிகவும் வாட்டுகிறது. குறிப்பாக விஜய்யிடம் நான் தினமும் ‘உங்களை எப்போது பார்க்கப்போகிறேன்?’ என்று கேட்டுக்கொண்டே இருப்பேன்.
ஆயிரம் தான் அன்பும், அன்பான வார்த்தைகள் இருந்தாலும் எதுவும் உடல்ரீதியான / physical presence-ஐ substitute / மாற்றிவைக்க பண்ண முடியாது என்பதை இந்த onsite தனிமை புரியவைத்துள்ளது. மனதுக்கு பிடித்த நபர்களின் கைகளை கோர்த்துக்கொண்டு நடந்தவாறே அளவளாவுவதில் உள்ள இன்பத்தை எந்த மின்னஞ்சலும், தொலைபேசி அழைப்புக்களும் தரமுடியாது என்பது என் அபிப்பிராயம். வெறுமனே விரகதாபம் தேகத்தை எரிக்கிறது என்றால் துபாயில் நைஃப் சாலைக்கு போய் தீர்த்துக்கொள்ளலாம், ஆனால் என் மனம் தேடுவது எல்லாம் ஒரு அன்பான கைகோர்த்தல், சாய்ந்துக்கொள்ள ஒரு தோள், இனிமையான அணைப்பு... எனக்கு இதை மனதுக்கு பிடித்தவர்கள் தவிர வேறு யாராலும் கொடுக்கமுடியாது. முன்பே சொன்னது போல உடலளவில் பூர்த்தி செய்யக்கூடிய இந்த தேவைகளை வெறும் வார்த்தைகளோ / எழுத்துக்களோ மாற்றிவைக்கமுடியாது. இந்த தனிமை என் வாழ்க்கையின் priorities-ஐ மீண்டும் யோசிக்க வைத்துள்ளது. ஆகஸ்ட்டில் ஊருக்கு திரும்பிய பிறகு ஏதேனும் முக்கியமான முடிவு எடுக்கவேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது. பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று. காரணம் - ”வெறுமனே புலம்பிப் பயனில்லை, நம் வாழ்க்கை போகும் போக்கை நாம் தான் தீர்மானிக்கவேண்டும்” என்று நம்புபவன் நான்.
துபாயில் என்னை போல தனிமையை கொஞ்சம் அழுத்தமாகவே உணரும் ஆண்கள் நிறைய. எனினும் பொருளாதார ரீதியாக குடும்பத்தை நிலைநிறுத்தவும், தோளில் ஏற்றப்பட்ட பாரங்களை சுமக்கவும், இந்த தனிமையை கசப்பு மருந்தாக விழுங்கிக்கொண்டு இயந்திரத்தனமாக, பற்றிக்கொள்ள கொம்பு இல்லாத கொடிபோல வாழும் இவர்களின் தனிமையின் வேதனையை என்னால் உணரமுடிகிறது. இதன் காரணமாக உருவாகும் ‘உறவு’களை கூட ஓரளவுக்கு sympathetic-ஆக பார்க்கமுடிகிறது. அதற்காக Extra Marital Affairs-ஐ ஆதரிக்கிறேன் என்பது அர்த்தமில்லை, ஆனால் எந்த சூழலில் அவை உருவாகிறது என்று பார்க்கும் பக்குவத்தை இந்த தனிமை தந்திருக்கிறது. எனினும் இந்த ’வெளி’ உறவுகள் தனிமனித சுதந்திரம், அது சரியா தவறா என்று தீர்ப்பளிக்க நமக்கு உரிமையில்லை என்பது எனது திடமான கருத்து.
{oshits} வாசகர்கள் இந்த பதிவை படித்துள்ளனர் - நீங்கள் உட்பட...!