சில நாட்களுக்கு முன்பு எனது நண்பனை சந்திக்கப் போனபோது அவனிடம் "என்னடா? பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்து முடித்துவிட்டாயா?" என்று கேட்டேன். அதற்கு அவன் இன்னும் படிக்கவில்லை என்று சொன்னான். அப்போது உடனிருந்த மற்றொருவர் அதையெல்லாம் படித்து என்ன ஆகப்போகிறது? என்று கேட்டார். மேலும் நீங்க கூட தான் அந்த புத்தகத்தை படிச்சிருக்கீங்க... என்ன கிடைச்சது? என்றும் கேட்டார். இது விளையாட்டாகவோ அல்லது குதற்கத்துக்காகவோ கேட்கப்பட்ட கேள்வியாகவே இருக்கட்டும் ஆனால் ஒரு ஆபத்தான கேள்வி.
பழங்காலத்தில் ஒரு சமுதாயத்தை அடிமைப்படுத்தவேண்டும் என்றால் முதலில் அவர்களது கோவில்களையும், நூலகங்களையும் தான் அழிப்பார்களாம். அவர்களது பழமையிலிருந்து அவர்களை துண்டிப்பதே அந்த சமுதாயத்தை அடிமைப்படுத்த செய்யப்படும் முதல் முயற்சி ஆகும். ஒன்றிரண்டு தலைமுறைகளுக்கப்புறம் அந்த சமுதாயம் தனது அருமை பெருமைகளை அறியாமல் அடிமைகளாகவேவளர்ந்துவிடும். எந்த ஒரு சமுதாயம் தங்களது முந்தைய பழம்பெருமைகளை மறக்கிறதோ அந்த சமுதாயம் தன்னுடைய சுயமரியாதையை இழந்து விரைவில் அடிமைப்படும். நமது இந்திய சமுதாயமும் இப்படி தனது சுயத்தை இழந்ததால் தான் இன்னும் அடிமையாக இருக்கிறது.
வரலாறு பாடங்கள் எப்போது கேலிக்குறியவையாகவும், மதிப்பெண் கூட்டும் பாடமாகவும் மாறியதோ அன்றே அது கவலைக்குரிய விஷயமாக மாறிப்போனது. ஆமாம் வரலாற்றை படித்து என்ன கிழிக்கப்போகொறோம் என்று எண்ண ஆரம்பித்ததே ஒரு வியாதி தான். இன்று எந்த கண்டுபிடிப்பையெல்லாம் எல்லாம் பார்த்து வாய்பிளக்கிறோமோ அவை எல்லாம் நம் முன்னோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏட்டுச்சுவடியில் எழுதிவைத்துவிட்டு போய்விட்டார்கள்....
கிகாபைட்.. டெர்ராபைட் - ஐ பார்த்து வாயை பிளக்கும் நமக்கு நமது தமிழ் முன்னோர்கள் 1/2323824530227200000000 ≈ 4.30325e-22 தேர்த்துகள் வரை வகுத்துவைத்த பெருமை அறிந்தோமா?
நாசா விஞ்ஞானிகள் கிரகங்கள் ஒன்பது என்று "அறிவியல்பூர்வமாக" கண்டுபிடிக்கும் முன்பே நாம் நவகிரகங்கள், அவற்றில் ஒன்று கேது - Shadow Planet, என்று திண்ணை பள்ளிக்கூடத்திலேயே சொல்லிக்கொடுத்திருக்கிறார்களே?
இவை எல்லாம் ஆயிரக்கணக்கான உதாரணங்களிலிருந்து வெறும் இரண்டு மட்டும் தான். நமது பழமையை, Legacy-ஐ தெரிந்துக்கொண்டால், நம் இனம் மீதும், நம் மீதும் நமக்கே ஒரு மரியாதை தோன்றும். இல்லையென்றால் நாம் வெள்ளைக்காரன் போடும் எச்சில் துண்டுக்கு வாலாட்டும் நாய்களாகவே சுயமரியாதை இல்லாது மாண்டுபோவோம்.