காதல் வேதம் (தமிழ் கஜல்கள்)
90-களின் இறுதி இந்திய (ஹிந்தி) பாப் இசையின் முக்கிய காலக்கட்டம் என்று சொல்லலாம். அந்த சமயத்தில் Non Films எனப்படும் திரைப்படம் சாராத இசை வகை ஓரளவுக்கு பிரபலமாக விளங்கியது. திரைப்படத்தின் சூழலுக்கு ஏற்ப மட்டுமே இசையமைத்து ஒரு கட்டுக்குள் இருந்த இசையமைப்பாளர்களுக்கும், independent இசையமைப்பாளர்களுக்கும் ஒரு விடுதலையாக இருந்தது இந்த இந்திய பாப் இசை. எனினும் தெற்கில் இந்த பாப் முயற்சிகள் பெரிதாக நிகழவும் இல்லை & வெற்றி பெறவும் இல்லை. அந்த சமயத்தில் வெளிவந்த ஹரிஹரனின் கஜல் சார்ந்த ஆல்பமான ‘ஹல்கா நஷா (மெல்லிய மயக்கம்)’, ஹரிஹரனின் தெற்கத்திய மவுசை கணக்கில் கொண்டு ‘காதல் வேதம்’ என்ற பெயரிலும் வெளிவந்தது. அழகான உயிர்ப்புள்ள பாடல்கள் இருந்தபோதும் பெரிதாக ஹிட்டாகவில்லை. நேற்று அனீஸிடம் இருந்து அந்த ஆல்பத்தின் பாடல்களை பெற்றவுடன், இதை உங்களோடு பகிர்ந்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. இதோ இந்த ஆல்பத்தின் பாடல்கள் உங்களுக்காக...
Thirakkadha
Chitchor - really stealing
ஆனந்த தாண்டவம் (திரைப்படம்)
நேற்று மாலை சுஜாதாவின் ‘பிரிவோம் சந்திப்போம்’ நாவலின் இரண்டு பாகங்களையும் ஒரே மூச்சில் (பல நாட்களாக தான்) படித்து முடித்தேன். இந்த நாவல் ‘ஆனந்த தாண்டவம்’ என்ற பெயரில் படமாகிக்கொண்டு இருக்கிறது என்றும், இதில் சித்தார்த், தமன்னா, ருக்மிணி (’பொம்மலாட்டம்’ புகழ்) மற்றும் கிட்டி ஆகியோர் இதில் நடித்திருப்பதாக படித்து இருந்ததால் இம்முறை இந்த நாவலை படிக்கும் போது எனக்கு அந்தந்த முகங்களே முன்னின்றது. ‘ஆனந்த தாண்டவ’த்தின் நடிகர் நடிகையர் தேர்வை படித்தவுடன் எனக்கு தோன்றிய சில apprehensions இம்முறை விலகியது. குறிப்பாக ரத்னா கதாபாத்திரத்துக்கான ருக்மிணி ஒரு அற்புதமான தேர்வு. இந்த நாவலின் மிகச்சிறந்த கேரக்டர் என்று பார்த்தால் அது நிச்சயமாக இந்த ரத்னா கதாபாத்திரம் தான். அதனால் தான் நான் இந்த கதாபாத்திரத்துக்கான நடிகர் தேர்வை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த பெண்ணும் ஒரு NRI & நாட்டிய தாரகை ஆனதாலோ என்னவோ, she looked every inch of Rathna. ஒழுங்காக நடித்திருப்பின் இந்த starcast அற்புதமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்க கூடும். இந்த படத்தை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில், ஒரே பெயரில் வெளிவருகிறதாம்.
Disturbing movie rape scenes
A Wednesday
Arundathi
Pakal - noble intentions
Sorna Regai
Take a look at this serial on 'Rajshri' site. {oshits} reads for this retro article