வருடாவருடம் சென்னையில் நடந்து வரும் புத்தக கண்காட்சியை பற்றி அறிந்திருந்தாலும், இந்த வருடம் தான் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் ஆங்கிலோ இந்தியன் பள்ளியின் வளாகத்தில் அம்சமாக நடைபெற்ற இந்த கண்காட்சியை பார்க்க ஒரு நாள் பத்தாது என்று ஏற்கனவே எனக்கு எச்சரிக்கப்பட்டது. என்னால் 2-3 முறை எல்லா வரமுடியாது, எனவே ஒரே முறை ஆனால் ரொம்ப நேரம் இருப்பது போல போகவேண்டும் என்று முடிவு செய்து, பொங்கல் தினத்தன்று போனேன். உண்மையிலேயே திக்குமுக்காடிப்போனேன். கிட்டத்தட்ட 400 ஸ்டால்கள், லட்சக்கணக்கான புத்தகங்கள், ஒட்டு மொத்தமாக 8 லட்சம் பார்வையாளர்கள் என எல்லாமே கொஞ்சம் ‘மெகா’வாக இருந்தது. இருப்பினும் என்னை அதிகம் சந்தோஷப்படுத்தியது என்னவென்றால் இருந்த ஸ்டாலில் கிட்டத்தட்ட 80% கடைகள் நல்ல தமிழ் புத்தகங்களை விற்றதே. தமிழ்நாட்டில் இத்தனை பதிப்பகங்களா? தமிழில் இவ்வளவு புத்தகங்களா என்று வியக்க வைத்தது. ஸ்டால் வைத்திருந்தவர்கள் அனைவரும் கிரெடிட் கார்ட் வாங்கும் வசதி வைத்திருந்தால் நான் இன்னும் அதிகமாக வாங்கி இருப்பேன். நான் வாங்கிய புத்தகங்கள் என்னென்ன?
எழுத்தாளர்: அனுஷா வெங்கடேஷ்
காவிரியின் மைந்தன் - 1, 2 & 3 (பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி)
எழுத்தாளர்: யத்தன்னபூடி சுலோசனாராணி
முள்பாதை - 1 & 2
எழுத்தாளர்: சோ
சரஸ்வதியின் சபதம்
எழுத்தாளர்: எண்டமூரி விரேந்திரநாத்
துளசிதளம்
எழுத்தாளர்: இயக்குநர் மகேந்திரன்
அழகிய தவறு (நாவல்)
எழுத்தாளர்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
1. அலை ஓசை
2. கள்வனின் காதலி
3. கணையாழியின் கதை
எழுத்தாளர்: சாண்டில்யன்
யவன் ராணி - 1 & 2
எழுத்தாளர்: ப்ரியா கல்யாணராமன்
ஜாக்கிரதை வயது 16
எழுத்தாளர்: அகிலன்
பாவை விளக்கு
எழுத்தாளர்: சுஜாதா
கொலையுதிர் காலம்
எழுத்தாளர்: சேத்தன் பகத்
ஒன் நைட் அட் கால் செண்டர்
எழுத்தாளர்: மற்றவை
1. பாரதியார் 100 துணுக்குகள்
2. இளையராஜா 100 துணுக்குகள்
3. இந்திய பிரிவினை
4. கி.மு / கி.பி
வருத்தம் என்னவென்றால் ஜெயகாந்தனின் பல புத்தகங்கள் கிடைக்கவில்லை. அவரது பாப்புலரான புத்தகங்களான “சில நேரங்களில் சில மனிதர்கள்”, “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்”, “ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்” மட்டுமே கிடைத்தன. இந்த புத்தக கண்காட்சியில் ஜெயகாந்தனின் புத்தகங்களை எல்லாம் சேகரிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் நடக்கவில்லை.