சமீப காலமாக மாலை நேரங்களில் வேலை செய்யும்போது பின்னணியில் தமிழ் நாடகங்களை போட்டுக்கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் நாடங்கள் தீர்ந்துவிட, வசனங்களுக்கு பஞ்சமில்லாத தமிழ் படங்களை தேடிப்பிடித்த் போட்டுக்கொண்டிருந்தேன். அந்த வகையில் நான் மீண்டும் விசு படங்களை கேட்க ஆரம்பித்தேன். விசு prime time-ல் இருந்தபோது அவர் படங்களை 'அரத பழசான மேடை நாடகங்கள் ','பிற்போக்கான சினிமா யுக்தி ' என்று நானே நிறைய முறை கேலி செய்திருக்கிறேன்.
ஆனால் இம்முறை கேட்டபோது அவரது எண்ணங்கள் எவ்வளவு முற்போக்கானவை, சமூகத்துக்கு உகந்த கருத்துக்கள் என பாராட்ட தோன்றியது. சமூகம் என்பது குடும்பங்களின் தொகுப்பே.. அதனால் சமூகத்துக்கான அறிவுறைகள் முதலில் குடும்பத்துக்கு தான் தேவை என்று அவர் கருதியதாலோ என்னவோ, ஒரு குடும்பத்துக்குள் என்னவெல்லாம் பிரச்சனைகள் வரும் என்று தோன்றியதை எல்லாம் அழகாக திரைக்கதை ஆக்கியிருக்கிறார். பல கதைகள் இப்போதும் relevant ஆக உள்ளது. குடும்ப பிரச்சனைகள் என்றுமே evergreen தானே?
அவரது படங்களில் இதுவரை பார்த்தவைகளில் எனக்கு மிக பிடித்தவை - ஒரு புதிய சகாப்தம், சகலகலா சம்பந்தி (இவை இரண்டும் விதவை மறுமணத்தை பற்றி இருவேறு திரைக்கதைகளில் சொன்னவை), சதுரங்கம், திருமதி ஒரு வெகுமதி (இவை இரண்டும் மனைவியின் பேராசை எப்படி மணவாழ்க்கையை சிதைக்கிறது என்று சொன்னது), பெண்மணி அவள் கண்மணி (மாமியார் மருமகள் பிரச்சனையில் பல்வேறு வகைகள் உள்ளதை காட்டியிருப்பார்), சம்சாரம் அது மின்சாரம் (classic).. சிதம்பர ரகசியம், ராஜதந்திரம் ஆகியவற்றில் கிரைம் கதைகளை கையாண்டிருக்கிறார்.
விசுவின் படங்களின் DVD-களை சேர்த்துவைத்து அதை என் பிள்ளை ஆதி 25 வருடங்கள் கழித்து பார்த்தாலும் அவனுக்கும் relevant ஆக இருக்கும் போல..