Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
That which does not kill you makes you stronger - Neitzsche. தவறுவது மனிதம், மன்னிப்பது தெய்வீகம் ஆனால் செய்த தவறை உலகத்தின் முன்னால் ஒத்துக்கொள்வது வெகு சிலருக்கே முடியும். எந்த ஒரு அனுபவமும் நல்ல அனுபவமோ கெட்ட அனுபவமோ அல்ல. அவை வெறும் அனுபவமே. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வதிலிருந்தே அவை நல்லவையாகவோ தீயவையாகவோ முடிகிறது. இன்று நம்மை வாட்டிய அனுபவம் நாளை சிரிப்பூட்டக்கூடியவையாக மாறலாம். நான் என் கடந்த பதிவில் (Mr. Masochist) எழுதிய ஒரு அனுபவமும் அப்படியே. ஒரு பெண்ணின் தந்தை அந்த ப்ளாகை படித்துவிட்டு சந்தேகித்து சம்பந்த பேச்சை வாபஸ் வாங்கிக்கொண்டாராம். எனக்கு லேசாக ஒரு சிரிப்பை உதிர்ப்பதை தவிற வேறு எதுவும் தெரியவில்லை. ஆனால் கடந்த கால தவறை கூட அமைதியாக நினைவு கூறும் விதத்தை பற்றி எழுதவேண்டும் என்று மட்டும் தோன்றியது. மீண்டும் சொல்கிறேன் நாம் தவறுகள் செய்வது தவறே அல்ல. ஆனால் மீண்டும் அதே தவறை செய்வது தான் மிகப்பெரிய தவறு. மிக சமீபத்தில் கூட ஒரு சங்கடமான நிலைமை உருவானது.

 

என் அக்கா மகள் அம்மு எனக்கு மிகவும் பிடித்த கோவை பெண்களில் ஒருத்தி. எனக்கு முறை என்ற போதிலும் சொந்தத்துக்குள்ளே மணம் செய்யவேண்டாம் என்று வெளியே வரன் பார்த்து வந்தார்கள். எனக்கும் பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள். பெண் பார்ப்பது என் நண்பர்கள் சொன்னது போல அத்தனை எளிதாக இல்லை. ஒரு பெண் ஒத்து வந்தாள், ஆனால் அந்த பெண்ணின் தந்தை ரொம்ப அதிகாரமாக இருந்தார். நான் என் பெற்றோர்களுக்கே அடங்கமாட்டேன், யாரோ ஒருவருக்கா அடங்குவேன்? அந்த சம்பந்தம் முறிந்தது. விளையாட்டாக என் அம்மாவிடம் "பொண்ணு மட்டும் தான் பாக்கனும்னு பார்த்தால் இப்போ பொண்ணோட அப்பாவையும் இல்லை சேர்த்து பார்க்கவேண்டியதா இருக்கு. இதுக்கு அம்முவே பரவாயில்லை, அவள் மொத்த குடும்பத்தயும் in & out தெரியும் (அவள் அண்ணன் என் முன்னாள் ரூம்-மேட்)" என்று சொல்ல இருவரும் சேர்ந்து சிரித்தோம். இதை அப்படியே அம்முவிடம் SMS-ஆக அனுப்ப, எனக்கு தெரிந்து அவளும் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. அதன் பிறகு பலமுறை பலவிஷயங்கள் குறித்து பேசிக்கொண்டோம். நான் சொன்னதிலிருந்து 7வது நாள் அம்மு வீட்டை விட்டு வெளியேறி தன் காதலனை மகளிர் காவல் நிலையத்தில் வைத்து திருமணம் செய்துக்கொண்டாள். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனோம்.

அடுத்த நாள் எனக்கு ஒரு ஃபோன் கால். பேசியது என் cousin (அம்முவின் மாமா). "கடைசியா அவகிட்டே என்ன பேசினே?" ஓடிப்போவதற்கு முதல் நாள் "எப்படி gmail password மாற்றுவது? என்று கேட்டாள். அதற்கு முன்பு பேசியது எல்லாம் நான் அவளிடம் சில ஓவியங்களின் ஸ்கேன் கேட்டிருந்தேன், அது குறித்து தான்". கல்யாணம் நடந்துவிட்டது, இனி நடக்க வேண்டியதை பார்ப்போம் என்று இரு குடும்பத்தினரும் கல்யாணத்தை ஒத்துக்கொண்டு ரிசப்ஷன் வைப்பது என்று முடிவானது. கடந்த வார கடைசியில் நானும், என் குடும்பத்தினரும் கோவை சென்றோம். குசுகுசுவென்று பேசப்பட்ட பேச்சுக்கள் எனக்கு ஆறுதல் என்ற முகமூடியில் வர, அதிர்ந்து போனேன். கல்யாணத்துக்கு அடுத்த நாள் வந்த ஃபோன் கால் “நான் விரக்தியில் இருக்கிறேனா இல்லை தெளிவாக இருக்கிறேனா?” என்று சோதித்துக்கொள்ளவாம். 

{mosimage}நான் அம்முவை காதலிப்பதாக சொன்னதாகவும், அவள் அதிர்ந்து போய் என்னை திட்டி SMS அனுப்பியதாகவும், நான் விடாமல் அவளுடைய மேலதிகாரியிடம் சொல்ல (கிட்டத்தட்ட பயந்து போய்) அம்மு தன் காதலனை அவசரம் அவசரமாக திருமணம் செய்துக்கொண்டதாகவும், நான் இந்த அதிர்ச்சியில் (காதல் தோல்வியில்) ஏதாவது செய்துக்கொள்ள போகிறேன் என்று கரிசனப்படுவதாக சொன்னார்கள். கொஞ்ச நேரம் ஒன்றுமே புரியவில்லை. அவமானம் என்னை பிடுங்கி தின்றது. பின்பு தெளிவான பிறகு "அவர்களுக்கு பெண் ஓடிப்போன effect-ஐ மட்டுப்படுத்த என் casual comments-ஐ உபயோகபடுத்திக்கொண்டார்கள்" என்று தெரிந்தது. முகத்துக்கு நேரான அவர்களின் கரிசனம் என் முதுகுக்கு பின்னாடி காமெடியாக இருக்கிறது.

இது வெறும் அனுபவமே, ஆனால் இதிலிருந்து யாரை நம்புவது, யாரை சந்தேகிக்கவேண்டும் என்று ஒரு பாடம் கிடைத்துள்ளது. அம்முவிடம் பேசியபோது "நான் அப்படியெல்லாம் யாரிடமும் சொல்லவில்லை" என்று சத்தியம் செய்தாள். ஆனால் நான் அவளுக்கு அனுப்பிய SMS எப்படி மற்றவர்களுக்கு தெரிந்தது?. இதில் அம்முவின் மேலதிகாரி எங்கிருந்து வந்தார்? ஆரம்பத்தில் "girls deserve to be fucked and kicked off only" என்று கோபம் வந்தது. பின்பு இதனால் என்ன பாதிப்பு என்று யோசித்தேன். அப்படி எதுவும் இல்லை, இனிமேல் கோவை போவேனா / மற்ற குடும்ப விழாக்களில் கலந்துகொள்வேனா என்பது சந்தேகம். எனினும் என்னை கொல்லாதவரை இது போன்ற அனுபவங்கள் என்னை கடினப்படுத்துகின்றன, அவ்வளவே.

நான் கடந்த முறை எழுதிய என் 18வது வயதில் செய்த தற்கொலை முயற்சியும் இதே வரிசையில் இணைகிறது. அன்று சரியாக படிக்காததால் என்ஜினியரிங் காலேஜில் இடம் கிடைக்கவில்லை என்று தற்கொலைக்கு முயன்றது இன்று பயங்கர சிரிப்பாக இருக்கிறது. ஆனால் அந்த முயற்சியில் தான் என் பெற்றோர்கள் என் மீது வைத்திருக்கும் கைம்மாறு கருதாத பாசமும், நான் அவர்களுக்கு தர இருந்த துக்கமும் புரிந்தது. அதனால் தான் இன்று எனக்கு எதற்கு முன்பும் என் பெற்றோரும், குடும்பமுமே வருகிறார்கள். மற்றவை எல்லாமே அவர்களுக்கு அப்புறம் தான்.

சாவை மிக நெருக்கத்தில் பார்த்ததால் தான் எனக்கு நாளை பற்றிய கவலை இல்லை. ஒவ்வொரு தற்போதைய நிமிடத்தையும் முழுமையாக நுகரவேண்டும், அனுபவிக்க வேண்டும் என்ற ஜென் சித்தாந்தத்தை யாரும் சொல்லித்தராமலேயே கடைபிடிக்க வைத்தது அந்த தற்கொலை முயற்சி தான். அதன் விளைவு தான் இந்த சுற்றுலா, இலக்கிய, கலை ரசனைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும் செயல்பாடுகள். எந்த ஒரு நொடியிலும் முடியக்கூடிய வாழ்க்கை இது, ஆகவே இது இருக்கும் போதே நாம் ஒருவர் வாழ்க்கையிலேனும் ஏணிப்படியாக இருக்கவேண்டும் என்று ஒரு பேராசையை விதைத்ததும் அந்த தற்கொலை முயற்சியே. எனவே நிகழ்வுகள் எதுவாயினும் அதிருந்து கற்றுக்கொள்ளும் பாடம் மனிதர்களிடையே வேறுபடுகிறது.

இது போன்ற நிகழ்வுகள் என்னை என்னுள்ளில் இருந்து விலக்கி, யாரோ ஒரு மூன்றாவது மனிதனாக என்னையே பார்க்க வைக்கின்றன. அதனாலேயே இதை செய்திருக்கலாம், இதை தவிர்த்து இருக்கலாம் என்று ஒரு யோசனை கிடைக்கிறது. மீண்டும் அதே தவறுகளை திரும்ப செய்யும் எண்ணம் எனக்கில்லை. எனவே செய்த தவறுகளை நினைத்து மனம் புழுங்கி கூனி குறுகும் மனநிலையிலும் நான் இல்லை. இது நான் செய்த தவறு என்று ஒத்துக்கொள்வதன் மூலம் நான் மேலும் ஒரு பாடம் கற்றுக்கொண்டேன் என்று உரைக்கிறேன். அவ்வளவே! இது தான் நான், இப்படி தான் நான்.... ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்கட்டும், ஏற்காதவர்கள் விலகட்டும்.

Related Articles