{mosimage}மிகுந்த எதிர்பார்ப்புக்களுக்கு பிறகு இன்று தான் ‘அபியும் நானும்’ படத்தை பார்த்தேன். படம் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே நான் மிகவும் எதிர்பார்த்த படம் என்பதால் படம் பார்க்கும் வரை விமர்சனங்களை படிக்கவோ / பார்க்கவோ கூடாது என்ற வைராக்கியத்துடன் இருந்து பார்த்தேன். படம் முடிந்தபோது கொஞ்சம் ஏமாற்றம் தான். இயல்பான படம் என்றபோதும் அந்த அழுத்தம் ’மிஸ்ஸிங்க்’. படம் முழுவதும் வியாபித்து இருப்பது பிரகாஷ்ராஜும், ஐஸ்வர்யாவும் தான். அபத்தம் நெ.1 இதன் நாயகி த்ரிஷா. இத்தனை வருடங்கள் ’நடித்தும்’ இன்னும் நடிக்க தெரியாமல் தின்றுகிறாள். சிறிய வயது ரேவதி போல ஒரு நடிக்க தெரிந்த துறுதுறு புதுமுகத்தை தேடி போட்டிருக்கலாம். அபத்தம் நெ. 2 புதுமுகம் கணேஷ் வெங்கட்ராமனின் பாத்திரபடைப்பு. லாஜிக் என்பதை முற்றிலுமாக துறந்த பாத்திரம் இவருடையது. மூனாறு லொக்கேஷனும், பிரீதாவின் கேமிராவும், இயல்பான வசனங்களும் தான் படத்தை கொஞ்சமேனும் காப்பாற்றுவது. பிருத்விராஜின் கௌரவ தோற்றம் ஜிலீரென்று குளுமை. வித்யாசாகரின் பாட்ல்களில் ‘வா! வா! என் தேவதையே’வும், அதன் சோக பதிப்பான ‘மூங்கில் விட்டு..’ பாடலும் மட்டுமே தேறுகின்றன. பெண்ணை பெற்றவர்களுக்கும், பெண் பிள்ளை வேண்டும் என்று ஏங்கும் என்னை போன்ற கணவர்களுக்கு இந்த படம் ரொம்ப பிடிக்கும், ஆனால் சராசரி ரசிகனாக பார்த்தால் படம் ‘டப்பா’. - {oshits} வாசகர்கள் இந்த பதிவை படித்துள்ளனர்.