20/05/2009 - It was a sultry day in Dubai and the pressure of post - Blueprinting stage had just started taking a toll. The endless meetings, demands from the business people and the "tactics" of the Project Managers to get the best from the team members by "squeezing" them had started driving me crazy. Among all these odds, previous day somebody had mailed me thanking for uploading the S.Ve Sekar dramas and had asked for the Cho dramas. I replied him saying that I'll upload them when I get those stuffs. After we came from lunch (I believe I went out with Jishore that day), I saw that an "invitation" for chat from the person who mailed me yesterday. Normally I don't accept chat invitations from the strangers due to some earlier bitter experiences. But don't know why, I accepted that chat invitation and that single mouse click became a significant event by itself.
Relationships - KISS (Keep it simple and sweet)
Currently I am feeling a sense of dejavu in my relationship... A couple of things that happened long ago are repeating and I am trying my best not to get into any mistakes this time. This blog is not a whining blog but a document of my efforts to maintain self respect in the relationships. If anybody of you had found yourself similar to these situations and had tackled effectively, please share your insights in the comment.
RIP... Vaithy
Rest in peace... Vaithy!!! We miss you a lot!!!
மூடிய கையில் பத்து பைசா...
நீங்கள் ஒரு உறவில் இருக்கிறீர்கள்.. அந்த உறவின் ஆரம்ப நாட்களை நினைவு கூரமுடியுமா? முதல் முதலில் உங்கள் நண்பரை பரிச்சயம் செய்துக்கொண்ட நாள், மெதுவாக போன் நம்பர்களோ இல்லை முகவரியோ பரிமாறிக்கொண்ட தருணங்கள், முதல் கடிதம், முதல் போன் கால்... நினைத்தாலே சிலிர்ப்பாக இருக்கும். இது காதலர்களுக்கு மட்டும் என்று சொல்லவில்லை... எந்த ஒரு உறவாயினும் - சாதாரண சக ஊழியராகவோ இல்லை வகுப்பு தோழராகவோ வந்த நண்பர் உங்கள் வாழ்வின் முக்கிய நண்பராக மாறிய காலகட்டம்... எல்லா உறவுகளும் அதே இடத்தில் நின்றுவிட்டால் எவ்வளவு அழகாக இருக்கும்? நமக்கு மட்டும் சக்தி இருந்தால் காலச்சக்கரத்தை அங்கேயே நிறுத்திவிடமாட்டோமா? கிட்டத்தட்ட எல்லாருக்குமே தான் இது பொருந்தும். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படியா நடக்கிறது? வாழ்க்கையின் ஏதோ ஒரு கட்டத்தில் அந்த உறவின் மேலே ஒருவித Taking for granted/அலுப்பு/வெறுப்பு என நிலைகள் மாறிக்கொண்டு தானே இருக்கிறது? இல்லையென்றால் என் பல காதல் திருமணங்கள் விவாகரத்திலும், பல பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களிடம் பகைமை பாராட்டும் வழக்குகளை நம்முடைய வழக்கு மன்றங்களிலும், தினசரி வாழ்க்கையிலும் காண நேர்கின்றன.
வைத்தியும் பாலாஜியும்...
வலைமனை பக்கம் வந்து மாதம் ஒன்று தாண்டியாயிற்று. எழுதமுடியாத அளவுக்கு busy என்றும் சொல்ல முடியாது. அதே சமயம் எழுதும் அளவுக்கு அனுபவங்கள் கிட்டவில்லை என்றும் சொல்லமுடியாது. காரணம் - பொன்னியின் செல்வன் ஐந்தாம் பாகம், முள்பாதை ஆகிய புத்தகங்கள் படித்தாயிற்று, மசினகுடி காட்டுக்கு ஒரு முறை சென்று வந்தாயிற்று, எனது desktop-போடு சண்டைபோட்டு Windows 7-க்கு upgrade செய்தாயிற்று. எனினும் எழுத ஒரு சோம்பேறித்தனம். எனது வேலையில் ஏற்பட்ட சலிப்பினால் ஒரு மாற்று career option-ஐ முயற்சித்துக்கொண்டிருப்பதும், என் மனம் முழுவதும் அதிலேயே சென்றிருப்பதும் ஒரு காரணம். இந்த மனித மனம் இருக்கிறதே அது கொஞ்சம் விசித்திரமானது தான். எப்போதும் ஒரு தேடலிலேயே ஓடிக்கொண்டு இருக்கிறது. “அப்பாடா” என்று அயர்ந்து உட்கார்ந்தால் துரு பிடித்துவிடுகிறது. நம்முடைய தேடல் இத்தோடு முடிந்துவிடும் என்று ஒவ்வொரு முறையும் நினைக்கிறது ஆனால் நடந்தபாடு இல்லை.
ஒரு அப்பாவின் டைரியில் ஒரு பக்கம்....
பொதுவாக Indian parenting is overtly protective என்கிற அபிப்பிராயம் எனக்கு உண்டு. இது தலைமுறை சம்பந்தப்பட்ட விஷயம் என்று இவ்வளவு நாளாக நினைத்திருந்தேன். ஆனால் புட்டுவின் வருகைக்கு பிறகு எனக்கு ”இது தலைமுறை சம்பந்தப்பட்ட விஷயமல்ல மாறாக உணர்வு சம்பந்தப்பட்ட விஷயம்” என்று தோன்றுகிறது. இந்த protective குணங்கள் எல்லாம் காலப்போக்கில் தானாக வருவது என்று புரிந்து கொள்ள வாழ்க்கையில் அந்த கட்டத்துக்கு போகவேண்டியிருக்கிறது.
கல்யாண கலாட்டா - அழகான ராட்சசியே
அவன் பெயர் சேகர் என்று வைத்துக்கொள்வோம். அவனும் என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்க்கும் இளைஞன் தான். எனக்கு பிடித்த சக ஊழியர் வட்டாரத்தில் சேகரும் உண்டு. காரணம் சேகரின் சில குணநலன்கள் - மிக எளிமையானவன். அவனை பொறுத்தவரை WYSIWYG - What you see is what you get. Diplomatic-ஆக முன்னால் ””Hey Dude" என்று சிரித்துப் பேசிவிட்டு பின்னாலே “போறான் பாரு பா**ட்” என்று திட்டமாட்டான். உலகிலேயே இரண்டு வகையான மனிதர்கள் தான் உண்டு - அவன் நேசிப்பவர்கள் & அவன் நேசிக்காதவர்கள். அதனாலோ என்னவோ அவனுடைய நண்பர் வட்டம் மிக சிறியது. ஒரு வருடம் முன்பு தான் அவனுக்கு மீனாவுடன் கல்யாணம் ஆகியிருந்தது.