ரக்தசரித்ரா - ராம் கோபால் வர்மாவின் படம் என்பதால் மட்டுமல்ல, ஆந்திராவின் பிரபல மந்திரி / ரவுடிகளின் உண்மைக்கதை என்பதாலும் பார்த்தேன். ஆனால் எனக்கு அதில் ஒன்றும் புதிதாக இருப்பது போல தெரியவில்லை. வழக்கமான 'B-Grade' மசாலா படம் போல தான் இருந்தது. நிஜ வாழ்க்கையில் இவ்வளவு வன்முறை இருந்ததா என்பது ஆச்சரியமே. எனது ஆந்திர நண்பர்களிடம் கேட்ட போது 'ராயலசீமா' பகுதிகளில் இத்தகைய வன்முறைகள் இருந்தன என்றார்கள். திரையில் வன்முறைக்கு புது இலக்கணம் வகுத்திருக்கிறார் ராம்கோபால் வர்மா. மெல்லிய இதயம் படைத்தவர்களுக்கு இந்தப்படம் ஒத்துவராது என்று முன்னமே அவர் எச்சரித்திருந்தது உண்மையே.
விவேக் ஓபராய் 'பிரதாப் ரவி' (நிஜ வாழ்க்கையில் பரிதாலா ரவி) பாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். அவரது அம்மாவாக வரும் ஜரீனா வஹாபும், மனைவியாக வரும் வங்காள நடிகை ராதிகா ஆப்டேவும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த சமயத்தில் நிறைவாக நடித்திருக்கின்றனர். எனினும் புக்கா ரெடியாக மிரட்டியிருக்கும் அபிமன்யு சிங் தான் இந்த படத்தின் 'surprise package'. படம் இரண்டு மணிநேரம் தான் என்றாலும் என்னவோ மணிக்கணக்காக ஓடுவது போல ஒரு பிரமை. இத்தனைக்கும் அவ்வப்போது அம்புலிமாமா கணக்காக ராம்கோபால் வர்மாவே கதையை கட்டியம் சொல்லி ஒட்டினாலும் படம் ஆமையாக நகர்வது போன்ற பிரமை. சூர்யா இரண்டாவது பாகத்தில் தான் வருகிறார். எனவே படம் முடியும்போது இது "ரக்தசரித்ரா-2"வுக்கான டிரைலரோ என்று தோன்றுவது தவிர்க்க முடியாதது.
3 இடியட்ஸ் - இந்த படத்தின் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியை ஜெயா பச்சன் தற்போதைய ”ஹ்ரிஷிகேஷ் முகர்ஜீ” என்று குறிப்பிட்டிருந்தார். 70-களில் திரு. முகர்ஜீ இயக்கிய நடுத்தர குடும்பத்திய எளிமையான படங்கள் காலத்துக்கும் இனிமையாக நினைவில் நிற்பவை. 90-களில் தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தவுடன் ஹிந்தி சினிமாவில் எளிமை மறைந்து போனது. ராஜ்குமார் ஹிரானி இயக்கிய “முன்னாபாய் MBBS", "லகே ரஹோ முன்னாபாய்” படங்களில் எளிமையும், நம் வாழ்க்கையை தொட்டுப்போகும் இனிமையான தருணங்களும், சாமானியரும் உணரக்கூடிய கணங்களுடனும் கொண்டு மிகக்குறைந்த காலத்திலேயே cult classic ஆனது. அதற்கப்புறம் ராஜு இயக்கிய “3 இடியட்ஸ்”-ஐ பார்க்க ஏனோ தாமதமாகிக் கொண்டு இருந்தது. நமது கல்விமுறையின் ஆணிவேரையே கேள்விக்குள்ளாக்கும் 3 இடியட்ஸ் மிக அழகான படம் என்பதில் துளியும் ஐயமில்லை.
ஆமீர் கான், கரீனா கபூர் மற்றும் மாதவனை கல்லூரி மாணவர்களாக ஏற்றுக்கொள்ள ரொம்ப நேரம் பிடித்தது. சேத்தன் பகத் எதற்காக மல்லுக்கு நின்றார் என்று புரியவில்லை. Five Point Someone-ன் உரிமம் வாங்காமலேயே எடுத்திருந்தாலும், கேள்வி கேட்க சேத்தனுக்கு அருகதை இல்லை. புத்தகத்துக்கும் படத்துக்கும் 1000 வித்தியாசங்கள் சொல்லலாம். படம் முடியும் போது கண்ணில் கண்ணீர் முட்டியது. ஆனந்தத்தில் அல்ல... அனுதாபத்தில். இவ்வளவு நல்ல படம் இந்த மூதேவி விஜய்யின் கையில் எப்படி சீரழியப்போகிறதோ என்று. ஷங்கருக்கு தொழில்நுட்ப அம்சங்கள் அற்புதமாக கைவரலாம் ஆனால் ‘3 இடியட்’ஸுக்கு தொழில்நுட்பம் வேண்டாம், மாறாக பார்வையாளர்களின் emotional chord-ஐ தொடவேண்டும். பட்ட காலிலேயே படும் என்பது போல விஜய்யை அடுத்து ஷங்கரின் கையில் மாட்டியுள்ளது ‘3 இடியட்’ஸின் போறாத காலம் என்றே சொல்லவேண்டும்.
"கத துடருன்னு" - சத்யன் அந்திக்காடுடைய சமீபத்திய மலையாள படம் என்பதால் ஆர்வத்துடன் பார்த்து ஏமாந்த படம். வயதாக வயதாக தனக்கு என்று ஏற்படுத்திக்கொண்ட "Comfort Zone"-ல் சத்யன் ஒடுங்கிக்கொள்கிறாரோ என்று தோன்றியது. கிட்டத்தட்ட டி.வி சீரியல் போன்ற 'feel good' காட்சியமைப்புக்கள் போரடிக்கின்றன. படம் கதாநாயகியை சுற்றி பின்னப்பட்டது என்கிற போதும், அந்த கதாநாயகி பாத்திரமே ஒரு 'Dumb Dasmel-ளாக இருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம். கணவன் இறந்த பின்பு தான் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்பதை டாக்டருக்கு படித்த பெண்ணுக்கே தெரியவில்லை என்றால் அந்த பெண்ணை என்ன சொல்வது? அவ்வளவு படித்த பெண் இரவுகளில் ரயில்வே ஸ்டேஷனில் தூங்கி, பகலில் ஹாஸ்பிட்டல்களில் குளித்து வாழ்க்கையை ஓட்டுவது என்பது செம 'Dumb'. அதனாலேயே எனக்கு இந்த படத்தின் மீது ஒட்டுதல் வரவே இல்லை. எனினும் வித்யாவாக மம்தா மோகன்தாஸ் நல்ல தேர்வு. சிறிது நேரமே வந்தாலும் அவர் கணவனாக வரும் ஆசிப் மனதில் நிறைகிறார். இளையராஜாவின் இசையில் "ஆரோ பாடுன்னு தூரே.." பாடல் மிக அருமை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஹரிகரனையும், சித்ராவையும் ஒரே பாடலில் கேட்கும்போது ஏதோ ஒரு பரவசம். பொதுவாக சத்யனின் படங்களை DVD-யில் சேகரிக்கும் எனக்கு இந்த படத்தை வாங்க மனது வரவில்லை.
பார்க்க முயற்சித்து பாதியில் மூடிய படங்கள் -
1. புண்யம் அகம் (மலையாளம்) - பிருத்விராஜ் (வழக்கமான ஆக்ஷன் ஹீரோவாக சமீபத்தில் கெட்டுப்போனதற்கு முன்பு) 'நல்ல சினிமா'க்கள் செய்யவேண்டும் என்று நினைத்தபோது நடித்திருந்த 'ஆர்ட்' படம். ஐய்யோ! ஐய்யோ! ஐய்யைய்யோ!.. படத்தை 15 நிமிடம் கூட பார்க்க முடியாமல் நிறுத்திவிட்டு பதிவிறக்கம் செய்ததை Delete செய்யும் அளவுக்கு நோக்கடித்த படம் இது.
2. வ - குவார்ட்டர் (தமிழ்):- கருணாநிதி குடும்பம் எடுத்த படம் என்பதால் "குவார்ட்டர் கட்டிங்" என்று பெயர் வைத்துவிட்டு வரிவிலக்குக்காக 'வ' என்று பெயர் வைத்து.... இவ்வளவு மெனக்கிட்டவர்கள் படத்தை தயாரிக்கும் முன்பு கதை என்று ஒன்று இருக்கிறதா என்று பார்த்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். "தமிழ் படத்"தில் எல்லா கதாநாயகர்களையும் ஒட்டி நடித்த "மிர்ச்சி" சிவா, இந்தப்படத்தில் "தறுதலை" விஜய் போல நடித்தால் காமெடி என்று நினைத்து கொடுமை படுத்தியிருக்கிறார். ஒரிஜினல் விஜய்யின் நிலைமையே காமெடியாக இருக்கும்போது அவனையே காப்பி அடித்து காமெடி செய்ய முயற்சித்திருப்பது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவாது போல இருந்தது. 30 நிமிடம் பார்த்துவிட்டு Delete செய்யப்பட்ட பட்டவரிசையில் 'வ'வும் சேர்ந்ததில் ஆச்சரியம் இல்லை.
3. குஜாரிஷ் (ஹிந்தி):- சஞ்சய் லீலா பன்சாலியின் படங்கள் எப்போதுமே மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கும் - உணர்ச்சி வெளிப்பாடுகளிலும் சரி, அரங்க அமைப்புகளிலும் சரி. ஒரு எளிய கதையை கூட மிகப் பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து தான் சொல்லுவார் சஞ்சய். குஜாரிஷ்(விருப்பம்)-ல் உடல் ஒனமுற்று 12 வருடங்களாக சக்கர நாற்காலியில் முடங்கிவிட்ட மனிதனின் கருணைக்கொலை மனு குறித்த படம் - பார்ப்பவர்களின் மனதை கட்டிப்போடக்கூடிய அருமையான கதைக்களம் இருந்தும் நாம் காண்பது "depressing' கறுப்பு வண்ணம் மேலோங்கிய, ஒரு சோகமயமான கதை. கஷ்டப்பட்டு 20 நிமிடம் பார்த்துவிட்டு "இனியும் கஷ்டப்பட என் மனதில் தெம்பு இல்லை" என்று நிறுத்திவிட்டு Delete செய்த அடுத்தபடம் இது