இது ஒரு புதிய Category - ஆக ஆரம்பிக்கிறேன். எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு எனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் பிரதிபலிப்பதை உணரலாம். அந்த வகையில், திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில், திருமணத்தை பற்றி, என்னுடைய மற்றும் என்னை சுற்றி இருக்கும் நண்பர்களின் திருமண வாழ்க்கையை பற்றி நான் கவனித்ததை, எனது கருத்துகளை பதிய முற்படும் முயற்சி தான் இந்த category-ல் வரும் பதிவுகள். எந்த திருமணமும் Perfect இல்லை என்பது தான் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம். மிகவும் ideal திருமண வாழ்க்கை புத்தகங்களிலும், திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். இத்தனையையும் மீறி எவரேனும் தங்கள் திருமண வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்னால் அவர்கள் fake செய்கிறார்கள் என்பதே உண்மை. அதற்காக பிரச்சினைகள் இருக்கும் திருமணங்கள் தோல்வி அடைந்தவை என்று அர்த்தமில்லை. மாறாக பிரச்சனைகளை தீர்க்க இருவரும் முழு மனதோடு முயலும் திருமணங்களே வெற்றி பெறுபவை. அந்த வகையில் என்னால் பிரச்சினை என்ற கண்டுபிடிக்கப்பட்ட சில சம்பவங்களை சொல்கிறேன்.
சொந்த காசுல சூனியம்....
பொதுவா நான் அலுவலக வாழ்க்கையையும், சொந்த வாழ்க்கையையும் முடிஞ்ச அளவுக்கு கலக்காம வச்சுக்க முயற்சிப்பேன். அப்படியும் சில சமயங்கள்ல நம்ம கொள்கைகளுக்கு பாதகம் நேர்ந்திடும். Project-ல சேர்ந்த உடனே ’உங்களுக்கு Facebook-ல invitation அனுப்பியிருக்கேன். Accept பண்ணிக்கோங்க’ன்னு சொல்லுவானுங்க பாசக்கார பயபுள்ளைங்க. மாட்டேன்னும் சொல்ல முடியாது. உங்க அலுவலக நண்பர்களை Facebook / Orkut-ல சேர்த்துக்குறதுங்குறது தடி குடுத்து அடிவாங்குற மாதிரி... இன்னும் coloqial-ஆ சொல்லனும்னா “சொந்த காசுல சூனியம் வச்சுக்குற மாதிரி”. அதுலயும் நமக்கு தினப்படியா Status message போடுற பழக்கம் இருந்துச்சுனா இன்னும் பிரச்சினை. உடம்பு சரியில்லைன்னு சொல்லிட்டு லீவு போட்டுட்டு ஊர் சுத்த முடியாது. எங்கேயாவது வெளியே போயிட்டு வந்தா நமக்கு தான் கை தானா photos-ஐ upload பண்ணிடுமே? ‘Man... you had a good time-ஆ?”ன்னு கண்ணடிப்புகளோடே விசாரணைகள் தொடங்கும்.
Public Display of Affection (PDA)
Yesterday in the "Deccan Herald" supplement I came across this feature of PDA (Public Display of Affection) by the today's generation. There were views supporting and opposing it and as I believe everyone is entitled to their opinion but somewhere I felt that the topic for discussion itself is outdated. Today we live in an age where everyone is open, forthright and had come out of the social barriers in being themselves. Atleast this generation is very open in expressing themselves, their affection and opinions. So I believe that discussing about PDA's at this generation is a passe'.
நினைவலைகள்
First Anniversary

Second Anniversary
அம்மா
பொதுவாக நான் இந்த ‘அன்னையர் தினம்” எல்லாம் கொண்டாடுவதில்லை. ஆனால் இம்முறை இந்த நாளில் என் அம்மாவை உங்கள் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தவேண்டும் என்று தோன்றுகிறது. பொதுவாகவே ஆண் பிள்ளைகள் எல்லோரும் அம்மாவிடம் தான் நெருக்கமாக இருப்பார்கள் - நானும் அதற்கு விதிவிலக்கில்லை. அது ஏன் என்று பார்த்தால் - அம்மாக்கள் பொதுவாக குழந்தைகளோடு சேர்ந்து ”வளர்கிறார்கள்” ஆனால் தந்தைகளோ கண்டிப்பு, வேலையால் நேரமின்மை, discipline, result என்று காலப்போக்கில் தங்களை தூரப்படுத்திக்கொள்கிறார்கள் என்பது எனது அபிப்பிராயம். என் அம்மா மனதளவில் எப்போதும் என் வயதையுடய இளமையானவர். அதனால் தான் எங்களுக்குள் பெரிதாக Generation gap என்று தீவிரமான இடைவெளிகள் வந்ததில்லை.