Ramblings
Tools
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

{mosimage}

அட்டக்கட்டிக்கு வந்தாலே கதாநாயகிகளுக்கு sound collection மீது ஒரு ஈடுபாடு வந்துவிடும் போல. "பிரிவோம் சந்திப்போம்" படத்தில் தனிமை தாங்காமல் சினேகா தன்னை சுற்றிய சப்தங்களை பதிவு செய்கிறார். பல வருடங்களுக்கு முன்பு டி.டி-1-ல் வந்த "ரயில் சினேகம்" நாடகத்தில் கதாநாயகி இதையே செய்கிறாள், அதுவும் அதே அட்டக்கட்டியில். நான் 7-வது படிக்கும் போது டி.டி-1 ல் கே. பாலசந்தர் இயக்கிய "ரயில் சினேகம்" 13 - வார தொடராக ஒளிபரப்பானது. அப்போது அந்த நாடகத்தை புரிந்து கொள்ளும் வயது இல்லை எனக்கு. ஆனால் அதில் வரும் "இந்த வீணைக்கு தெரியாது.." & "ரயில் சினேகம்" ஆகிய பாடல்கள் இன்னும் நினைவில் இருந்தது. ஆனால் சமீபத்தில் அதை முழுதாக பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. வழக்கம் போல சிக்கலான உறவுமுறைகளை கையாண்டிருக்கிறார்


{tab=Blog}கதைக்களம் அட்டக்கட்டி என்று சொல்லிவிட்டு குன்னூரில் சில ஷாட்டுகள், மீதம் அனைத்தையும் சென்னையில் வைத்து சுருட்டியிருந்தார் கே.பி. முன்பு நாங்கள் குன்னூர் போனபோது இது தான் "ரயில் சினேகம்" வீடு என்று யாரோ கைகாட்டினார்கள். அந்த நாடகத்தின் ஆரம்பத்தில் கதாநாயகி கதாநாயகனை அண்ணா என்று அறிமுகம் செய்கிறாள். கடைசியில் அவனை காதலிப்பதாக propose செய்கிறாள். "முன்பின் தெரியாத ஆளை அண்ணன் என்று சொல்லிவிட்டதற்காக அண்ணன் ஆகிவிடமுடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் கே.பி. எப்போதுமே இது மாதிரி கோக்குமாக்கு தனமாக தான் யோசித்து கே.பி தன் காலத்தை ஓட்டியிருக்கிறார். "ரயில் சினேகம்" சுமாராக தான் இருந்தது, குறிப்பாக இரண்டாம் பகுதி படு இழுவை. www.rajshri.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். பதிவிறக்கம் செய்ய பணம் கட்டவேண்டும்.

{mosimage}அதே இணையதளத்தில் நான் அதிகம் பார்ப்பது "ரமணி vs ரமணி - 1". பிருதிவிராஜ் (பப்லு) & வாசுகி இடையே சரியான கெமிஸ்ட்ரி. உண்மையிலேயே புதுமண தம்பதிகளோ என்று தோன்றியது. உங்களுக்கு முடிந்தால் இந்த நாடகத்தை மீண்டும் பாருங்கள். "எப்படி இருந்த நாடகங்கள் மெகா சீரியல்களானவுடன் இப்படி ஆயிடுச்சு?" என்று நிச்சயம் தோன்றும். அந்த நாடகங்களை வாங்க முயற்சித்தபோது link வேலை செய்யவில்லை. பின்பு ராம்ஜி, தேவதர்ஷினியை வைத்து இரண்டாம் பாகம் தயாரித்து இருந்தார்கள். இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தது பப்லு, வாசுகி நடித்த முதல் series. சம்யத்தில் நடிகை ரவீணா டான்டனை நினைவுபடுத்தும் இந்த வாசுகி, "ஆனந்த மழை (தெலுங்கில் 'தொலி ப்ரேமா')" என்ற படத்தில் பவன் கல்யாணுக்கு தங்கையாக நடித்துவிட்டு, அதே படத்தின் ஒளிப்பதிவாளரை காதல் கல்யாணம் பண்ணிக்கொண்டு ஒதுங்கிவிட்டார். I really miss Vasuki in TV serials. ரேணுகாவிற்கு பிறகு கே.பி-யால் ரமணி vs ரமணி, காசளவு நேசம், மர்மதேசம் என பட்டை தீட்டப்பட்டவர் வாசுகி.

ரமணியில் வந்த புதுமண தம்பதியினரின் onscreen chemistry-க்கு பிறகு தமிழில் நம்பும்படியாக இருந்தது என்றால் "அலைபாயுதே" மாதவன் - ஷாலினி ஜோடி, இப்போது Airtel விளம்பரத்தில் வரும் மாதவன் - வித்யா பாலன் ஜோடி & நேபாளியில் வந்த பரத் - மீரா ஜாஸ்மின் ஜோடி. அதிலும் மீரா ஜாஸ்மினை கனமான பாத்திரங்களிலேயே பார்த்து பழகிவிட்ட எனக்கு நேபாளி படத்தின் பாடல்களில் "இளமை, துறுதுறுப்பு & நெருக்கம்" என பார்ப்பது மிகவும் refreshing-ஆக இருந்தது. அம்மணி கொஞ்சம் உடம்பை குறைத்தால் பரவாயில்லை. பல சமயங்களில் ஒல்லி பரத்துக்கு குண்டு அக்கா மாதிரி இருந்தார். ஆனாலும் அந்த நெருக்கம்.... Meera is shedding her inhibitions on screen. அந்த "கனவிலே கனவிலே.." பாடலை (அந்த சுரிதார், Open Hair-ல் Scooty segment & கடைசி பஸ் காட்சிகள்) எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதேயில்லை.

{mosimage}சமீபத்திய புது பாடல்களில் நான் மிகவும் ரசித்தது "நேபாளி" படப்பாடல்கள் - "கனவிலே! கனவிலே" & "வேடனை போல நான்". அதிலும் குறிப்பாக "வேடனை போல நான்..." பாடல் என் பயங்கர favourite. பாடகர் கார்த்திக்குக்கு பொருத்தமான ஜோடி (குரல்) என்றால் அது "பாம்பே" ஜெயஸ்ரீ தான். இவர்கள் இருவரும் பாடிய நேபாளியின் "வேடனை போல", பொல்லாதவனின் "மின்னல்கள் கூத்தாடும்", கஜினியின் "சுட்டும் விழி சுடரே" ஆகிய பாடல்களை கேளுங்கள், உங்களுக்கே புரியும். இதுநாள் வரை எனக்கு ஸ்ரீகாந்த் தேவா மீது ஒரு டப்பாங்குத்து இசையமைப்பாளர் என்ற எண்ணமே இருந்தது. ஆனால் இந்த நேபாளி படப் பாடல்களை கேட்டவுடன் "இவருக்கும் ஏதோ திறமை இருக்கிறது, வெளிக்கொண்டு வரும் சரியான இயக்குனர் கிடைத்தால் இவரும் நிச்சயம் ஜொலிப்பார்" என்று தோன்றியது. "சுடர்விளக்கானாலும் தூண்டுகோல் வேண்டும்."

கொஞ்ச நாள் முன்பு என் அண்ணி வகையில் சொந்தமான child prodigy ஈரோடு குமரனை பார்த்தேன். உலகின் மிக குறைந்த வயது Microsoft Certified மேதைகளில் இவனும் ஒருவன். அவனோடு பேசிக்கொண்டிருந்த போது "To be at right place at right time" என்பது எவ்வளவு முக்கியம் என்று புரிந்தது. குமரனின் அம்மா ஒரு டாக்டர், மாலைகளில் அவர் க்ளீனிக்கில் இருக்கும்போது குமரன் பக்கத்தில் இருந்த கம்ப்யூட்டர் சென்டரில் விளையாடிக்கொண்டு இருப்பானாம். அந்த Tutor குமரனின் பெற்றோரிடம் அவனுடைய கம்ப்யூட்டர் ஈடுபாட்டை கூறி, பின்பு ஒரு mentor-க்கு அறிமுகம் செய்து, அவன் பெற்றோர்களும் அவனை புரிந்து ஊக்குவித்து, rest is history. பல குழந்தைகளுக்கு அவர்களுடைய ஆர்வங்களை புரிந்துக்கொள்ளும் பெற்றோர்களும், சுற்றத்தாரும் கிடைப்பதில்லை. புரிந்தவர்கள் கிடைத்த திறமைசாலிகள் அதிர்ஷ்டசாலிகள்.."Luck is nothing but to be at the right place at the right time with right people's company" - ஒரு முறை ஷாருக் கான் சொன்னது..

{tab=Lyrics of Nepali Songs}

{mosimage}எனக்கு பிடித்த அந்த நேபாளி பட பாடல்கள் இங்கே.. நான் கவனித்து எழுதியதில் பிழை இருக்கலாம், கண்டுபிடித்தால் பின்னூட்டமிடவும்...
பாடல்: கனவிலே கனவிலே..
படம்: நேபாளி
பாடியவர்கள்: க்ரீஸ், ஸ்வேதா

கனவிலே கனவிலே பல நாள் கண்டது
எதிரிலே எதிரிலே அழகாய் வந்தது
எதுவும் பேசாமலே உரைப்பேன் என் காதலை
விழிகள் மூடாமலே ரசிப்பேன் பெண் சாரலை
அவள் என் ரசனை எனும் சங்கதியால் எட்டு திசைகளும் அதிருமே

சிறு புன்னகையில் என்னை வென்றுவிடும் அவள் தென்றலே
இரு கண்களையும் எழில் செய்துவிடும் அவள் மின்னலே
காலை மாலை யாவுமே காதல் கொள்ள வேணுமே
தினம் பேசிபோகிற ஜாடைகள் பல நூறு கவி சொல்லுமே

உடனே பகலே இரவாய் தோன்றிடு
இரவே இரவே பகலை நீங்கிடு
மூச்சுக்குழலிலே மோகம் விரியுதே
கூச்சம் தொலையுதே தேகம் சரியுதே

உடை தொட்ட இடம் விரல் தொட்ட்விட உயிர் கெஞ்சுமே
அடைபட்ட நதி உடைபட்டுவிட அலை பொங்குமே
வாசம் வீசும் பூவிலே நாளும் உந்த வாசனை
இதமான சூரிய தீபமாய் இமை நான்கும் ஒளி சிந்துதே

எது நீ எது நான் இனிமேல் தேடுவோம்
நதி நீ கரை நான் கலந்தே ஓடுவோம்
பூக்கள் முழுவதும் தீண்டும் வழியிலே
கூட்டம் நடக்குமே தோற்கும் அழகிலே

பாடல்: வேடனை போல நான் மாறவா?
படம்: நேபாளி
பாடியவர்கள்: கார்த்திக், "பாம்பே" ஜெயஸ்ரீ

{mosimage}வேடனை போல நான் மாறவா?
வேதியல் சேதியை கூறவா?
அணைக்கின்ற தாகம் உனை ஆராய
அதை கண்ட தேகம் உடல் தோள் சாய

என் சொல்ல என்னென்று சொல்ல என் பெண்மை
பகலென்ன இரவென்ன சொல்ல உன் சேவை
இதழாலே செய் நீ முதன் முதலே
உறவாலே செய் நீ முடிவினிலே

மொட்டை மாடி வேண்டும், ஒற்றை பாயும் வேண்டும்
தூங்க அல்ல...
ரகசிய மொழிகள் வேண்டும், பழகிய உதடுகள் வேண்டும்
பேச அல்ல...

வரும் பொழுதுகள் தங்கிட மிக நின்றதே வன்முறை..
உடல் வளைவுகள் எங்குமே இதழ் பதிக்குமே முத்திரை

நிலவின் பின்பக்கமே சந்திக்க வா என் தேடலை
இரவின் பிம்பங்களே கன்னங்களா இவ்வேளையில்

எனக்கென்று நீயும் உனை தீயாக்க
உனக்கென்று நானும் எனை பாயாக்க

மூச்சுக்காற்றை பருகும் மோகக்காட்டு மிருகம் நீ எனக்கு
இருபது விரலும் திருடு அறுவது கலைகளும் வருடு ராக்கிறுக்கில்

அறுசுவைகளும் உன்வசம் அதை உண்பதே என் தவம்
இது இருவரின் பொக்கிஷம் இனி என்றுமே சில்மிஷம்

சேரும் என் கட்டிலில் உன் ஆடைகள் உள் வாங்கிட
எதையும் செய் என்பதே என் கண்களின் சம்பாஷனை

மகரந்தம் கேட்டு இதழ் போராட
சரஸங்கள் பார்த்து செடி தாழ் மூட...

Related Articles