இந்த வாரம் மிக யதேச்சையாக மூன்று நல்ல படங்களை பார்க்க நேர்ந்தது. 7ம் அறிவு உட்பட மொத்தம் நான்கு படங்கள் பார்த்தபோதும் அதில் மூன்று முத்துகளாக அமைந்தது சந்தோஷம். கன்னட ராஜ்யோத்சவ தினத்தை முன்னிட்டு எங்கள் ஆஃபீஸில் கன்னட புத்தகங்கள், CD & DVD sales போட்டிருந்தார்கள். அதில் ‘இஜ்ஜோடு’ என்ற கன்னட படத்தின் DVD-ஐ வாங்கினேன் - மீரா ஜாஸ்மின் நடித்த படம் என்ற ஒரே காரணத்துக்காக. அனன்யா அக்கா ஞாபகப்படுத்தியதால் ’ப்ரணயம்’ என்ற மலையாளப் படத்தை பதிவிறக்கம் செய்துவைத்தேன். மற்றும் தமிழில் long due ஆன “வாகை சூட வா”. இது தவிர்த்து “7ம் அறிவு” பார்த்தோம். இதில் 7ம் அறிவு தவிர மீதி மூன்றும் நல்ல கவிதைகள். மூன்று படங்களும் மனதை தொட்ட படங்கள் என்றபோது emotionally drain செய்யாமல், நல்ல படங்களை பார்த்த திருப்தியை கொடுத்ததால் இந்த பதிவு.

Sadhurangamசில மாதங்களுக்கு முன்பு எனது பழைய பதிவுகளை திரும்பி பார்த்தபோது ஆர்வக்கோளாரில் குப்பை படங்களுக்கும், பாடல்களுக்கும் பதிவு எழுதி வீணடித்ததை நினைத்து, இனிமேல் (atleast இந்த வருடத்தில்) சினிமா குறித்த பதிவுகள் எழுதுவதில்லை என்று முடிவு செய்தப்புறம் தான் “தெய்வத்திருமகள்", “எங்கேயும் எப்போதும்" மற்றும் கரு. பழனியப்பனின் சமீபத்திய ரிலீஸ் “சதுரங்கம்" என வரிசையாக நல்ல தமிழ் படங்களாக பார்க்க நேர்கிறது. எனவே எனது கொள்கையை காற்றில் விட்டுவிட்டு இந்த படங்கள் பார்த்ததை எனது பதிவில் பதிவு செய்யவேண்டும் என்று தோன்றி எழுதப்பட்ட பதிவு இது. “பார்த்திபன் கனவு“ பெற்ற பெரும்வெற்றிக்கு பிறகு கரு. பழனியப்பன் - ஸ்ரீகாந்த் கூட்டணியில் உருவான “சதுரங்கம்“ கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு பிறகு வெளியாகியுள்ளது. இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக நேரடியாக டி.வியில் வெளியாகும் படம் என்ற “பெருமை“யை பெறும் என்று என்னை போன்ற சாதாரண ரசிகர்கள் பலரும் கைவிட்டுவிட்ட நிலையில், சற்றும் மனம் தளராமல் போராடி திரையில் வெளியிட்டிருக்கும் திரைப்படக்குழுவினருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

Audrey Hepburnஇந்த வருடம் ஆரம்பித்த போது மாதத்திற்கு பத்து பதிவுகள் வீதம் 120 பதிவுகள் போடவேண்டும் என்று ஒரு New Year resolution-ஏ போட்டிருந்தேன். ஆனால் கடந்த வருடத்தின் பாதி அளவை தாண்டுவதே பெரிய விஷயமாக இருக்கும் போல. அதுவும் சினிமா சாராத பதிவுகளாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதனால் தான் இம்முறை அதிகம் சினிமா பதிவுகள் வராதது. அதற்காக நான் படங்கள் பார்ப்பதை குறைத்துவிட்டேன் என்று அர்த்தமில்லை. சொல்லப்போனால் வழக்கத்தை விட கொஞ்சம் அதிகமாகவே பார்க்கிறேன். ஆனால் அதைப் பற்றி எழுதி பக்கங்களை நிரப்புவதில்லை. இந்த வருடம் எனது படம் பார்க்கும் விதம் கொஞ்சம் மாறி உள்ளது.

TrafficSurprisingly malayalam directors are now obsessed with short english names for the films and last year there was a deluge of movies like Thriller, Cocktail, Traffic, Anwar, Pranchiyettan and Saint, Living together etc. Also the malayalam movies witnessed a change in the patterns of malayalam movies made - urban, slick with stylish hollywood style visuals and of shorter duration which had found the groove with the new generation malayalam audiences. The success of 'Cocktail' and 'Traffic' testifies the same. When I read about good reviews of 'Cocktail' first followed by 'Traffic' at a later time, I unitentionally mixed up with the names. So I initiated the download of 'Traffic' thinking that it was 'Cocktail'. But I am not complaining because 'Traffic' was superior than any of the recent malayalam releases.

யுத்தம் செய்பொதுவாக எல்லோராலும் சிலாகிக்கப்பட்ட 2 மிஷ்கினின் படங்களை நான் பார்த்ததில்லை. அவரது முதல் படமான "சித்திரம் பேசுதடி" வெளியானபோது "தமிழ் சினிமாவை ரட்சிக்க இன்னொரு தெய்வம் வந்துவிட்டார்" என்று விமர்சகர்களெல்லாம் கொண்டாட, அதை நம்பி நான் "சித்திரம் பேசுதடி"யை ஆர்வத்தோடு பார்க்க - ஒரு மூன்றாம் தர கதையை வித்தியாசமான ஒளிப்பதிவாலும், புதுமுகங்களை மட்டுமே வைத்து எடுத்ததாலும், எளிதாக விமர்சகர்களை ஏமாற்றியிருந்தார் மிஷ்கின். அதற்கு அடுத்து வந்த "அஞ்சாதே"வை நான் பார்க்கவில்லை - காரணம் படத்தில் சில கற்பழிப்பு காட்சிகள் இருக்கிறது என்று எனது நண்பர்கள் எச்சரித்துவிட்டது தான். 'நந்தலாலா' எதோ காரணமாக தவறிப்போக, இப்போது 'யுத்தம் செய்' பார்த்தேன். மிஷ்கினின் முத்திரையான 'சிறு கதைகளம்" அதை வைத்து பின்னப்பட்ட திரைக்கதை என கொஞ்சம் சுவாரசியமாகவே போனது 'யுத்தம் செய்'.

No One Killed Jessica"Unfortunately law is not for justice, but merely a mechanism to settle disputes" - when I came across these lines in Michael Christon's "Disclosure", which I am reading now, I found them apt for the movie "No One Killed Jessica". It really takes so much of guts for a film maker to do a film of the subject that the public knew it to details and even for the film goers to watch the incidents that they know already. Rajkumar Gupta had put his best efforts to recreate the decade long emotional travails of Sabrina Lal who goes through the hell to see the murderers of her slain sister behind bars.

Click the image to read further”மன்”னார், “மதன”கோபால், “அம்பு”ஜாக்‌ஷி ஆகியோரிடையே நிகழும் உணர்ச்சிகரமான கண்ணாமூச்சி ஆட்டம் தான் “மன்மதன் அம்பு”. படத்தின் பேர் தான் கிளுகிளுப்பாக உள்ளது ஆனால் (ஆச்சரியமாக) இந்த கமல் படத்தில் முத்தங்கள் இல்லை, இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை... சொல்லப்போனால் நல்லதிரைக்கதையும் இல்லை. படத்தின் முதல் குழப்பம் - இதை உணர்ச்சிப்போராட்டமாக கொண்டுபோவதா இல்லை நகைச்சுவையாக கொண்டுபோவதா என்கிற தெளிவு இல்லாதது. இரண்டாவது குழப்பம் - கிட்டத்தட்ட “மின்சார கனவு” படத்தின் சாயல் எளிதில் முடிவை யூகிக்க வைப்பது. கமல் நல்ல நடிகர் என்பதில் ஐயமில்லை, ஆனால் திரைக்கதையாசிரியராக, (நிழல்) இயக்குநராக அவரது ரெண்டுங்கெட்டான் நிலையும் ஐயமில்லை. அதனால் “மன்மதன் அம்பு”வை பார்க்க உட்காரும்போதே சில இழுவைகளுக்கு மனதை தயார் படுத்திக்கொண்டே உட்கார்ந்தேன். எனினும் எதிர்பார்த்ததைவிட கூடுதல் இழுவை போட்டு கமல் தன்னை நிரூபித்துவிட்டார் என்றே சொல்லவேண்டும்.

Click the image to read furtherஆச்சரியமாக இந்த படத்தை பார்த்த பின்பு தான் தெரிந்தது அன்று நடிகர் விஷ்ணுவர்த்தனின் முதலாம் நினைவு அஞ்சலி என்று. ரொம்ப நாட்களாக இந்த படத்தை பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டு நேற்று தான் நிறைவேறியது. ஆனால் படம் பார்த்து முடிந்த பிறகு புதிதாக படம் பார்த்த திருப்தியே இல்லை. வெற்றிப்பெற்ற ஒரு படத்தை அப்படியே நகலெடுத்து சில காட்சிகளை இங்கும் அங்கும் மாற்றிப்போட்டு புதிய படம் என்று “படம் காட்டு”வதற்கு ஒரு தில் வேண்டும், ஒரு கேணையன் தயாரிப்பாளராக வேண்டும். எல்லாமே ஒருங்கிணைந்து அது நடந்தும் விட்டது - ஆப்தரக்‌ஷகாவில்.

Click the image to read furtherநான் முன்பே சொன்னது போல கரு.பழனியப்பனின் படத்தை ஆர்வமாக எதிர்பார்க்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். அவர் "பிரிவோம் சந்திப்போம்" படத்துக்கு அடுத்து தானே கதாநாயகனாக நடித்து இயக்குகிறார் என்று கேள்விப்பட்ட போது "இவரும் அடுத்த சீமான் ஆகிவிடுவாரோ?" என்று தோன்றியது. ஆனால் கடந்த வாரம் "மந்திரப் புன்னகை" படத்தை பார்த்தபோது அவர் நடிகராகவேண்டிய அவசியம் புரிந்தது. ஒவ்வொரு மனிதனும் ஒரு உலகம், எனவே ஒரு தனிமனிதனின் வித்தியாசமான உலகத்தை எட்டிப்பார்க்கிறோம் என்கிற முன்னுரையோடு ஆரம்பிக்கையிலேயே நம்மை ஒரு வழக்கத்துக்கு மாறான பயணத்தை கொடுக்கப்போகிறார் என்று தயாராகிவிடுகிறோம்.

நான் முன்பே சொன்னது போல கரு.பழனியப்பன் - வித்யாசாகர் கூட்டணிக்கு நான் எப்போதுமே கொஞ்சம் பாரபட்சமாக தான் இருப்பேன்.  சமீபத்தில் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த “மந்திர புன்னகை” பாடல்கள் இவர்களுடைய முந்தைய படைப்புகளான “பார்த்திபன் கனவு”, “சிவப்பதிகாரம்” மற்றும் “பிரிவோம் சந்திப்போம்” பாடல்களின் கால் பங்குக்கு கூட வரவில்லை என்றபோதும், இந்த மந்திர புன்னகையில் வந்த “சட்டச் சட சடவென...” பாடல் இனிமையானது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். பெங்களூருவில் தான் படம் வெளியாகவில்லை என்றால் இணையத்தில் கூட திருட்டு பதிப்பு வெளிவரவில்லை. ”கௌரவர்கள்”, “துரோகம்.. நடந்தது என்ன?”, “குற்றப்பிரிவு” என கேள்விப்படாத படம் எல்லாம் இணையத்தில் பதிவிறக்கத்துக்கு கிடைக்கிறது ஆனால் “மந்திரப் புன்னகை”யை யாரும் கண்டுக்கொள்ளாவே இல்லை. கலைஞர் தொலைகாட்சியில் ஒரு நள்ளிரவில் இந்தப் பாடலை ஒருமுறை பார்க்க நேர்ந்தது. அதிகம் மக்கள் கேட்டிராத இந்த பாடலை கேட்டுப்பாருங்கள்.  உங்களுக்கும் பிடிக்கும்.

Click the image to read furtherரக்தசரித்ரா - ராம் கோபால் வர்மாவின் படம் என்பதால் மட்டுமல்ல, ஆந்திராவின் பிரபல மந்திரி / ரவுடிகளின் உண்மைக்கதை என்பதாலும் பார்த்தேன். ஆனால் எனக்கு அதில் ஒன்றும் புதிதாக இருப்பது போல தெரியவில்லை. வழக்கமான 'B-Grade' மசாலா படம் போல தான் இருந்தது. நிஜ வாழ்க்கையில் இவ்வளவு வன்முறை இருந்ததா என்பது ஆச்சரியமே. எனது ஆந்திர நண்பர்களிடம் கேட்ட போது 'ராயலசீமா' பகுதிகளில் இத்தகைய வன்முறைகள் இருந்தன என்றார்கள். திரையில் வன்முறைக்கு புது இலக்கணம் வகுத்திருக்கிறார் ராம்கோபால் வர்மா. மெல்லிய இதயம் படைத்தவர்களுக்கு இந்தப்படம் ஒத்துவராது என்று முன்னமே அவர் எச்சரித்திருந்தது உண்மையே.

Endhiran

நான் சில மறந்துபோன காரணங்களுக்காக 'தளபதி'க்கு பிறகு ரஜினியின் படங்களை தியேட்டரில் பார்ப்பதில்லை என்று வைத்திருந்தேன். ஆனால் 'படையப்பா' வெளியானபோது எனது கல்லூரியின் கடைசி வருஷத்தில் இருந்தேன். எனவே நண்பர்களோடு கடைசி படமாக இருப்பதால் எனது கொள்கையை தளர்த்திக்கொண்டு சேலம் கே.எஸ் தியேட்டரில் நண்பர் குழாமோடு போனேன். படத்தில் ரஜினி அறிமுகமாகும் காட்சியில் படத்தை விட தியேட்டரில் இருந்த 'Mass Hysteria'வை மிகவும் ரசித்தேன். அதனால் நல்ல மசாலா படங்களை தியேட்டரில் பார்ப்பதில் எந்த தவறும் இல்லை என்ற மனநிலைக்கு வந்தேன். முத்து, சந்திரமுகி, குசேலன் ஆகிய (நல்ல) மலையாள படங்களின் மோசமான தமிழ் தழுவல்களை பார்க்கவே தவிர்த்து விட்டதால், அடுத்ததாக தியேட்டரில் பார்த்தது 'சிவாஜி'. மாயாஜாலில் படம் வெளியான இரண்டாவது நாளில் CTS கும்பாலோடு பார்த்தபோது IT இதயத்துக்குள்ளே உறங்கி கிடந்த தரை டிக்கெட்டுகள் தியேட்டரில் இறங்கி ஆடிய ஆட்டத்தை பார்த்தபோது எனக்கும் கால்கள் தானாக ஆட்டம் போட துவங்கின. 'எந்திரன்' வெளியானபோது நான் லண்டனில் இருந்தேன். சரி! ஊருக்கு சென்று சேலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். ஆனால் 'எந்திரன்' நாங்கள் பெங்களூரூவில் குடியேறிய பிறகு பார்த்த முதல் தமிழ் படமாக, பூட்டு சிங் வாழ்க்கையில் பார்த்த முதல் திரைப்படமாக மாறிவிட்டது.